Total Pageviews

Showing posts with label கலைஞர். Show all posts
Showing posts with label கலைஞர். Show all posts

Friday, 29 April 2011

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!


வடிவேலு வடிவேலு வடிவேலு .... இரவு பகல் என எந்த நேரமானாலும் எல்லாவித மக்களையும் சிரிக்க வைக்கும் டாக்டர். சின்ன குழந்தைகளின் நண்பன்.வயதான பெரியவர்களின் செல்ல மகன். நடுத்தர வயதினரின் அன்றாட சர்வைவல் பிரச்சனைகள தன் நகைச்சுவையால்  தற்காலிகமாக தள்ளி வைக்கும் தோழன். பொது எதிரி என எவரும் இல்லை. சிங்கமுத்து  போன்ற ஏமாற்றுகாரர்களிடம் ஏமாந்து போனதால் பொதுமக்களிடம் இன்னும் கொஞ்சம் அனுதாபமும் கூட. அவருடைய நகைச்சுவை கூட மற்றவர்களை அடித்து குரூர இன்பம் காணும் சைக்கோத்தனமானது அல்லது அவ்வகையான குரூரத்தை சிரிப்பு என்கிற பெயரில் அதை காண்பவர்களிடமும் அத்தகையான குரூர வக்கிர எண்ணத்தை வளர்க்கும் வகையிலான நகைச்சுவை அல்ல. அப்படிப்பட்ட வடிவேலு சமீபமாக அதிகமாக விமர்சனத்துக்கு ஆளானதன் காரணம் அரசியல். தமிழக அரசியல்.

அரசியல்வாதியும்,  ஹீரோ நடிகருமான விஜய்காந்தின் வீட்டின் அருகே தான் வடிவேலுவின் வீடும். சாதாரண கார் பார்க்கிங் சண்டை இப்போது அந்த ஹீரோவை சீரோ ஆக்கும் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டில் இருக்கும் சக நடிகன் வீட்டில் சண்டை போடுவதே தவறு. அதிலும் அந்த நடிகனின் மகள் மண்டையை உடைத்ததும் அப்பா நிலையில் இருந்த அந்த நடிகன் உடைந்து போனான். ஆவேசம் வரத்தானே செய்யும். பின்னே என்ன? சாதாரண குடிமகனாக இருந்தால் சாபம் விட்டு விட்டு போயிருப்பான். இவன் தான் புகழான நடிகனாயிற்றே. பேட்டி கொடுத்தான். "இதே விஜய்காந்தை நான் தேர்தலில் எதிர்து நின்று தோற்கடிப்பேன்". எல்லாம் முடிந்தது. காலம் ஓடியது. அவனும் அதை மறந்து விட்டான். ஆனால் பத்திரிக்கையாளன் மறப்பானா?

தேர்தல் வந்தது. ஓடிப்போய் அந்த நகைச்சுவை நடிகனிடம் ஞாபகமாய் கேட்டான். "விஜய்காந்தை எதிர்த்து தேர்தலில் நிற்பதாக சொன்னீர்கள். நிற்பீர்களா?" அதற்கு அந்த நடிகன் சொன்னான். "முதலில் அவர் தள்ளாடாமல் நிற்கட்டும். பின்னே அவரை எதிர்த்து நான் நிற்பதா வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்கிறேன்". விடுவார்களா பத்திரிக்கைகாரர்கள். இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வந்தது வினை. மீண்டும் அதே ஹீரோ நடிகரின் ரசிகர்களால் மிரட்டப்பட்டான்.

இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தது. இந்த நகைச்சுவை நடிகர் தீர்மானமாக ஒரு நிலையான முடிவை எடுத்தார். தனக்கும் பாதுகாப்பு வேண்டும். தன் எதிரியையும் வீழ்த்த வேண்டும்.

எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதில் ஆணித்தரமாக இருந்தார். திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து கலைஞரின் முன்னிலையில், மருத்துவர் ராமதாஸ், திருமா, தங்கபாலு, கொமுக பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர்வாண்டையார், சுபவீ அய்யா, ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் அது வரை யாரும் தொடாத பொருளை எடுத்து தன் கன்னிப்பேச்சை பேசப்பேச கூட்டம் ஆர்பரித்தது. மீடியாக்கள் கூர்ந்து கவனித்தன. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்ட காட்ட திமுக தலைமை மட்டும் தினமலர், தினமணி, ஜெயா தொலைக்காட்சி, துக்ளக் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கூட்டணியின் பிரதான நம்பிக்கை நட்சத்திரமான ஒரு அரசு சார்பு கழகம் ஆகியவை என்ன சொல்கின்றது என பார்த்தது. அப்பட்டமாக அவர்களின் பயத்தை தங்களின் வடிவேலுவின் மீதான விமர்சனம் வழியாக பார்த்தது திமுக. எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் கமிஷன் அவதூறு வழக்கு பதிவு செய்தது வடிவேலு மீது.

உடனே திமுக வடிவேலுவை தனக்கான பிரம்மாஸ்திரமாக பயன் படுத்திக்கொள்ள தீர்மானித்தது. வடிவேலுவும் அவதூறு வழக்கினால் துவண்டு போய் விடவில்லை. தன் எதிரியை கண்மூடித்தனமாக எதிர்க்க தொடங்கினார். மேடை போட்டு கொடுத்தது திமுக. முழங்கினார் வடிவேலு. வடிவேலு வெடிவேலுவாக மாறினார். திமுக தலைமை  ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் வடிவேலுவுக்கான பேச்சை கூர் தீட்டி கொடுத்தது. மக்களின் நாடி பிடித்து பேசினார் வடிவேலுவும். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியா? உடனே விஜய்காந்து இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக தன் படங்களில் சித்தரித்ததை பேசினார். 108 ஆம்புலன்ஸ் அந்த வழியே போனதா? உடனே அது பற்றி விவரித்தார். பள்ளி குழந்தைகளை கண்டால் வாரம் 5 முட்டை போடுவதை பேசினார். காவடி தூக்கி செல்லும் பக்தர்களை கண்டால் அவர்கள் தாளத்துக்கு ஆடினார்.

இங்கே ஒன்று மட்டும் நன்றாக கவனிக்க வேண்டும். காசுக்கு மாரடித்தல் இப்படி அடிக்க முடியாது. எடுத்த காரியம் ஜெயம் ஆக வேண்டுமெனில் அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை வடிவேலு நன்கு அறிந்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் எம் ஜி ஆருக்கு அடுத்தபடியாக கூட்டம் அலைமோதியதை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தினமணியில் அரைப்பக்க கட்டுரையாக வடித்தார்.  தேர்தல் நாள் முடியும் வரை தன் உழைப்பை கொஞ்சமும் குறைத்துக்கொள்ளவே இல்லை. தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டு தன் கடமையை செய்தார். பின்னர் திமுக தலைவரை கண்டார். ஆசி வாங்கினார்.

ஆனால் திரையுலகம் விக்கித்து நின்றது. ஒரு முன்னாள் நடிகர் சங்க தலைவர், ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தோ நீர்த்து போக வைத்தோ செய்திருந்த விஜய்காந்தையே இவர் எதிர்த்ததால் இவர் ஹீரோ ஆகிப்போனார். அந்த நடிகர் தன் மீது இப்படி கல் விழும் சொல்விழும் என நினைத்து பார்க்காமையால் சதா சர்வகாலமும் குடிக்க தொடங்கினார். போதையில் பேசுவது என்ன என தெரியாமல் உளற ஆரம்பித்தார். கடைசியில் அவர் காமடியனாகிப்போனார்.

அதன் பின்னர் நடந்தது தான் வேடிக்கை. வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார் என செய்திகள் வரத்தொடங்கின. பிரபு தேவா தன் படத்தில் இருந்து வடிவேலுவை கழட்டி விட்டார். அதற்கு காரணம் பெரியதாக தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லவே இல்லை. பிராமண சமூகத்தை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பிரபுதேவா இரு வழிகளிளும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அபிமானியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பது என்பது இயற்கையே. ஏனனில் ஜெயலலிதாவும் கர்நாடக நாடு. ஜெயாவும் பிராமண குலம். வடிவேலு என்ற தமிழன்  தன் இனத்தை சேர்ந்த தன் நாட்டை சேர்ந்த ஜெயாவின் வெற்றிக்கு ஆப்பு வைத்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

