Total Pageviews

Sunday 27 March 2011

திமுகவில் காமடியன் கூட ஹீரோ, அதிமுகவில் ஹீரோக்கள் கூட காமடியன்கள்....



திமுக, அதன் தலைவர் கலைஞர் இவர்களிடம் கூட்டணி வைத்து கொள்ளும் கூட்டணிக்கட்சியினருக்கு கிடைக்கும் மரியாதைகளும் மதிப்புகளும் எல்லோருக்கும் நன்கு புரியும். ஆனால் அதே போல அதிமுகவில் கூட்டணி அமைத்தவர்களின் கதி என்ன என்று நினைத்துப்பாருங்கள். முதலில் அதிமுகவில் காமடியன்கள் ஆன ஹீரோக்கள்  பற்றிய ஒரு பார்வை.

கார்த்திக்: இவர் சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவர் இவருடைய தந்தை முத்துராமனைப்போலவே. கள்ளர் இனத்தை சேர்ந்தவராயினும் முத்துராமன் இவர் அளவுக்கு அரசியலில் ஈடுபாடோ, ஆர்வமோ, சாதிப்பற்றோ கொண்டிருக்கவில்லை. அதே போலத்தான் கார்த்திக்கும் இருந்தார். அதே நேரத்தில் தன்னுடைய சில பல கெட்ட பழக்கங்களினால் இவர் சினிமாவை விட்டு தொலைந்து போக இருந்த நேரத்தில் அவரது சாதிபலம் கொஞ்சம் தெம்பை கொடுக்க இவர் திடீரென, நேதாஜி ஆரம்பித்த பார்வர்டு பிளாக் கட்சியை தமிழகத்தில் வேறூன்ற செய்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் இன ஆதரவோடு அந்த கட்சியில் மாநில தலைவராக ஆக்கப்பட்டு திடீரென உயர்ந்தார். ஆனால் அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டிகளும் அவரது நடையுடை பாவனைகளும், கட்சி தலைவராக இருப்பதற்கான எந்த ஒரு தகுதியற்ற தனமையை கொடுத்தாலும் அவரது சாதி மக்கள் தங்களுக்கு என ஒரு யாவரும் அறிந்த தலைவர் வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் சகித்து கொண்டனர். சென்ற முறை அவர் தொகுதி பங்கீடுக்கு ஜெவுடன் பேசிவிட்டு பின்னர் வந்து (அவருடைய வாய்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்) "என்னது அந்தம்மா, ஸ்டுபிட், கெட்லாஸ்ட்ன்னு எல்லாம் கத்துறாங்க. இட்ஸ் டூ பேட்" என சொல்லி வெளியே வந்தது முதல் அவர் காமடியனாக ஆக்கப்பட்டார். அதற்கு தகுந்தது போலவே ஜூவியும் ரிப்போர்டரும் அவரை ஊதி ஊதி பெரியதாக்கி அவர் காமடி பேட்டிகளை வாங்கி பிரசுரித்து அவரை ஒரு கீழ்தரமான இடத்துக்கு கொண்டு சென்றன. அதே போல இந்த முறையும் " வாட் ஈஸ் திஸ். நாங்க தினமும் போய் காலை முதல் மாலை சாயங்காலம் வரை வெயிட் பண்ணிகிட்டு இருந்தும் அந்தம்மா எங்களை வந்து கூட பார்க்கலை. இதல்லாம் நல்லால்லை. மானம் வெட்கம் இருந்தா அடுத்த தேர்தல் வரை அங்க நான் போகமாட்டேன்" என பேட்டி கொடுத்து முழுநேர காமடியன் ஆனார்.

விஜய்: இவர் நடித்த சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதோடு மட்டுமல்ல இணையத்தில் இவரை போல ஒரு கைப்புள்ளயை இது வரை யாரும் பார்த்ததில்லை என்கிற அளவுக்கு இவர் காமடியன். அத்தோடு விட்டாரா? காவலன் படம் வெளியாவதில் சிக்கல் இருந்ததாம். உடனே அவருடைய அப்பாவுக்கு ரத்தம் கொதித்து உடனே தன் மகனின் ரசிககுஞ்சுகளை கூப்பிட்டு அரசியல் ஆசைகாட்டி விஜய்க்கும் ஆசை காட்டி... அது வரை நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு சந்திரசேக்ர் ஜெவை பார்த்து விட்டு வந்தது முதல் தான் விஜய் காமடியனாக ஆனார். பதினைந்து சீட், பத்து சீட் கடைசியாக 3 சீட் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் எதும் இல்லை சும்மா நீங்க வந்து ஊராவூருக்கு பிரச்சாரம் செய்தால் போதும் என்கிற நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு இன்று விஜய் பெயரை கேட்டாலே வயிற்றில் இருக்கும் பிள்ளை கூட சிரிக்கும் அளவு காமடியனாக ஆகிப்போனார். நடுவே நாகையில் மீனவர்களை காப்பாற்ற ஒரு மீட்டிங் போட்டு அது சொதப்பி அவர் மைக் சரியில்லை என்று பாதியிலே கிளம்பி போய் திரும்பவும் சந்திரசேகர் மைக்கை சரி செய்து ஓடிப்போய் கூப்பிட்டு வந்து ஒரு வழியாக மீனவர் பிரச்சினை தீர்ந்தது. இதோ இன்று மீனவர்கள் செல்வ செழிப்புடன் மாடமாளிகையுடன் சர்வ சவுக்கியமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து தமிழக மக்கள் தங்கள் வீட்டில் விஜய் என்று ஏதாவது குழந்தைக்கு பெயர் இருந்தால் கூட அழித்து விட்டு மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். காரணம் இவர் ஜெயாவை சந்தித்ததன் விளைவு இதல்லாம். இன்று தமிழக அரசியலில் மிகச்சிறந்த காமடியன் ரேசில் இவருக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

ராமராஜன்: இவருக்கு கரகாட்டகாரனில் ஆரம்பித்த சுக்கிரதெசை அவர் ஜெ கட்சியில் சேரும் வரை இருந்தது. பின்னர் தான் நிரந்தர சனி பிடித்தது அவருக்கு. ஜெ அதிமுகவுக்கு எப்படி நிரந்தர பொதுச்செயலாளரோ அது போல சனிபகவான் ராமராஜன் கூட நிரந்தரமாக ஒண்டு குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். சோத்துக்கே சிங்கி அடிப்பதாக ஒரு பத்திரிக்கை கூட பேட்டி எடுத்து எழுதியது. இவரைப்போல கதாநாயகனும் இல்லை. இவரைப்போல காமடியனும் அரசியலில் இல்லை. இப்போது பிரச்சாரத்துக்கு போக முடியாத படி ஒரு சாலை விபத்தில் மாட்டி கொண்டு விட்டார். இல்லாவிடில் இவர் பிரச்சாரத்தினால் 234 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். (என்று நினைத்து கொண்டிருக்கின்றார்.. அப்படியெனில் அவர் காமடியனா அல்லது கதாநாயகனா?

விஜய்காந்த்: இவர் ஆரம்பத்தில் சும்மா தான் இருந்தார். பின்னர் திரைப்பட சங்கத்து செயலாளர் பொறுப்பு வந்ததும் ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்துகள் இவரிடம் வர அந்த தலைமை போதை தலைக்கேற சுற்றி இருப்பவர்கள் இவருக்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட அந்த நேரத்தில் ரமணா படம் நல்ல கதையம்சத்துடன் வெற்றியும் கொடுக்க இவருக்கு அரசியல் ஆசை வந்து தொலைத்தது. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது போல நெடுஞ்சாலைத்துறையும் ஒரு மேம்பாலத்துக்கு இவருடைய திருமண மண்டபத்தில் கைவைக்க உடனே கட்சி ஆரம்பித்து விட்டார்.

