யாரும் தொடாத பொருளை தொடும் தைரியம் திமுககாரனுக்கு உண்டு. அங்கே உண்மை இருந்தால்....
கனிமொழி கைதா இல்லையா என பட்டி மன்றம் நடத்தும் என் அன்பு உண்மை தமிழன்களே, திமுகவின் கொடூர முகம் என புலிப்பாய்ச்சல் பாயும் கோவி கண்ணன் வகயறாக்களே, தினமலமே மற்றும் ஆசையாய் துடிக்கும் ஜீவி, ரிப்போர்டர்களே!
உங்கள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி விட்டாகி விட்டது. சம்மந்தபட்டவர்கள் எல்லோரும் கைதாகிவிட்ட நிலையில் கனிமொழி கைது ஏன் இன்னும் நடக்கவில்லை என கொந்தளித்து பேசும் உண்மை தமிழன் அண்ணே, உனக்கு பதில் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன? நீயாகவா எழுதுகின்றாய்? நீ வயிறு எரிச்சல் உள்ளவன். "அய்யோ எல்லோருக்கும் எல்லாமே கிடைக்குதே அப்பன் முருகா எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை" என பொறாமை தீயில் உழலும் உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நீயே ஜூவியை காபி பேஸ்ட் அடிக்கும் சாதாரண மனிதன். சினிமா உலகில் யார் யாரை வைத்து இருக்கின்றனர் என பேசும் ஒரு சாதாரண ஆள். உனக்கு அரசியல் ஆசை வந்ததே வயிறு எரிச்சல் மட்டுமே காரணம். உதாரணம் சொல்லவா?
===========================================
\\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\\..
ஒரு மாநில முதல்வர் இறந்து போனதுக்கு ஒரு ஆறுதல் அஞ்சலி பஸ் விடுகின்றார். அதாவது \\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\\\
இதில் நீங்கள் நன்றாக கவனிங்க வேண்டும்.
1. டோர்ஜி காண்டுவுக்கு 24 கோடி சொத்து இருக்கின்றது.
2. இந்தியாவின் 3 வது பணக்கார முதல்வர். (அனேகமாக கலைஞர் தான் முதல் பணக்கார முதல்வர் என்று மறை முகமாக கூட சொல்ல நினைட்து இருப்பார் போல)
3.அவருக்கு 4 மனைவிகள்
4. அவருக்கு 5 பிள்ளைகள்
. இதிலே ஹிட்டன் வயித்தெறிச்சல் தான் பிரதான எரிச்சல் அதாவது
5. இது எதுவுமே எனக்கு இல்லியே முருகா முருகா..
மேற்கண்ட அவரது பஸ்ஸில் எங்கேயாவது அஞ்சலி வாக்கியம் இருக்குதா? இல்லையே? அண்ணே, நீ இன்னும் 50 வருஷம் எழுதி கிட்டே இருந்தாலும் முன்னேற முடியாது அண்ணே! உனக்கு ஏன் டோண்ஜி காண்டு மேலே இத்தனை காண்டு? உன்னால சகிச்சுக்க முடியாது அண்ணே, ஒரு பொண்ணாட்டி வச்சிருக்கவனையே உன்னால ஏத்துக்க முடியாது. அதிலும் அந்த ஆள் 4 பொண்டாட்டி வச்சிருந்தா விட்டுடுவியா? உனக்கு உன்னை போல மொட்டை பையனா இருக்கனும், ஜெயா போல மொட்டை பொண்ணா இருக்கனும். அதான் பிடிக்கும். போண்ணே போ! இதிலே கனிமொழி சார்பா வாதாடின ராம்ஜெத்மலானி மேல உனக்கு கோவம் கோவமா வருது. உனக்கு இங்கிலீசும் தெரியாது. சட்டமும் தெரியாது. அந்த ஆள் என்ன சொன்னாருன்னு ஹிண்டு பேப்பர்ல படிச்சு தெரிஞ்சுக்கவும் முடியாத நிலை.