ஆனால் பிரச்சனை அதுவல்லை. தமிழர்களின் வியர்வை காசை மகாராஷ்டிராவில் முதலீடாக ஆக்கும் ரஜினி தான் இப்போதைய பிரச்சனை. ரஜினியை ஆரம்பம் முதலே நன்கு கவனித்து வந்தால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். கர்நாடககாரனுக்கு முழு ஆதரவும் தருவார். கர்நாடகாவில் இருந்து பிழைக்க தமிழ்நாடு வந்து நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாத நடிகை நடிகருக்கு கூட சின்ன சின்ன காட்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுத்து பிழைக்க வழி வகை செய்வார். போகட்டும். தன் கர்நாடக பாசம் இருக்க வேண்டியது தான். அதே போல தான் மனம் முடித்த பிராமண சமூகத்துக்கும் தன்னால் ஆன அத்தனை ஆதரவுகரத்தையும் நீட்டி முழங்குவார். போகட்டும். கூட வாழும் மனைவிக்கான ஜாதிப்பாசம் என்றே கூட வைத்துக்கொள்வோம்.

ஆனால் தான் நடிக்கும் "ராணா" படத்தில் இருந்து வடிவேலுவை நீக்க காரணம் என்ன? ஈகோ தான். ஒரு காமடி நடிகன் தன்னை போன்ற ஒரு  ஹீரோவை பூஜ்ஜியம் ஆக்கியது கண்டு பயம். ஏற்கனவே பாபா படம் தோல்வியில் முடிந்த போதும் அதன் பின்னர் வந்த சந்திரமுகி படம் ரஜினியின் எந்த வித பார்முலாவின் படியும் எடுக்கப்படாவிடினும் வடிவேலுவின் நகைச்சுவை தான் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதை பலரும் பத்திரிக்கையில் எழுதி விட்ட பிறகு, இப்போது விஜய்காந்தை வடிவேலு என்னும் தமிழன் பூஜ்ஜியம் ஆக்கிவிட்ட நிலையில் ராணா படத்தில் வடிவேலுவை வைத்திருக்க பயம் வந்து விட்டது அந்த மாஸ் ஹீரோ ரஜினிக்கு. தவிர  தேர்தல் நாள் வரை திமுக தலைமையோடும் திமுகவினரோடும் நெருக்கமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், பாட்ஷா படத்தின் போது ரஜினிக்கு ஜெயா சொல்ல முடியாத இன்னல் பல கொடுத்து இருந்தாலும் ரஜினியின் தாய்நாட்டு பாசம் மற்றும் தான் மணமுடித்த மனைவியின் ஜாதிப்பாசம் ஆகியவைகள் எப்போதுமே ரஜினி உள்ளுக்குள் ஒரு அதிமுக என்பதையே அவரை அதிகம் நெருங்கியவர்கள் உணர்ந்த ஒரு விஷயம். அது தேர்தல் தினத்து அன்று பத்திரிக்கையாளர்களின் பிளாஷ் வெளிச்சத்தில் வெட்ட வெளிச்சம் ஆகியது. அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவது தெரிந்து போனது. அதையே ஜெயா விடியில் திரும்ப திரும்ப காட்டி அன்றைக்கு ரஜினி ரசிகர்களிடம் வாக்கு கேட்ட நிகழ்வும் தேர்தல் கமிஷன் முன்னிலையிலேயே நடந்தது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு ஓட்டு போட்டாலும் தவறு இல்லை. ஆனால் ரஜினி தன் நடிப்பு திறனை இந்த இடத்தில் திமுக தலைமைக்கு காட்டியது தான் எரிச்சலின் உச்சகட்டம் திமுக தொண்டனுக்கு. "ஆமாம் நான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டேன்" என தைரியமாக சொல்ல கூடாது, அது தேர்தல் கமிஷன் விதி. ஆனால் திமுக தலைமையிடம் சென்று எதற்காக மன்றாட வேண்டும். இதோ கீழே இருக்கும் செய்தியை பாருங்கள்.

\\\\Superstar Rajinikanth has reportedly given an explanation to Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi on some television channels showing him voting for the AIADMK during the polling for Assembly elections on Wednesday.

When the top actor came to the Stella Maris College polling booth, lensmen literally chased him and even captured the visuals of Rajini doing his democratic duty. And some television channels aired the footage too, saying he voted for the ‘two leaves’, the symbol of the AIADMK.

This resulted in the Election Commission issuing a stern warning to the channels, saying “it is a poll violation and telecasting such a visual is a crime. Both the videographer and broadcaster will be punished”. Following this, the visuals were taken off from the air.