அதிலே அவரது ஆரம்பகால நிலைப்பாடுகள் என்னவோ நன்றாகத்தான் இருந்த்து என்றாலும் பின்னர் விருத்தாசலத்திலே அவர் நின்று வென்று அதன் பின்னர் நடந்தவைகள் தான் அவரை காமடியன் ஆக்கின. அவரது புத்திசாலித்தன்மே அவர் பாமக கோட்டை என கருத்தப்பட்ட விருந்தாசலத்தின் நின்றது தான். அப்போது டாக்டர் அய்யா தனது சாதி ஓட்டின் மீது கொண்ட அதீத நம்பிக்கை மக்களுக்கு குறிப்பாக அந்த பகுதியில் வசித்த மாற்று சாதி மக்களுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தின. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்கிற அந்த கோஷத்தை அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்த்தனர். அப்போது அதன் மாற்றாக திமுகவை விட ஒரு நடுநிலையாளருக்கு ஓட்டு போட்டால் என்ன என்கிற மனோநிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த் ஒரே காரணத்தால் மட்டுமே விஜயகாந்த் அங்கே வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றிக்கு பின்னர் தான் அந்த கட்சிக்கு "தொண்டர்கள்" பெருகினர். அதாவது அது வரை அவருக்கு ஓட்டளித்த நடுநிலையாளர்கள், ரசிகர்கள் தவிர்த்து "தொண்டர்கள்" என்பவர்கள் புதிகாக வந்து சேர்ந்தனர். அவர்களின் குறி கட்சி பத்வியின் மேல் நின்றது. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்கிற மாதிரி விஜயகாந்து நடவடிக்கைகளும் ஆகின. குடித்து விட்டு சட்டமன்றம் வந்து பிரச்சனை ஆகியது. வ்டிவேலு கிரி படத்தில் "அக்காவை நீ வச்சுக்கோ, பேக்கரியை நான் வச்சுக்கறேன்" என்கிற மட்டமான ரசனையுடைய காமடி காட்சி உள்ள படத்தில் கடைசியில் ஒரு கலக்டர் சொல்லுவார் "நேற்று கூட உன்னை பற்றி தான் கலக்டர் மீட்டிங்ல பேச்சு வந்தது" என்று. அதற்கு வடிவேலு " அடச்சே.. இதல்லாமா கலக்டர் மிட்டிங்ல பேசுவீங்க" என கேட்பார். அது போல ஒரு எம் எல் ஏ குடித்துவிட்டு வருவதும், ஒரு முன்னாள் முதல்வர் அதை சொல்லி திட்டுவதும் அதற்கு பதிலாக இவர் " நீ பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தியா" என கேட்டதும், ரவிக்குமார், செல்வபெருந்தகை போன்ற விசி கட்சி எம் எல் ஏக்கள் பக்கத்தில் உட்காருபவர்கள் போய் முதல்வரிடம் அது உண்மை என சொல்வதும்... இதல்லாம் விஜயகாந்தை அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஒரு  காமடியன் ஆக்கிய ஆரம்ப கட்டங்கள்.

அதன் பிறகு இவர் தன் கட்சி சேலத்து மாநாட்டில் நிற்க முடியாமல், பேசியதையே திரும்ப திரும்ப பேசியதும், தடுமாறியதும், எனக்கு நாக்கு குழரும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் பத்திரிக்கைகளால் மறைக்கப்பட்டாலும், அதாவது அப்போது ஜெவுடன் எப்படியாவது விஜயகாந்தை கூட்டணி சேர்த்துவிட வேண்டும் என்கிற ஆசைப்பட்ட பத்திரிக்கைகள் அதை மறைத்ததும் ஆனாலும் கேப்டன் டிவியின் நேரடி ஒளிபரப்பில் மக்கள் அதை பார்த்ததும் எல்லாமே நட்ந்தன. அப்போதும் திமுக போன்ற கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருந்தன.


அதன் பின்னர் ஜெவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது ஜெவுக்கு சமமான அகங்காரத்தை விஜயகாந்து வெளிப்படுத்திய போதும், 40 சீட்டுக்கு நான் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என சொல்லிவிட்டு 41 சீட்டு வாங்கி கொண்டதையும், அதன் முன்னர் "விஜயகாந்து ரோசக்காரர், மானம் உள்ளவர் ஜெவுடன் கூட்டணி வைக்க மாட்டார்" என அழகிரி அவர்கள் சொன்னதுக்காக அன்றைக்கே போய் அங்கு இறுகிய முகத்துடன் அடக்கமாக உட்காந்ததும், பின்னர் அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்ற்கு அவர் சிம்பிளாக "ஆமாம் சொன்னேன். ஆனால் அவர் தான் ரோசக்காரன் இல்லை, மானம் உடையவன் இல்லை என சொல்லிவிட்டார்" என சொன்னதும், பின்னர் கூட்டணி முறிந்து போன போது என்ன பேசுகிறோம் என தெரியாமல் நிருபர்களிடம் உளறி கொட்டியதும், இப்போது வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடையும் நேரத்தில் ஜெவின் தேர்தல் பிரச்சாரம் திருத்தி வெளியிடப்பட்ட போது அதில் தேமுதிகவின் ஒரு தொகுதியும் இல்லாமையும், அதே நேரத்தில் இவர் ஸ்டாலினை எதிர்த்து மாய்ந்து மாய்ந்து அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ததையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இதோ ஜெவின் தந்திரம் பலிக்க போகின்றது. கடந்த் தேர்தல்களில் விஜயகாந்தால் தான் இழந்த தொகுதிகள் அதிகம் என தெரிந்து தன் கூட்டணியில் கொண்டு வந்து கட்டி போட்டு அந்த 41 தொகுதியை தவிர வேறு எதிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் செய்து விட்டு, அந்த 41 தொகுதிகள் போகட்டும் என விட்டு விட்டு மீதியில் தன் கவனத்தை செலுத்த போகின்றார் ஜெ. இப்போது அல்லது இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் தான் விஜயகாந்துக்கு தான் ஒரு காமடி பீஸ் என்பதே தெரியவரும். கடந்த தேர்தல்களில் வைகோ ஒரளவு நல்ல நிலையில் இருந்த போது ஜெ பேசிய கூட்டத்தில் "வைகோ வாழ்க" என கோஷமிட்ட மதிமுக தொண்டர்களை பார்த்து ஜெ பொறிந்து தள்ளியது இப்போது தான் ஞாபகம் வரும் விஜயகாந்துக்கு... எனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அடுத்த காமடியனும் ரெடி..இனி விஜய்காந்த் நினைத்தாலும் மூன்றாவது அணி அமைக்க முடியாது, தனித்து நிற்க முடியாது, தனித்து நின்றாலும் அந்த 41 தொகுதி மட்டுமே கிடைக்கும். தான் ஒரு கருப்பு எம்ஜிஆர் என கூட்டத்தில் சொல்லிக்கொள்ள முடியாது. அடுத்த முதல்வர் என்றோ முதல்வர் வேட்பாளர் என்றோ சொல்லிக்கொள்ள முடியவே முடியாது...

அடுத்து திமுக கூட்டணியில் பார்ப்போம். இங்கு வடிவேலு என்னும் காமடியன் முதல் தேர்தல் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர், தென்மண்டல அமைப்பு செயலாளர் உட்பட கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்கள் உட்பட முக்கியமாக நடிகர்களை எதிர்க்கும் பாமக தலைவர், விசி தலைவர் உட்பட அனைவரின் முன்பாக பேச ஆரம்பிக்கின்றார். இது அவருக்கு அரசியல் மேடையின் முதல் கன்னிப்பேச்சு.