நாங்க என்ன சொன்னோம். சட்டப்படி நாங்க இந்த நிலையை எதிர் கொள்வோம் என சொன்னோம். சட்டம் யாருக்கு நல்லா தெரியுமோ அவங்க கிட்ட சொல்லி வாதாட வைப்பதில் என்ன தப்பு? சரி உன் பேச்சுக்கே வர்ரேன். கோவி கண்ணன் பேச்சுக்கே வர்ரேன். "கனிமொழி கலைஞர் டிவியின் சூத்திரதாரி. ஆனா கேஸ்ல சி பி ஐ என்ன சொல்லுச்சு? கலைஞர் டிவில தினமும் அவங்க தான் ஆட்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு தானே. எப்படி திடீர்ன்னு பணம் 240 கோடி வந்துச்சுன்னு தானே? எப்படி திடீர்ன்னு 240 கோடி வந்துச்சுன்னு கேட்க வேண்டிய ஆள் அமலாக்க துறை தானே தவிர ஸ்பெக்ரம் பாட்டியாலா நீதிமன்றம் இல்லைன்னு தானே ராம்ஜெத்மலானி வாதாடினாரு? அமலாக்க துறை என்ன கேஸ் போட்டாலும் அதை சந்திக்க தயார்ன்னு தானே நாங்க அதாவது கனிமொழி தரப்பு சொல்லுது. அது பொருளாதார குற்றப்பிரிவிலே தானே வரும். அங்க நாங்க பார்த்துக்கறோம். ஆனா 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ராஜா சம்மந்தப்பட்டது. அதுக்கு அந்த துறையின் மந்திரி "raja is the only person for all its responsibility"ன்னு தானே ராம்ஜெத்மலானி சொன்னாரு. உடனே இதை நேரிடை மொழிபெயர்பு செய்துவிட்டு நீங்க "கனிமொழியை காப்பாத்த ராஜா பலிகடா"ன்னு பீலா விட்டுகிட்டு இருக்கீங்க. ராஜா அடிப்படையிலே ஒரு வக்கீல். அவருக்கு இதல்லாம் தெரியும். இது எங்க உட்கட்சி பிரச்சனை. நீங்களே அன்றைக்கு ஜூவி சொன்னதா சொன்னீங்க, அதாவாது இடியாய் இறங்கிய அழகிரி"ன்னு அட்டை படம் போட்டு எழுதினீங்க. ஆக திமுக உட்கட்சி பிரச்ச்னை இதல்லாம். இங்க ராஜாவை காட்டி கொடுத்து கனிமொழியை காப்பாத்தினதா பீலா விட்டுகிட்டு திரியுறீங்க. சட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அதன் வாத பிரதிவாதம் பத்தி எதாவது தெரியுமா?
நீங்க எவனும் யோக்கிய சிகாமணி இல்லை. முதல்ல உங்க மூஞ்சியை கண்ணாடில பார்த்துகுங்க. தான் போட்ட கையெழுத்து தன்னுது இல்லைன்னு ஜெ சொன்னப்ப அதிமுகவின் அகோர முகம்னு கோவிகண்ணன் எழுதவில்லை. அதே போல குழந்தைவேலு அமைச்சராக அதிமுகவிலே இருந்த போது கலைஞரை பற்றி அவதூறு பேசிய போது கலைஞர் தொடை தட்டி சவால் எழுப்பிய போது அதிமுகவின் கோர முகம் என எந்த பன்னாடையும் எழுதவில்லை. அதல்லாம் அந்த பன்னாடைகளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இதே சட்டரீதியாக எல்லாம் நாங்கள் செய்யும் போது கோவிகண்ணன் என்னும் பதிவருக்கு திமுகவின் கோர முகம் கண்ணுக்கு தெரியுதா? இன்னும் எத்தனை கோரமுகம் காண்பிக்க வேண்டும் அதிமுகவுக்கு? அதல்லாம் கண்ணுக்கு தெரியாது உங்களுக்கு. ஆனால் சதா சர்வகாலமும் கனிமொழியை பற்றி மட்டுமே உங்கள் நினைவுகள். அண்ணன் உண்மை தமிழன் மொட்டை பையன். ஆனா கோவிகண்ணன் பேரன் பேத்தி எடுத்த ஒரு பழுத்த ஆனால் மூளை வளர்சி இல்லாத திமுக எதிர்பு ஆள். மூளை வளர்சிக்கும் பேரன் பேத்தி எடுப்பதற்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாவிடினும் நான் சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கின்றது. கோவிகண்ணனின் அகோர முகம் என நான் தலைப்பு வைத்ததால் "தனிமனித தாக்குதல்" என அவருடைய பிசிக் வைத்து நான் சொல்வதாக நினைத்து கொண்டால் மன்னிக்கவும் .. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் நான் அந்த வகையில் சொல்லவில்லை. அப்படி நினைத்து கொண்டால் நானும் இந்த வலைப்பூவும் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்கின்றேன்.