Meanwhile, Rajini, who met Karunanidhi during a special show of ‘Ponnar Sankar’, told the Chief Minister that the cameramen had insisted him to go for a ‘retake’ while pressing the EVM button and accidentally his hands pressed the two leaves symbol.

The DMK leadership seems to have accepted the explanation, with Karunanidhi exchanging pleasantries with the Superstar during the ‘Ponnar Sankar’ show.\\

இப்படி மன்றாட வேண்டிய அவசியம் என்ன ரஜினி என்னும் மாஸ் ஹீரோவுக்கு? பயம். திமுக வெற்றி பெற்றால் என்ன செய்வது என்கிற பயம். இந்த பயம் தேவையே இல்லாதது. அதற்காக திமுக என்ன உங்களை கடித்து குதறவா போகின்றது? அப்படி திமுகவுக்கு அஞ்சினால் பின்னர் எப்படி நீங்கள் மாஸ் ஹீரோ? அப்படி என்றால் ரோபோ படம் இயக்குனர் ஷங்கரால், தயாரிப்பாளர் கலாநிதிமாறனால், நடிகை ஐஸ்வர்யாவினால் மட்டுமே ஓடியது என்று ஒத்து கொள்கின்ரீகளா ரஜினி? அன்புமணி ராமதாசுக்கு பயந்து தானே சிகரட் பிடிப்பதை உங்கள் படத்தில் வைப்பதில்லை? உங்கள் மாஸ் ஹீரோத்தனம் உண்மை என்றால் அப்படி செய்திருக்க கூடாது தானே? சிகரட் பிடிப்பது குற்றம் என உண்மையிலேயே நீங்கள் உணர்ந்து அன்புமணி ராமதாஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை நீங்கள் நிஜமாகவே உணர்ந்து இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் அதை விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து உங்கள் வியாபாரம் மாத்திரம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிகரட்டை படங்களில் மாத்திரம் விட்ட நீங்கள் மாஸ் ஹீரோ என இனி சொல்லிக்கொள்ள வேண்டாம்.

இதோ இன்று வடிவேலு திமுக தலைவரை சந்தித்து விட்டு வரும் போது கேட்ட கேள்வி ஒன்றில் \\ ராணா படமாக இருக்கட்டும், காணா  படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும்\\  என்றார். இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு மாஸ் ஹீரோ படத்தை பற்றி மீடியாவில் சொல்லி அது இன்று முழுவதும் எல்லா தொலைக்காட்சியிலும் மாறி மாறி ஒளிபரப்பு ஆகின்றது தலைப்பு செய்தியாக. மேலும் " எல்லாம் மே 13ம் தேதி மாறும். இங்க வந்து ஆசி வாங்கிட்டு போயிட்டாங்க" என்றார்.  ஆக வடிவேலு என்னும் தமிழ் பாம்பு, ரஜினி என்னும் கர்நாடக மற்றும் ஜாதி பற்றாளனை தீண்ட  லொக்கேஷன்  பார்த்து விட்டது.நேரம் குறித்து விட்டது.  ரஜினியே அந்த பயத்தில் தான்  இன்று உங்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தது. இனி தமிழன் மீது உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினால் வடிவேலு போன்ற பலதமிழ் நாகங்கள் உங்களை தீண்ட தயாராக இருக்கின்றது என்பதை சீக்கிரம் உணர்வீர்கள். நல்லபடியாக உடல்நிலையை கவனித்து கொண்டு வீடு வந்து சேருங்கள். சீக்கிரம் தமிழனோடு யுத்தம் செய்ய புதிய திரைக்கதையோடு வாருங்கள். எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்!

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!

Monday, 25 April 2011

சாய்பாபாவினால் பளீர் பகுத்தறிவாளர்கள் உதயம்!