அவர் பேசிய மாடுலேஷன், தொணி எல்லாவற்றையும் விட்டு விடலாம். அது எல்லாம் போகப்போக சரியாகும். ஆனால் பேசிய விஷயம் என்ன? அத்தனை தலைவர்கள் முன்னிலையில் விஜயகாந்தின் குடிப்பழக்கத்தை ஆரம்பித்து பேச போகின்றார் என்பது திமுக தலைமைக்கு தெரியாமல் இருந்திருக்குமா? அல்லது திமுக தலைமையே சொல்லித்தான் அதை பேசியிருப்பாரா? இரண்டில் ஒன்று தான் நடந்திருக்கும். அதாவது "தான் நல்லவன் தனக்கு ஓட்டு போடவும் என கூறி மக்களை ஏமாற்றி  இது நாள் வரை தன்னை பற்றி ஒரு புனிதபிம்பத்தை காட்டிக்கொண்டு இருந்த விஜயகாந்தின் முகத்திரையை முதலில் கிழிக்க வேண்டும். அது யாரால் முதலில் கிழிக்கப்பட வேண்டும்? திமுகவினரோ, அலது விசி, பாமக போன்றவர்களோ பேச முற்பட கூடாது. அவர்கள் ஒன்றும் அதிமுக தலைவி மாதிரி அவசர குடுக்கை இல்லை. அப்படி சொன்னால் "நீ வந்து ஊத்தி கொடுத்தாயா?" என ஜெ மூக்கறு பட்ட மாதிரி ஆகும். அதனால் வடிவேலுவை விட்டே பேச சொன்னால் விஜயகாந்து அப்படி அந்த கேள்வியை கேட்டால் ஆமாம் நான் ஊத்தி கொடுத்தேன் என பதிலடியும் கிடைக்கும். ஏனனில் அவரும் இவரும் பலபடங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். அவருடைய அத்தனை கோக்குமாக்குகளும் இவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது. முதல் கல் எறிவது தான் சிரமம். பின்னர் அடுத்த கல்லை மற்றவர்கள் பார்த்து கொள்வர். ஆக அன்று பேசிய அத்தனை பேரின் பேச்சில் வடிவேலுவின் பேச்சு அடிமட்ட வாக்காளனுக்கும் போய் சேர்ந்தது என்பது உண்மையோ உண்மை. இதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா? அது வடிவேலுவாக இருந்தால் என்ன விருச்சிககாந்தாக இருந்தால் என்ன, விஷயம் போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாகி விட்டது. சேர்த்தாகிவிட்டது. அடுத்த நாளே திருமா திருச்சியில் அதை தொட்டு பேசுகின்றார். இனி திமுகவின் பேச்சாளர்கள் திரும்ப திரும்ப அந்த குடிகார கதையை பேசுவர்.

நான் இப்போது இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று தான். குடிப்பது தவறா? யார் தான் குடிக்கவில்லை? தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றி பேசினால் சரியா? இந்த விவாதம் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். விஜயகாந்து தன் வீட்டில் குடித்து விட்டு தூங்கினால் யார் கேட்க போகின்றனர். அவரை நம்பி இருக்கும் அவரது தொண்டர்கள் மத்தியில் மேடையில் தள்ளாடுவது தவறு என்பதே இங்கு வைக்கபடும் வாதம். குடித்து விட்டு மக்கள் மன்றத்தில் வந்து சபை நாகரீகம் தெரியாமல் உட்காருவது பேசுவது தவறு. குடித்து விட்டு உளருவது மிகப்பெரிய தவறு. இதைத்தான் திமுக எதிர்கின்றது. இதோ ஜெயலலிதா குடிப்பார் என்பது ஊரே அறிந்த விஷயம். இது வரை அந்தம்மா சிவந்த கண்களுடன், கலைந்த தலையுடன் தன்னை காட்டிக்கொண்டது உண்டா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்கின்றது. ஜெ குடிப்பார் என எவனாவது பேசினால் மானநஷ்ட வழக்கு போடும். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக சொல்லும். ஆனால் ஜெவை பார்த்து ஊத்தி கொடுத்தாயா என்று மடக்கிய விஜயகாந்தால் வடிவேலு பேச்சுக்கு "அவர் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல போவது இல்லை" என்கிற சப்பைகட்டு தான் கட்ட முடிகின்றது. இதைத்தான் சொன்னேன். திமுக அணியில் காமடியனும் ஹீரோ தான். அதிமுக அணியில் ஹீரோவும் காமடியன் தான் என்று.



இந்த நேரத்தில் மற்றும் ஒன்று கூட சொல்ல வேண்டும். திமுகவில் இருக்கும் குமரிமுத்து, அதிமுகவில் இருக்கும் குண்டு கல்யாணம் ஆகியோரை பற்றி ஏன் திமுகவில் இருக்கும் விருச்சிககாந்து ஆகிய என்னை பற்றியும் நான் எதும் சொல்லவில்லை. நாங்கள் வயிற்று பிழைப்புக்காக காமடியன்கள் ஆகியிருக்கின்றோம். அது கூட மக்களின் ஒரு விதமான வக்கிர புத்தி என்று தான் சொல்லவேண்டும். குமரிமுத்துவுக்கு ஒரு கண் சரியில்லை. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், அதே போல குண்டுகல்யாணம் உருவம் யானை போல பெரிது. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், எனக்கு பலெடுப்பு, அழகில்லாதவன், கருப்பு இன்ன பிற குறைகள்... இவையெல்லாம் பார்த்து சிரிக்கும் மக்கள் வக்கிர புத்தி படைத்தவர்கள் தானே? கண்டிபபக நாங்கள் மூவரும் நகைச்சுவை நடிப்பில் தேர்ந்தவர்கள் என சொல்லவே முடியாது. முடியவே முடியாது. ஆனால் அண்ணன் குமரி முத்துவின் மேடைப்பேச்சை கேளுங்கள், அண்ணன் குண்டு கல்யாணத்தின் மேடைப்பேச்சை கேளுங்கள், மழை பொழிந்தது போல பேசி ஆனால்  கூட்டத்தை கட்டிப்போடும் அரசியல் தெரிந்தவர்கள். இவர்களை நடிகர்களாக பார்க்காமல் அரசியவாதிகளாக பாருங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

Friday 25 March 2011

ராஜபக்ஷே கோஷ்டிக்கும் சீட் கிடைத்தது. வாழ்க காங்கிரஸ்!




சீமான் என்னும் வெத்துவேட்டு "நான் காங்கிரசசை ஒழிப்பேன்" என முழங்கிய போது கூட நன்கு அரசியல் தெரிந்தவர்கள் "காங்கிரசை ஒழிக்க நீ யாரடா?" என சத்தமிட்டனர். ஆனா சத்தம் போடாமல் மனதின் உள்ளே சொன்ன வாக்கியம் "அதை காங்கிரசே பார்த்துக்கொள்ளும்". இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் கலைஞர் 60 சீட் போதும். உங்களுக்கு எத்தனை கொடுத்தாலும் அதை பிரித்து எடுத்துக்கொள்ள கூட தெரியாது என்று சொல்லிப்பார்த்தார். கேட்டால் தானே? சின்ன பசங்களுக்கு பஞ்சு மிட்டாய் கேட்டால் ஒன்று வாங்கி தரலாம். பத்து கேட்டால் என்ன செய்வது? வயிற்றை வலிக்கும் என சொன்னால் கேட்க வேண்டும். கேட்கவில்லை. தின்றுவிட்டு வயிற்றை வலித்தால் வலிக்கட்டும் என விட்டு விட்டார். அவர் சொன்னது போலவே 60 தொகுதிக்கும் ஆள் கிடைத்து வேட்பாளர் அறிவித்தாகியும் விட்டது. இதோ நாளைக்கு கடைசி நாள். மீதி மூன்று இடத்துக்கு இப்போது தான் அறிவிக்கப்பட்டது.

காங்கிரசில் இருக்கும் கோஷ்ட்டிகளில் பெரிய கோஷ்டி வாசன் கோஷ்டி தான். ஆனால் ராகுல் இப்போது ஆரம்பித்து வைத்திருக்கும் புதிய கோஷ்டிக்கும் இந்த முறை சீட் பங்கு கொடுக்க வேண்டியதாகி விட்டது. போகட்டும் அவர் பெரிய இடத்து பையன். ஆனால் அவர் நினைத்தால் அவரே அந்த 63 வேட்பாளரையும் கூட அறிவிக்கலாம். ஆனால் தன் தகுதி தனக்கு தெரியும் தானே. தான் ஒரு கட்சியின் தலைமைக்கு வர இன்னும் நாள் இருக்கின்றது. அது வரை ஒரு சிறிய கோஷ்டிக்கு தலைவராக இருந்து விட்டு போவோம் என அவர் எண்ணியதில் தவறு எதும் இல்லை.