இதோ இரு தரப்பு வாதமும் கேட்ட பின்னர் மே 14க்கு ஒத்தி வைக்கப்பட்டது தீர்ப்பு. அதனால் ஜூவி முதல் அதை காப்பி அடிக்கும் உ. தமிழன், சதீச்சு எல்லாரும் மாட்டு சாணியை ஒரு பக்கெட்ல கரைத்து வைத்து கொண்டு தன் தலையிலேயே உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என சொல்லிகொண்டு தலையில் ஊற்றி கொண்டு பிஞ்ச வெளக்குமாறால் அடித்து கொள்ளுங்கள். ஏனனில் திமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். பல சட்ட மேதைகளுக்கு கூட பாடம் புகட்டும் வித்தகர்கள் உள்ள இடம்.
சம்மந்தபட்ட எல்லோரும் கைது ஏன் கனிமொழி மாத்திரம் கைது இல்லை என சொல்லும் கோவிகண்ணா! சி பி ஐ வாதத்தில் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் பேசியது கனிமொழி என சொன்னது. அப்படியெனில் நீராராடியா ஏன் கைது செய்யப்படவில்லை என உண்மைதமிழனோ, ஜூவியோ, ரிப்போர்டரோ கேட்கவில்லை. சம்மந்தபட்ட ரத்தன் டாட்டா ஏன் கைது செய்யபடவில்லை? சம்மந்த்பட்ட அனிலம்பானி ஏன் கைது செய்யப்படவில்லை? கேட்டால் உடனே அவர்கள் தொழிலதிபர்கள். அவர்களால் வேலை வாய்பும் அரசுக்கு வரியும் வருகின்றது என சொல்வீர்கள். ஆனால் அப்படி வரி செலுத்தினால் மட்டும் யோ க்கியன் பட்டம் தானாக வந்து ஒட்டி கொள்ளுமா?
உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் இதன் உரிமையாளர் ஒரு பொருளாதார குற்றத்தில் கடந்த ஏழு வருடமாக சிறையில் இருக்கின்றார். ஆனால் அவரது நிறுவனமும் அதன் வேலையாட்களும் அதனால் பாதிக்கப்படவும் இல்லை. கொரிய அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலும் இல்லை. அப்படி இருக்க ரத்தன் டாட்டாவை உள்ளே வைய்யுங்கள், அனில் அம்பானியை உள்ளே வையுங்கள். அதான் சி பி ஐ நீதிமன்றம் சொல்லிவிட்டதே? யார் எந்த பதவியில் இருந்தாலும் விட மாட்டோம் என. அத்தனை ஏன் அவர்கள் ஆசைநாயகி நீராராடியா கூட விசாரணை வளையம் மட்டுமே. ஆனால் கைது இல்லை என்றால் கனிமொழி கைது என்பது அரசியல் சம்மந்தப்பட்டது தானே உண்மை தமிழன் அண்ணே, நான் இங்கே கோவிகண்ணனை ஊறுகாய்க்கு கூட கூப்பிடவில்லை. ஏனனில் அவருக்கே ஏகப்பட்ட குழப்பம். தான் ஒரு இந்துத்துவாவா அல்லது நாத்திகனா, ஆத்திகனா என ஏகப்பட்ட குழப்பம். அவர் திமுக எதிர்நிலையில் இருப்பது மட்டுமே ஒரே குழப்பம் இல்லாத நிலை.
அனால் உண்மைதமிழன் நீங்கள் ஜூவியின் கட்டுரகளை பிரசுரித்து எனக்கு 500 ஆகியது 1000 ஆகியது பதிவு என ஹிட் சேர்க்கும் ஆள். அதாவது ஸ்டாம்ப் கலக்ஷன் சின்ன பையன் போலே. யாருக்கும் எந்த ஏழைகளுக்கும் பயன்படாத அந்த ஸ்டாம்ப் கலக்சனுக்கும் உங்களின் ஹிட்டுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லை. அது உங்களுக்கு பயன் படுகின்றதா என பாருங்கள் முதலில்...
போங்க போங்க போய் அடுத்த வேலை இருந்தால் பார்க்கவும். இனி கனிமொழி பற்றி எல்லாம் பேசி எங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம்!