சத்யசாய்பாபா இறந்து விட்டார் அல்லது மறைந்து விட்டார் அல்லது இறைவனடி சேர்ந்தார் அல்லது காக்காய் தூக்கிப்போய் விட்டது எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறந்து போயிருக்க கூடாது என்பதே நேற்று முதல் என் எண்ணமாக ஆகிவிட்டது. காரணம் தமிழ் வலைப்பதிவர்கள். நவதானியத்தை ஊற வைத்து அடுத்த நாள் பார்த்தால் முளை விட்டு பீறிட்டு கிளம்புமே அது போல பளீர்ன்னு ஒரு பகுத்தறிவு ஒளிப்பிழம்பு தமிழ் வலைப்பதிவர்கள் இடையே பீறிட்டு கிளம்பியிருக்கின்றது. போறவன் வர்ரவன் புண்ணாக்கு பருத்தி கொட்டை பதிவர்கள் அதாவாது கோவிகண்ணன், ஆர் கே சதீஷ்குமார் என பளீர் பகுத்தறிவாளர்களும் இடையே புகுந்து ஸ்ரீசாந்த் உலகக்கோப்பையை தூக்கிகிட்டு குதிப்பது போல கொண்டாட்டம்.அதாவது ஆதாம் ஏவாள் காலம் முதலே கடவுள் எதிர்ப்பு பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்  டாக்டர் ருத்ரன், தமிழ் ஓவியா ஆகிய பதிவர்ளை விட இந்த குஞ்சு குளுவான்களின் குதியாட்டம் டோனியே சும்மா இருக்கும் போது ஸ்ரீசாந்த் குதித்தது போலத்தான்.  (இன்னும் எங்க அண்ணன் உண்மை தமிழன் எழுதவில்லை,  ஜூவி இன்னும் வெளியாகவில்லை) இந்த கொடுக்கு எல்லாம்  இப்ப கிளம்பி இருக்குதுன்னா அதுக்கு ஒரே காரணம் சாய்பாபா மேலே இருக்கும் வெறுப்பு அல்லது பகுத்தறிவு இதல்லாம் காரணமில்லை.  அண்ட் ஒன்லி கலைஞர் தான். உலகமே வந்து தரிசித்துவிட்டு போன ஒரு ஆன்மீகவாதி கலைஞரை வீடு தேடி வந்து சந்தித்ததை சகித்துக்கொள்ளா ஜென்மங்கள் இந்த குஞ்சுகள். வேறு எந்த சிறப்பான காரணங்களும் கிடையவே கிடையாது. ஆக இந்த மட்டிலாவது இந்த குச்சுகளை பகுத்தறிவு பேச வைத்த கலைஞருக்கே ஒட்டு மொத்த கிரடிட்டும் போய் சேருகின்றது.

இதே ஜெயாவை வந்து சாய்பாபாவை சந்தித்து இருந்தாலோ அல்லது ஜெயா போய் சாய்பாபாவை சந்தித்து ஆசி வாங்கி இருந்தாலோ இந்த பளீர் பக்குத்தறிவாளர் கூட்டம் இப்போது சாய்பஜன் பாடிக்கொண்டு இருந்திருக்கும். பாவம் சாய்பாபாவுக்கு வட போச்சே!

இதிலே சதீஷ்குமார் தம்பி தான் என்ன எழுதுகிறோம்னு தெரியாமலே எழுதும் ஜென்மம்.

\\திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் ,மஞ்சள் துண்டு பெரியார் தம்பி,அண்ணாவின் நாத்திக நயாகரா...கடவுள் மறுப்பு சிங்கம் கலைஞர் ,தன் மகன் ஸ்டாலினை புட்டர்பர்த்திக்கு அனுப்பி வைத்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது....\\

தம்பி! கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வர 200 கோடி வரை நன்கொடையாக கொடுத்த ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதும் துணை முதல்வரை அனுப்புவதும் அதே தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் உனக்கு இத்தனை வலி குடுக்குதுன்னா ஓடிப்போய் அந்த தண்ணீரை உச்சா போயிட்டு வந்து உன் ஜெயா  மேல சத்தியம் பண்ணி இனி அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன் என சபதம்  போட்டிருந்தா நீ மனுஷன். சும்மா கலைஞர் ஸ்டாலின்னு பேசிகிட்டு இருப்பதை விட்டு விட்டு நீ குடிச்ச  குடிச்சுகிட்டு இருக்கும் தண்ணிக்காவது கொஞ்சம் நன்றி காட்டு.