இதை விட வேதனை என்னவெனில் தமிழக காங்கிரஸில் அவர்கள் கட்சிக்காரர்கள் கோஷ்டி என்பது ஒரு நியாயமான விஷயம் தான். ஆனால் நம்ம தலைவர் கலைஞருக்கும் அங்கே ஒரு கோஷ்டி இருப்பது தான் வேடிக்கை. பீட்டரல்போன்ஸை பொறுப்பாளராக போட்டு இவர் அங்கே ஒரு கோஷ்டி வைத்து அரசியல் நடத்துகின்றார். ஏன் தலைவா உங்களுக்கு இந்த வேலை. நம்ம கட்சியில உங்களுக்கு தான் வானளாவிய பவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றதே. பின்னர் ஏன் காங்கிரசில் ஒரு கோஷ்டியை தலைமை செயலகத்தில் மீன் வளர்ப்பது போல வளர்கின்றீர்கள். இதோ நீங்கள் செய்த இந்த அக்கிரமத்தால் என்ன ஆனது பாருங்கள். கலைஞரே காங்கிரசில் தன் கோஷ்டிக்கு சீட் கேட்டு வாங்கிகின்றாரே, நான் என்ன இளிச்சவாயனா என நினைத்த பக்கத்து நாடு ராஜபக்ஷேவும் தன் பங்குக்கு ஒரு கோஷ்டி ஆரம்பித்து (அது ஏற்கனவே இருந்த கோஷ்டி தான்) தனது வேட்பாளர் ஹசனலிக்கு ராமநாதபுரத்தில் சீட் வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு வாங்கி விட்டான். இதோ மீதி இருந்த அந்த 3 வேட்பாளர்களில் ஒருவர் ராஜபக்ஷே கோஷ்டி.

எல்லாம் உங்களால் தான் தலைவரே.  நீங்கள் அடுத்தவன் கட்சியில் கோஷ்டி ஆரம்பிக்காவிட்டால் ராஜபக்ஷேவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? ராஜபக்ஷே 1000 கோடி கொடுத்து வைகோவையே ஜெ கூட்டணியில் இருந்து கழட்டி விட்டதாக வைகோவே இப்போது சொல்கின்றார். அந்த மிருகம் உங்களையும் உங்களை நம்பி இருக்கும் எங்களையும் கடிக்கும் முன்னர் ஏதாவது செய்து அதன் கொடுக்கை நறுக்குங்கள்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு சீட் கொடுத்தால் மகளிர் காங்கிரஸ் எதிர்க்கும். டாக்டர் நடேசனுக்கு கொடுத்தால் இளைஞர் காங்கிரஸ் எதிர்க்கும். எதிர்த்து வேட்பாளரை நிறுத்தும். இதல்லாம் அங்கே சகஜம். அது போல யாருக்கு கோபம் வந்தாலும் முதல் அடி சத்தியமூர்த்தி பவன் உள்ளே இருக்கும் காந்திக்கு தான். தலைவரே நீங்கள் உங்கள் கோஷ்டியை விட்டு ராஜபக்ஷே கோஷ்டியை எதிர்க்க சொல்லுங்கள். சத்தியமூர்த்தி பவன் வாசலில் காந்தி, காமராசர், சத்தியமூர்த்தி, நேரு என எல்லாருடைய உருவபொம்மைபையும் எரிக்க சொல்லுங்கள். உங்கள் கோஷ்டி தான் பெரிய கோஷ்டி என நிரூபியுங்கள். புறப்படட்டும் உங்கள் கோஷ்டி.எரியட்டும் சத்தியமூர்த்தி பவன்.நீங்கள் உங்கள் கோஷ்டியை அமைதி பூங்காவாக வைத்திருந்தால் அவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிவிடக்கூடிய அபாயம் இருப்பதை உணருங்கள். உடனே சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேன் மண்டையில் இருந்து ஆரம்பித்து... உங்கள் கோஷ்டிக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள் காங்கிரசில்.

Tuesday 22 March 2011

நடத்துங்க நடத்துங்க , எத்தனை தூரம் தான் போவீங்கன்னு பார்க்கிறோம்...



நான் ஒரு கட்டுரை எழுதி இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதாவது ஜெயலிதா எந்த தப்பு செய்தாலும் அது சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பம், மத்த எந்த நல்லது நடந்தாலும் அது ராஜகுருக்கள் செய்தது என்று அவாள் எல்லாம் செய்யும் பரப்புரை. அதற்கு என் அன்பு அண்ணன் உண்மைதமிழனும் உடந்தை என்று. கூட்டணி கட்சிகள் தொகுதியையும் சேர்த்து ஜெ வெளியிடுவாராம் அதற்கு சசிகலாதான் காரணம் என்று சதிகலா என்னும் தலைப்பிட்டு ஜூனியர் விகடன் 3 நாள் முன்பாக எழுதுமாம். இப்படியாக ஜூவி எழுதி எழுதி தான் அதன் வாசகர்கள் முற்றிலும் ஒழிந்து போன நிலையில் உண்மைதமிழன் ஒரு கட்டுரை இப்போது எழுதி கிழித்திருகின்றார். அதாவது..

\\அவரது உற்ற தோழி சசிகலாவின் உறவினர்கள்,  அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தீர்மானிப்பதில்  ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்றும் நான் நம்புகிறேன்.


எனது நம்பிக்கைக்கு இன்னுமொரு காரணம்.. முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.


சசிகலாவின் சொந்த பந்தங்கள் அடங்கிய கிச்சன் கேபினட் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா அதில் இருந்து 70 தொகுதிகளை மட்டும் டிக் செய்து “இந்தப் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிடுங்கள். மீதியை இன்னும் இரண்டொரு நாட்களில் இரண்டு பட்டியல்களாக வெளியிடலாம்” என்று அங்கேயிருந்த நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் சொல்லியுள்ளார்.


அந்த நேரத்தில் அங்கேயிருந்த சசிகலாவின் கிச்சன் கேபினட்டோ “ஒட்டு மொத்தமாகவே ரிலீஸ் செய்துவிடலாம்.. தாமதமானால் நமக்குத்தான் கஷ்டம்..” என்று சொல்லியிருக்கிறார்கள். “கூட்டணிப் பேச்சுவார்த்தையே இன்னும் முடியலையே.. அதுக்குள்ள எப்படி நாம மொத்தமா ரிலீஸ் செய்ய முடியும்..?” என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.


அப்போது ராமச்சந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒட்டு மொத்த லிஸ்ட்டை ஜெயலலிதாவிடம் நீட்டி “நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இதையே வெளியிட்டுவிடலாம். கூட்டணி கட்சிக்காரங்க கேட்டாங்கன்னா சொல்லிக்கலாம். இன்னிக்கு நிலைமைக்கு இதுனால யாரும் நம்ம கூட்டணியைவிட்டு விலக மாட்டாங்க. கடைசி நேரம்ன்றதால நாம கொடுக்குற தொகுதிகளை வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க..” என்று கூறியிருக்கிறார். இதற்கு கிச்சன் கேபினட்டும் ஒத்து ஊதி பேசியிருக்கிறார்கள்..!


இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!


முன்னரே சொல்லி வைத்திருந்தாற்போல 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை பெற்றுக் கொள்ள ஜெயா டிவியில் இருந்து ஆட்களும் வந்துவிட.. ராமச்சந்திரன் தானாகவே ஒரு முடிவெடுத்து ஜெயலலிதா டிக் செய்திருந்த 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை ஒதுக்கிவிட்டு தன் கையில் வைத்திருந்த 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டார்.


இதுதான் கார்டனில் அன்றைக்கு நடந்ததாக நான் விசாரித்தவரையில் தெரிந்தது. நான்கூட ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் பட்டியல் வெளியானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்\\

உண்மை தமிழன் அண்ணே, இதல்லாம் மூன்று நாட்கள் முன்னதாக ஜூவியில் வந்துவிட்டது. ஏன் அண்ணே உனக்கு இந்த வேலை. ஏற்கனவே உனக்கு காபி பேஸ்ட் கந்தசாமின்னு பேர் இருக்கு. இதிலே இப்படி எழுதினா காப்பி அடிக்கும் கந்தசாமின்னு பேர் மாத்திட மாட்டாங்களா? நீ எழுதுவதில் ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை என்றும் சினிமா விமர்சனம் என்கிற பெயரில் அப்படியே அப்பட்டமாக கதையை எழுதுவதாகவும், எல்லா பேப்பரும் படித்து தொலைந்துவிட்டு அதை உன் டைப்பிங் திறமையால் வேகமாக டைப் அடிக்கின்றாய் என்றும் ஒரு பேச்சு இருக்கின்றது. நான் சொல்வது உண்மையா பொய்யா என நீயே உன்னை கேட்டுக்கொள்.