\\சாய்பாபா எனும் ஒரு பிரபல மாயாஜால வித்தைகாரர் மரணம் என தொப்பி தொப்பி கலைஞரின் அனுதாபி பதிவு போட்டிருக்கிறார்...இந்த நாள் ஞாபகம் வெச்சுக்கோங்க நண்பரே....நான்வருங்காலத்தில் முக்கியமான நாளில், பரபரப்பு பதிவு போடுவேன்..அது இன்னும் தலைப்பு,உங்கள் தலைப்பை விட,கேவலமாக இருக்கும்.\\\

ஹி ஹி இது போல பல மிரட்டல் பார்த்தாச்சு. மிரட்டியவன் எல்லாருக்கும் கலைஞர் தான் சமாதி கட்டினார் என்பதை ஞாபகம் வச்சுக்கோ. முதல்ல உன் ஜாதகத்தை பார்த்துக்கோ. ஆயுள் ரேகை கெட்டியா இருக்குதான்னு பார்ட்துக்கோ. பின்ன நீ கலைஞர் மரணத்துக்கு அநாகரிக தலைப்பு வச்சு பதிவு போடுறியா இல்லாட்டி  வேண்டாம் விட்டுடு..

\\நாத்திகரான கலைஞர் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கினார்.கதவை சாத்திவிட்டு சாய்பாபாவின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்ய்டார்..என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்..\\ 

அடச்சே.... நீ கதவை மூடின இடத்திலே நடந்தது எல்லாம் சொல்லும் சோசியக்காரனா இருந்து தொலைச்சுட்டு போ. அதுக்காக நீ சொல்வது எல்லாம் உண்மை என நம்பும் அறிவிலிகள் தான் இங்க எல்லாரும் என நினைப்பது உன் முட்டாள் தனம் என்பதை உணர்.அப்படியே போயஸ் கார்டனில் மூடிய கதவுக்கு பின்னால நடக்கும் விஷயங்களை கொஞ்சம் வெத்தலைல மை போட்டு சொல்லேன்ப்பா சதீசு வெளக்கெண்ணெய்!

அடுத்து கோவிகண்ணன். பாவம் ஒரு 50 வயசு மனுசனா நடந்துக்குறாரா இந்த ஆளு.  சாய்பாபா பரட்டை தலையாம், குழந்தைகள் பார்த்தா பயந்துடுமாம். சரி இருந்து தொலைக்கட்டும். அதை யார் யார் பேசுவது என்று வரைமுறை இல்லியா? முதல்ல டாக்டர் ருத்ரன் கிட்டே இந்த ஆளை பிடிச்சுகிட்டு போய் காட்டனும். பகுத்தறிவு பேச ஆசை. ஆன்மீகம் பேச ஆசை. இலக்கியம் பேச ஆசை. சினிமா பேச ஆசை. சமூகம் பேச ஆசை. வலைப்பூ எழுத ஆசை, அதையும் நல்லா எழுத ஆசை... ஆனா சரியா வருவது என்னவோ கலைஞரை குடைவது மாத்திரமே. இவரு குத்துவதும் குடைவதும் கலைஞருக்கு ரீச் ஆகி அவரு இனிமே திருந்தி இதல்லாம் நடக்கும் காரியமா? போங்கய்யா போய் பேரன் பேத்தியை படிக்க வைய்யுங்க!

Tuesday, 15 March 2011

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். சட்டபேரவையில் லீவ் தீர்மானம் போட்டவரு ஆதரவாளரு சொல்றாரு!!!

லை

இந்த சதீஷ்குமார்ன்னு ஒரு பையன் தொல்லை தாங்கலைங்க. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். அதை சொல்றது யாருன்னு பாருங்க. ஆர்.கே.சதீஷ்குமார்ன்னு ஒரு நடுநிலைவாதின்னு முகமூடி போட்டுகிட்டு உளறி கொட்டும் அதிமுக பினாமி. நான் அதிமுகன்னு சொல்லு. இதத சொல்லு. சரின்னு கேட்டுக்கறேன். அது என்னய்யா அதிமுகன்னு சொல்லிக்க இத்தனை ஒரு வெட்கம்? அது என்ன பிராத்தல் கம்பனியா?

\\கலைஞர் தன் முதுமை வயதிலும் தன் மக்களுக்காக மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக போராடுவது வருத்தமாக இருக்கிறது.\\

இருக்காதா பின்ன? உன் தலைவிக்கு தான் குடும்பமே கிடையாதே. சசிகலா & பேமிலி தான் உங்க குடும்பம். அவங்க அடிச்ச கோடி எல்லாம் தான் சந்தி சிரிச்சுதே.