எங்க டைரக்டர் சொல்வது போல உன் கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன். இப்ப பாரு இன்றைக்கு வந்த ரிப்போர்ட்டர். ஜெ அந்த லிஸ்ட் விடவில்லை என உன் குருநாதர் "சோ"மாறி ஆசைப்படுவதை நிறைவேற்ற வேறு ஒரு அழகான கோணத்தில் சிந்தித்து எழுதியிருக்கின்றது. ஐ லைக் இட். அதாவது ஜெ அப்பாவியாம். உளவுதுறை தான் எல்லாம் செஞ்சுதாம். ஜெ வெளியிட் சொன்ன லிஸ்ட்டுல 70 பேரோடு சேர்த்து மீதி 90 பேர் கூட்டணி கட்சிக்கு கொடுத்த பெயர்களையும் சேர்த்து ஜெ கையெழுத்தை ஸ்கேன் செஞ்சு அதன் அடியிலே போட்டு அதிமுக லெட்டர் பேடில் ஜெயா டிவிக்கு அனுப்பி அதாவது சைபர் கிரைம் போலீசை வைத்து போயஸ்கார்டன் நம்பர் அதிலே தெரிவது போல செய்து அனுப்பி அதை ஜெயா டிவி வெளியிட்டதாம். இத்தனை செய்யும் உளவுதுறை அதை முதலில் சன் டிவிக்கு அனுப்பி அவங்க வெளியிட்ட பின்ன தான் ஜெயா டிவி வெளியிட்டதாம். இப்படியாக போகின்றது அந்த கதை. தவிர "பக்" என்னும் கருவியை ஜெ ரூம்ல வச்சு ஜெ பேசுவதை எல்லாம் உளவுதுறை ரூம்ல இருந்து ஸ்பீக்கர்ல கேட்கலாமாம். அட... இவனுங்களுக்கே தெரிஞ்ச அந்த பக் இன்னும் அந்த பச்ச குழந்தை ஜெவுக்கு தெரியலையாம். பட் ஐ லைக் இட்.. அந்த கிரியேட்டிவிட்டி எனக்கு புடிச்சு இருக்கு. ஆனா நீ தெரு முனையிலே இருக்கும் டீக்கடைகார்னையே தெரியாத உனக்கு போயஸ்கார்டன்ல இருந்து நியூஸ் வந்துச்சுன்னு புரூடா விட்டு ஜூனியர் விகடன் எழுதியதையே எழுதி தொலைச்சி இருக்கே.

நான் திரும்ப திரும்ப சொல்கின்றேன். உனக்கு அரசியல் வராது விட்டுடு. ஆனா நீ எங்க கேட்க போகின்றாய்?

இந்த பத்திரிக்கை தர்மம் என்பதே செத்து போச்சு. இன்று வந்த நக்கீரனில் கூட பொள்ளாச்சி ஜெயராமன் தன் கையிலேயே அதிமுக தேர்தல் அறிக்கையை வச்சுகிட்டு அலைவதாகவும் அதை இவங்க ஆளுங்க போட்டோ எடுத்து ஜூம் பண்ணி பார்த்து விட்டதாகவும் ஒரு இலவச லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. அதுவும் தினமலர்ல 2 நாள் முன்னதாக வந்து விட்டது. அதை கூட உன்னைப்போல ஒருவன் சதீஷ்குமாரு காபிபேஸ்ட் அடிச்சுட்டான். அண்ணே உனக்கு சரியான போட்டி அண்ணே அவன். உனக்கு முன்னாலயே காபிபேஸ்ட் அடிக்கிறான். அவன் கதை பெரிய கதை. திமுக அறிக்கையை பார்த்து இதல்லாம் ஒரு பொழைப்பான்னு கட்டுரை எழுதி அது காயும் முன்னமே அதிமுக தேர்தல் அறிக்கை அதிரடின்னு அடிச்சுவிடுறான். அதாவது திமுக செஞ்சா அது இதல்லாம் ஒரு பொழைப்பா? அதுவே அதிமுக செஞ்சா அதிரடி?
 நானே உங்க ரெண்டு பேருக்கும் விளம்பரம் கொடுத்து கொடுத்து கெடுக்கின்றேனோ என வருத்தமாக இருந்தாலும் வேறு வழி இல்லை. நீங்க திருந்தும் வரை நான் இப்படியாக செய்து தான் ஆக வேண்டும்.

Monday 21 March 2011

உனா தானாவும் அனா வானா வாவன்னாவும்... புரியலைன்னா உள்ள வந்து படிங்க...

அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இலவசம் வேண்டாம் சரி உங்களுக்கு என்ன தான் வேணும்


பொய் தமிழன் : 24 மணி நேரமும் கரெண்ட் வேணும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : நீங்க ஒரு ஜெனரேட்டர் வாங்கி டீசல் போட்டு உங்க வீட்ல வச்சிக்கிட்டா என்ன


பொய் தமிழன் : அதுக்கு நிறைய காசு ஆகுமே


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : எவ்வளவு ஆகும்


பொய் தமிழன் : 2 லைட்டும், ஒரு பேனும் ஓட 3 மணி நேரம் ஜெனரேட்டர் ஓடினா, 10 ரூபாய் ஆகும், ஆனா கரெண்டுனா 3 ரூபா தான் ஆகும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அப்ப நீங்க 100 ரூபாய் கொடுத்து வாங்கும் கரெண்ட கவர்மெண்ட் 3 ரூபாய்க்கு தரனும், அதாவது 97 ரூபாய் இலவசமா தரணும். அப்படியா


பொய் தமிழன் :ஆமா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அது இலவசம் இல்லையா


பொய் தமிழன் : டேய், எனக்கு தேவையானத அரசு தந்தா அது வளர்ச்சி, எனக்கு தேவையில்லை, என்னை விட ஏழைகளுக்கு தேவை யானத தந்தா இலவசம். தெரியுதா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இது அநியாயமுன்னா



பொய் தமிழன் : எனக்கும் தெரியும், ஆனா எப்படியாவது கலைஞரை திட்டனுமே. அதுக்குத்தால் இலவசமுன்னு திட்டுறேன்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : ஏன்னே கலைஞரே திட்டுற


பொய் தமிழன் : அதுவா, கலைஞரை திட்டுனாத்தானே என்ன புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க

=============================================

அண்ணே உண்மை தமிழன் அண்ணே, நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கும் முட்டாள் அண்ணே, இனியாவது அரசியல் பதிவு போடாம எதுனா சினிமா யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு எழுது அண்ணே, உனக்கு வராததை கட்டிகிட்டு அழுவாத அண்ணே. கலைஞரை திட்டுவதால உனக்கு எதும் கிடைக்க போவது இல்லை அண்ணே. ஜெயா உனக்கு எதும் தள்ளிட மாட்டா அண்ணே. இப்ப வைகோவை பார்த்தியா சீந்த ஆள் இல்லாம கார்த்திக்கும், பிஜேபியும் வாங்க எங்க தலைமையிலே கூட்டணி வச்சுக்கலாம்னு கூப்பிடுறான். போற போக்கை பார்த்தா உன்னை அந்த சதீஷ்குமாரு கூட கழட்டி விட்டுட்டு அவன் தொழிலை கிளிசோசியம் பார்க்க கிளி பொட்டிய தூக்கிகிட்டு போயிடுவான் அண்ணே, நீ இனிமே சினிமா மாத்திரம் எழுது அண்ணே!

இதோ இன்னும் ஒருத்தன் கிளம்பிட்டாண்டா...

சோரம் போன வடிவேலு
இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.

இதை நீதான் பக்கத்துல இருந்து பார்த்தியா? அந்த சிங்கமுத்து செஞ்சது எல்லாம் அசிங்க முத்து வேலை. இதுல வடிவேலு கலைஞர் கால்ல விழுந்ததை நீ பார்த்தியா? போடாங்...