.\\பல தாத்தாக்கள் 70 வயதிலேயே கயித்துக்கட்டிலிலும்,திண்ணையிலும் சுருண்டு விடும் இக்காலத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி 6 வது முறையும் முதல்வராவேன் என குழந்தை போல அடம்பிடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...\\

உனக்கு எங்க வலிக்குது சாமி?

\\கடுமையான உழைப்பும்,சளைக்காமல் பதில் சொல்லவேண்டியதுமான பொறுப்பில் அமர்ந்து கொண்டு ,தன் இறுதிகாலம் வரை தமிழ் மக்களுக்காக உழைப்பேன்...என சுயநலம் இல்லாத அவரது மக்கள் சேவை மெய்சிலிர்க்க வைத்தாலும்,நடமாட முடியாத ஒரு தாத்தா மீண்டும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என துடிப்பது நமக்கு ரத்தக்கண்ணீரை வர வைக்கிறது..\\

நீ ரத்த வாத்திதான் எடேன். எங்களுக்கு என்னா வந்தது.

\\ஒபோதும் தாத்தா ..இதுவரை தோல்வியே அடையாத உங்கள் எம்.எல்.ஏ வரலாறு மாறிவிடபோகிறது...6 வது முறையும் முதல்வர் என்ற கனவு ,ஆசை நிராசை ஆகிவிட போகிறது....\\

இதுவரை 11 தேர்தல்ல ஆளானப்பட்ட தஞ்சை பரிசுத்தநாடாராலேயே புடுங்க முடியாததை நீங்க புடுங்க போறீங்களா? எனக்கு வாயாய சிருக்க முடியலை. பர்கூர்ல சுகவனம் என்கிற சித்தெறும்பு வச்சு நாங்க வறுத்து எடுத்தது பத்தாதா தம்பி?

\\என் அரசியல்வாழ்க்கையில் தமிழனுக்காக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் நான் 5 முறை முதல்வாராக இருந்தபோது சாதித்து விட்டேன்..இனி தமிழனுக்காக தமிழுக்காக செய்ய வேண்டிய தொண்டு எதுவும் இல்லை என அறிவித்து விட்டு அரசியல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.\\

இன்னும் இல்லை. அதிமுக, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியை நாட்டை விட்டு அனுப்பினால் தான் கலைஞரின் அரசியல் பொது வாழ்க்கை நிறைவுற்ற மாதிரின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க தம்பி சதீசு!

\\பல கோடி வசூல் செய்து .செந்தமிழ்மாநாடு நடத்திவிட்டீர்கள்....\\

ஆமா நீ வந்து பார்த்த அதை. வசூல் செஞ்சதை பார்த்த மாதிரி கிழிச்சுவிடுறியே!

\\ஈழத்தமிழர்களுக்கு பால் ஊற்றி விட்டீர்கள்...\\

நீங்க என்னா ஊத்துனீங்கன்னு கொஞ்சம் எடுத்துவுடவா?

\\ஸ்பெக்ட்ரம் மூலம் தமிழன் புகழ் உலகம் உள்ளளவும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...\\

வந்துட்டான்யா யோக்கியன். சொம்பை எடுத்து உள்ள வை. டான்சிராணி, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியும் அதன் ஜோடிபுறாவும் செய்தது எல்லாம் தமிழன் தலைநிமிர வைத்த நிகழ்சிகளா?

\\வாரிசுகளை கொண்டு வர தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என சொல்லி விட்டு மகனை துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்...\\

அதை பத்தி கவலையோ சந்தோஷமோ படவேண்டியது திமுககாரங்க நாங்க தானே. உனக்கு எங்க வலிக்குது?

\\சோனியாவின் காலில் விழுந்து ,அண்ணா வளர்த்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்...\\

கால்ல விழும் கலாச்சாரம் பத்தி யார் பேசுவதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?

சீ தூ.... நீ எல்லாம் எழுதினா ஒரு பயலும் கேட்கமாட்டான்னு நினைச்சியா? இனி உன் பதிவு எல்லாத்துக்கும் எதிர் பதிவு உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் ஜாக்கிரதை! சட்டசபையிலே உங்க தலைவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் கேட்டு தீர்மானம் கொண்டு வந்தீங்களே? நீங்க தானே அரசியலை விட்டே ஓடிப்போகனும் என்பதை ஏன் மறந்துவிட்டு பேசுகின்றாய் அரைவேக்காடு தம்ப்ரீரீரீ...