\\அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை\\.

டேய் கேப்டன் கேப்டன்னு சொல்றியலே... அப்பன்னா மேஜர் சுந்தர்ராஜனை மேஜர்ன்னு சொல்லி கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இதல்லாம் உங்க தப்பில்லை, நம்ம மிலிட்டரி நடவடிக்கை எடுக்காதௌ தான் குத்தம். இவனை கொண்டு போய் பாகிஸ்தான் பார்டர்ல விடனும். அப்ப கூட மிலிட்டரி ரம் இருக்குதான்னு தான் கேட்பான்.

\\பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.\\

எலேய் மூதேவி உனக்கு முதல்ல பெரியாரை பத்தி தெரியுமா? அண்ணாவை பத்தி தெரியுமா? பேச வந்துட்டானுங்க...

\\திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.\\

ஆமாம்டா உங்க ஜெயா ஆட்சில தானே தியேட்டர் எல்லாம் மூடினீங்க. எல்லாம் குடோனா மாத்துனீங்க. இப்ப கொஞ்சமாவது பொழைச்சு போங்கன்னு எதுனா செஞ்சா உடனே குத்துதா?

\\பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை. \\

எலேய் சிம்ரனை கொண்டு வந்து வச்சு ஓட்டு கேட்க வச்சது நீங்களா? இல்லை நாங்களா? போன தபா நீங்க களத்திலே வுட்ட லிஸ்ட் தரவா? நல்லா வாயில வருது... பேசாம ஓடி போயிடு.... நான் உண்மைதமிழன், டுபாக்கூர் தமிழன், சதீஷ்குமார்ன்னு எத்தன எழவுக்குடா பதில் சொல்லிகிட்டு இருப்பேன். இப்ப நீ வேறயா? ஏண்சா சாவடிக்கிறீங்க?

சசிகலா செத்து போயிடுவா.. பதிவர் சதீஷ் சொல்கிறார்!!!!!!!!!!!!!!!!!!!!!!

அட கன்றாவியே! உனக்கு ஜெ மேல பொங்கி பொங்கி வருதுன்னா "ஜெ வாழ்க ஜெ வாழ்க"ன்னு பதிவு போடு. இல்லாட்டி கலைஞர் மேல வெறுப்பு இருந்தா "கலைஞர் சாவட்டும்"ன்னு எழுது. (எழுதினா கூட அது அவருடைய நூற்றாண்டு வரை எழுதனும், அதுக்கு முன்னே உன் ஜெ போய் சேர்ந்திடும்) அதுக்காக அரசியலே தெரியாம சும்மா அரசியல் எழுதாதே.

இங்க பாரு, உனக்கு தொழில் சோசியம். அதை ஒழுங்கா பாரு. அதையும் கூட S ல ஆரம்பிக்கும் பேர் A ல முடியும் பேர் எல்லாம் செத்துduவான்ன்னு சொல்லிட்ட. அட ஜீசஸ்... உங்கம்மா இப்ப வெளியிட்டிருக்கும் லிஸ்ட்டுல எத்தனை பேர் சாவானுங்க? உன் வூட்டுல எத்தனை பேர் சாவானுங்க? உன் மாமியார் வூட்டுல எத்தனை பேர் சாவானுங்க? அடங்கொய்யால சசிகலா செத்து போயிடுமேடா... பாவி. உங்கம்மா தனி மரமா நிக்குமேடா... எதையும் யோசிக்காம பேசுறியேடா பாவி!

உனக்கு இருக்குடா தம்பி சங்கு ஜெ கிட்டே இருந்து.


உனக்கு அரசியலும் வரலை. சோசியமும் வரலை. நல்ல நேரம்னு பிளாக் வச்சிருந்தா மட்டும் போதாது. அது கலைஞருக்கு தான்னு சொல்லனும். முதல்ல உனக்கு நல்ல நேரம் எதுன்னு பார்த்துக்க.

திரும்ப வர்ரேன்!!!

Saturday 19 March 2011

சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்.... போக்கத்த பய புள்ள டுர்ர்ர்ர்ர் கே சதீசுகொமாரு...

சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்....

இந்த ஜூவிபயலுங்க வர வர தம்ப்ரி சத்தீசுகொமாரு, அண்ணன் உண்மைதமிழன் ரேஞ்சுக்கு ஆகி தொலைச்சுபுட்டானுங்க. இந்தம்மா ஜெயலலிதா நம்ம விஜயகாந்து மாதிரியே பகல் ராவுன்னு ன்னு பார்க்காம ராவா உள்ளவுட்டுக்கும் பார்ட்டின்னு ஊரே அறிஞ்ச ரகசியம். அது காங்கிரசை இழுக்க பார்த்துதுன்னா ராஜதந்திரம, அது ஸ்ரீரங்கத்து பஸ்டாண்டுல நின்னுச்சுன்னா அது ராஜதந்திரம், அது ஸ்பெக்ட்ரம் பத்தி பேசினா, அறிக்கை விட்டா அது ராஜதந்திரம், அழகிரி விஜயகாந்தை பார்த்து மானம் உள்ளவர், ரோசம் உள்ளவர்ன்னு சொன்னா உடனே கூப்பிட்டு 41 சீட்டு குடுத்து கூட்டணில கையெழுத்து வாங்கினா அது ராஜதந்திரம், அது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை குறைச்சு குடுத்தா அது ராஜதந்திரம், அது லிஸ்ட்டு குடுத்து அனுப்பிட்டு 160 சீட்டுக்கு உடனே வேட்பாளரை அறிவிச்சா உலகமகாதைரிய லெட்சுமி. அதுவும் ராஜதந்திரம். இத்தனையும் ஜெயலலிதா செய்வதுக்கு காரணமே சோ, மைத்ரேயன், சுனாசாமின்னு ராஜகுருவா இருக்கும் அவா தான். இப்படித்தான் ஜூனியர்விகடன் தன் ஆரிய விதையை சூடாக்கிக்கிட்டே இருக்கும். ஏன்னா ஜெயலலிதாவுக்கு பாவம் எதுவுமே தெரியாது பாருங்க. வாயிலே கையை வச்சாகூட கடிக்க தெரியாது.

ஆனா இதோ முந்தாநாள் சாதிக்பாட்சா செத்து போயிட்டாராம். உடனே ஜெயாடிவில சூட்டோட சூட்டா அதை வச்சு ஓன்னு அழுது புலம்பி தீர்த்துட்டு இனி கருணாநிதிய தூக்கி உள்ள போட வேண்டியது தான் பாக்கி. நாம இனி தனிக்காட்டு ராணி தான்னு நினைச்சுகிட்டு கூட்டணி கட்சியை எல்லாம் இப்போதே கசக்கி பிழிந்து தன் காலடியில் போட்டு வைக்கனும் என்கிற ரீதியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், புதியதமிழகம் எல்லாத்துக்கும் ஒதுக்கிய சீட்டை எல்லாம் தன் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சுட்டு ஹாயா அடுத்த ரவுண்டு அடிக்க ஆரம்பிச்ச போது தான் முதல் ரவுண்டு வுட்டுகிட்டு இருந்த விஜயகாந்துக்கு இது தெரியவர கண்கள் சிவக்க சிவப்பு துண்டுகாரர்களையும் கூட்டு ஒப்பாரிக்கு அழைத்த்து கொண்டு பொங்கு பொங்குன்னு பொங்க இதுதான் சாக்குன்னு சன் டிவிகாரன் கூடவே அங்க நின்னுகிட்டு பச்சைகலர் கட்டிய ஜெயலைதாவை தீ வைத்து கொளுத்துவ்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி விட்டு நிம்மதி மூச்சை இழுத்து விட்டான்.

அப்ப கூட கலைஞர்கிட்டே கேட்ட போது "அடுத்த வீட்டை எட்டிபார்கும் பழக்கம் எனக்கு இல்லை"ன்னு சொன்னாரு.அவருக்கு தான் நல்லா தெரியுமே. அங்க தா. பாண்டியன் இருக்கான். எப்படியும் அடிமைகளை கொண்டுவந்து பட்டியில் அடைத்து விடுவான் என்று. ஸ்டாலினோ "அடுத்தவர் சோகத்தை சந்தோசமாக கொண்டாடும் வழக்கம் அந்தம்மா மாதிரி எங்களுக்கு இல்லை"ன்னு சொன்னாங்க. பின்ன இல்லியா முரசொலி மாறன் இறந்த போது வெடிவெடிச்சு கொண்டாடின கூட்டம் தானே அது. இந்தம்மா போட்ட போடுல தமிழக மக்கள் சாதிக்பாட்சா செத்து போனதை சாதிக்கை புதைத்த மாதிரியே மனதில் இருந்து புதைச்சுட்டாங்க. ஆனா அங்க விஜயகாந்து & கோ அடிச்ச ரகளை எல்லாம் நேரிடையாக சன் டிவில ஒளிபரப்பு ஆகிகிட்டே இருக்க தமிழகம் முழுவதும் ஒரே காட்டு கூச்சல்.

நிலைமையை நன்கு புரிஞ்சுகிட்ட அந்த ராஜகுருக்கள் எல்லாம் சும்மா இருபபனுங்களா? இந்தமா தன் தலையிலேயே மண்ணை அள்ளிகிட்டு
இருப்பதை பார்த்து சும்மா இருப்பானுங்களா? உடனே தா. பாண்டியை கூப்பிட்டு எல்லாம் சொல்லிகுடுத்து உடனே பேச்சுவார்த்தை அது இதுன்னு செஞ்சுட்டானுங்கன்னு வச்சுகுங்க. அதல்லாம் விஷயம் இல்லை. ஜெயலலிதா எது செஞ்சாலும் ரைட்டு, ராஜதந்திரம், சோ, மைத்து(மைத்து என்றால் பிணம்ன்னு அர்த்தம் பாய்வூட்டுல) சுனாசாமி இவாள்ளாம் சொல்லுவா, இவா அட்வைஸ் படி தான் ஜெ நடந்துப்பான்னு சொல்லும் ஜூனியர் விகடன் இப்ப என்னா எழுதுறான்னா... இந்த லிஸ்ட் எல்லாமே சசிகலா தயாரிச்சதாம். ஒருகட்டத்துல ஜெயலலிதா நான் பிரச்சாரம் மாத்திரம் செஞ்சுக்கரேன். நீங்க எதுவேணா செஞ்சுகுங்கன்னு சொல்லுச்சாம். தவிர 70 பேர் தான் முதல் லிச்ட்டுல விட இருந்துச்சாம். இந்த சசிகலா என்னும் தேவர் ஜாதி பார்ட்டிதன் எல்லாத்தையும் வெளியிட்டுச்சாம்.

என்னட கன்றாவி இதல்லாம். ராஜதந்திரம்ன்னு நீ நினைப்பது எல்லாம் செஞ்சா மாத்திரம் மைத்து, சோ, சுனாசாமி குருப் குடுத்த ஆலோசனை. அபத்தமா செஞ்சா அது மாத்திரம் சசிகலா & பேமிலியா? இது எந்த ஊர் ஞாயம்டா சாமீ. அவா என்ன கிரவுண்டிலே நின்னுகிட்டு சிக்சர் அடிக்கிறா பாருங்கோ. ஜூவியை, ரிப்போர்டரை வச்சுகிட்டு அரசியல் காலம் ஓட்டும் சோசியக்காரன் தம்பி சதீசு கூட இதலலாம் படிக்க மாட்டான். ஆனா சாதிக்கு சாவை பத்தி மாத்திரம் பிரமாதமா பேசுவான்.

இன்னும் உண்மை தமிழன் அண்ணன் மாத்திரம் வாயையும் அதையும் மூடிகிட்டு இருக்குறாரு. அவாளுக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதியா? இதை கேட்க வேண்டியது தானே இவாள்ளாம். கேட்க மாட்டாங்க. இப்பவும் கருணாநிதி எதுனா கோமணத்தை காயப்போட்டிருந்தா அதை எடுத்து வச்சுகிட்டு கிழிச்சுகிட்டு இருப்பாய்ங்க.

போங்கய்யா போங்கு ஆட்டம் ஆடும் ஆட்டுமந்தைகளா....

Tuesday 15 March 2011

திமுக தோல்வியை உணர்ந்து விட்டதாம். உண்மைதமிழன் சொல்றாருங்கோவ்....

அண்ணே! நான் உங்க எழுத்துக்கு அடிமைண்ணே! எப்படித்தான் இம்புட்டு நீளமா அடிக்கிறீங்களோன்னு எனக்கு பிரம்மிப்பா இருக்கும். நீங்க அடிப்படையிலே ஒரு டைப்பிஸ்ட்ன்னு தெரியும். அத்தோட சினிமா சம்மந்தப்பட்ட தொழில்னும் வாசிச்சு இருக்கென். பிரபல பதிவர் என்பது இந்த உலகமே அறியும். ஆனா நீங்க அரசியல்ல ஒரு கட் பேஸ்ட்ன்னு எனக்கு மட்டும் தான் அண்ணே தெரியும். நல்லா கூர்ந்து கவனிச்சா அது சிலருக்கு புரியும். நீங்க ஒரு இட்லிவடை, துக்ளக் ஆதரவாளர். அப்படி இருக்கும் போது உண்மைதமிழன்னு பேர் வச்சிகிட்டதே கொஞ்சம் முரண் தான். அவங்களுக்கும் தமிழனுக்கும் என்னா சம்மந்தம்னு தெரியலை. ஆனாலும் அப்பப்ப ஈழத்தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழின்னு அந்த அப்பாவிகளையும் உங்க பதிவு சூடக்கிக்க வேண்டி சேர்த்துகுறீங்க. பாவம் அவங்களுக்கு என்னா தெரியும். யாராவது நமக்காக குரல் கொடுத்தா சரின்னு உங்களை ஆதரிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உண்மையான துக்ளக் விசுவாசின்னு தெரிஞ்சா பாவம் மனசு உடைஞ்சு போயிடுவாங்க. அடிப்படையில் நீங்க ஒரு அதிமுக என்றும் அதை விட தீவிர பழுத்த கருணாநிதி விரோதி என்பதும் எல்லாருக்கும் வெளிப்படையா தெரியும். பின்ன அப்படி இருந்தும் ஏன் நடுநிலைவாதின்னு சொல்லிகிட்டு அலையுறீங்க?

அதல்லாம் விடுங்க. இப்ப சமீபத்துல எழுதின கட்டுரைக்கு வருவோம். என்னாது அது "தோல்வியை உணர்ந்துவிட்ட திமுக" தலைப்பு அருமைண்ணே. சென்னையை விட்டு திமுக த்லைவர்கள் எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்கன்னு எழுதி இருக்கீங்க. அதுக்கு காரணம் கேட்டா காங்கிரசுக்கு 5 சீட்டும், பாமக்வுக்கு ஒரு சீட்டும், முஸ்லீம்லீக்குக்கு ஒரு சீட்டும் குடுத்துட்டாங்களாம். கருணாநிதி திருவாரூர் ஓடிப்போறாராம். சரி ஓடட்டும். ஆனா அதுல ஒரு லாஜிக் இருக்குதே. அவரு சொந்த ஊரு அது. கடைசி காலத்தில் அங்க போகனும்னு ஆசைப்படுகின்றார்ன்னு ஒரு லாஜிக் இருக்குது. ஆனா ஜெயலலிதா பர்கூர்ல நின்னு ஜெயிச்சு முதல்வரா வந்ததை பத்தி ஏன் நினைச்சு பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. பர்கூர் அந்தம்மா சொந்த ஊரா? ஆண்டிப்பட்டி அவங்க சொந்த ஊரா? எம் ஜி ஆருக்கு ஆண்டிப்பட்டி சொந்த ஊரா? நெடுஞ்செழியனுக்கு சேடப்பட்டி சொந்த ஊரா? அவங்க எல்லாம் தமிழ்நாட்டிலே எங்க வேண்டுமானாலும் நிக்கலாம். அப்ப அவங்க பயந்து போய் சென்னையை விட்டு போனதா நினைக்க மாட்டீங்க. ஆனா திமுக தலைவர் போனா மாத்திரம் உங்களுக்கு புசு புசுன்னு எரியும்.

சரி உங்க வாதத்துகே வருவோம். திமுக சென்னையை விட்டு பயந்து போய் ஓடுதுன்னா, அங்க ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுதுன்னா அங்க உங்க த்லைவி ஜெயலலிதா நிக்க வேண்டியது தானே? இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு அண்ணாச்சி.

காங்கிரஸ்ல என்னவோ விடியல் சேகரும், ஞானசேகரும் தான் தீவிர திமுக ஆதரவாளர்ன்னு சொல்றீங்க. ஆனா பீட்டர் அல்போன்ஸ் எல்லாம் ஜாக்கிரதையா மறந்து போயிட்டீங்க. இப்ப இருக்கும் சிட்டிங் எம் எல் ஏ எல்லாருமே திமுக அரசால் பயன் அடைந்தவர்கள் என்கிற ரீதியில் திமுக ஆதரவாளர்கள் தான். அதை எல்லாம் விடுங்க. அது திமுக-காங்கிரஸ் பிரச்ச்னைன்னு போகாம உடனே ரெண்டுத்துக்கும் பிரச்சனைன்னு சண்டை மூட்ட பார்க்குறீங்க. அதுக்கு உடனே ஈழத்தமிழர் போர்வையை எடுத்து போர்த்திக்கிட்டு வர்ரீங்க. அட போங்கண்ணே, நீங்க அரசியலுக்க்கு லாயக்கு இல்லை. சினிமாதான் உங்க தொழில். சீசன் பிசினஸ் பண்ணாதீங்க. அது எப்போதும் எடுபடாது. காமடியனா ஆகிடுவீங்க. உங்க மேல இருக்கும் அன்பினாலதான் சொல்றேன்.

\\தி.மு.க., காங்கிரஸைவிடவும் ஓட்டுப் போடக் காத்திருக்கும் மக்களாகிய நாம் இன்னமும் அதீத புத்திசாலித்தனத்துடன், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பட்டை நாமம் போட வேண்டியது நமது கடமையாகும்..\\

அடிக்கடி நாம் நாம்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அண்ணே, அது என்ன ஒட்டு மொத்த தமிழகமுமா? இல்லாட்டி உங்க ரசிகர் கூட்டம் மட்டுமா? ரசிகர் கூட்டம்னு சொன்னா அவங்க எல்லாம் டொரண்டோ, நார்வேன்னு தானே இருககங்க. அவங்க எப்படி உங்க எழுத்தில் மயங்கி திமுக காங்கிரஸ்க்கு எதிர்ப்பா ஓட்டு போடுவாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாருங்க அண்ணே!

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். சட்டபேரவையில் லீவ் தீர்மானம் போட்டவரு ஆதரவாளரு சொல்றாரு!!!

லை

இந்த சதீஷ்குமார்ன்னு ஒரு பையன் தொல்லை தாங்கலைங்க. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். அதை சொல்றது யாருன்னு பாருங்க. ஆர்.கே.சதீஷ்குமார்ன்னு ஒரு நடுநிலைவாதின்னு முகமூடி போட்டுகிட்டு உளறி கொட்டும் அதிமுக பினாமி. நான் அதிமுகன்னு சொல்லு. இதத சொல்லு. சரின்னு கேட்டுக்கறேன். அது என்னய்யா அதிமுகன்னு சொல்லிக்க இத்தனை ஒரு வெட்கம்? அது என்ன பிராத்தல் கம்பனியா?

\\கலைஞர் தன் முதுமை வயதிலும் தன் மக்களுக்காக மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக போராடுவது வருத்தமாக இருக்கிறது.\\

இருக்காதா பின்ன? உன் தலைவிக்கு தான் குடும்பமே கிடையாதே. சசிகலா & பேமிலி தான் உங்க குடும்பம். அவங்க அடிச்ச கோடி எல்லாம் தான் சந்தி சிரிச்சுதே.

.\\பல தாத்தாக்கள் 70 வயதிலேயே கயித்துக்கட்டிலிலும்,திண்ணையிலும் சுருண்டு விடும் இக்காலத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி 6 வது முறையும் முதல்வராவேன் என குழந்தை போல அடம்பிடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...\\

உனக்கு எங்க வலிக்குது சாமி?

\\கடுமையான உழைப்பும்,சளைக்காமல் பதில் சொல்லவேண்டியதுமான பொறுப்பில் அமர்ந்து கொண்டு ,தன் இறுதிகாலம் வரை தமிழ் மக்களுக்காக உழைப்பேன்...என சுயநலம் இல்லாத அவரது மக்கள் சேவை மெய்சிலிர்க்க வைத்தாலும்,நடமாட முடியாத ஒரு தாத்தா மீண்டும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என துடிப்பது நமக்கு ரத்தக்கண்ணீரை வர வைக்கிறது..\\

நீ ரத்த வாத்திதான் எடேன். எங்களுக்கு என்னா வந்தது.

\\ஒபோதும் தாத்தா ..இதுவரை தோல்வியே அடையாத உங்கள் எம்.எல்.ஏ வரலாறு மாறிவிடபோகிறது...6 வது முறையும் முதல்வர் என்ற கனவு ,ஆசை நிராசை ஆகிவிட போகிறது....\\

இதுவரை 11 தேர்தல்ல ஆளானப்பட்ட தஞ்சை பரிசுத்தநாடாராலேயே புடுங்க முடியாததை நீங்க புடுங்க போறீங்களா? எனக்கு வாயாய சிருக்க முடியலை. பர்கூர்ல சுகவனம் என்கிற சித்தெறும்பு வச்சு நாங்க வறுத்து எடுத்தது பத்தாதா தம்பி?

\\என் அரசியல்வாழ்க்கையில் தமிழனுக்காக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் நான் 5 முறை முதல்வாராக இருந்தபோது சாதித்து விட்டேன்..இனி தமிழனுக்காக தமிழுக்காக செய்ய வேண்டிய தொண்டு எதுவும் இல்லை என அறிவித்து விட்டு அரசியல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.\\

இன்னும் இல்லை. அதிமுக, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியை நாட்டை விட்டு அனுப்பினால் தான் கலைஞரின் அரசியல் பொது வாழ்க்கை நிறைவுற்ற மாதிரின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க தம்பி சதீசு!

\\பல கோடி வசூல் செய்து .செந்தமிழ்மாநாடு நடத்திவிட்டீர்கள்....\\

ஆமா நீ வந்து பார்த்த அதை. வசூல் செஞ்சதை பார்த்த மாதிரி கிழிச்சுவிடுறியே!

\\ஈழத்தமிழர்களுக்கு பால் ஊற்றி விட்டீர்கள்...\\

நீங்க என்னா ஊத்துனீங்கன்னு கொஞ்சம் எடுத்துவுடவா?

\\ஸ்பெக்ட்ரம் மூலம் தமிழன் புகழ் உலகம் உள்ளளவும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...\\

வந்துட்டான்யா யோக்கியன். சொம்பை எடுத்து உள்ள வை. டான்சிராணி, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியும் அதன் ஜோடிபுறாவும் செய்தது எல்லாம் தமிழன் தலைநிமிர வைத்த நிகழ்சிகளா?

\\வாரிசுகளை கொண்டு வர தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என சொல்லி விட்டு மகனை துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்...\\

அதை பத்தி கவலையோ சந்தோஷமோ படவேண்டியது திமுககாரங்க நாங்க தானே. உனக்கு எங்க வலிக்குது?

\\சோனியாவின் காலில் விழுந்து ,அண்ணா வளர்த்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்...\\

கால்ல விழும் கலாச்சாரம் பத்தி யார் பேசுவதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?

சீ தூ.... நீ எல்லாம் எழுதினா ஒரு பயலும் கேட்கமாட்டான்னு நினைச்சியா? இனி உன் பதிவு எல்லாத்துக்கும் எதிர் பதிவு உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் ஜாக்கிரதை! சட்டசபையிலே உங்க தலைவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் கேட்டு தீர்மானம் கொண்டு வந்தீங்களே? நீங்க தானே அரசியலை விட்டே ஓடிப்போகனும் என்பதை ஏன் மறந்துவிட்டு பேசுகின்றாய் அரைவேக்காடு தம்ப்ரீரீரீ...

விருச்சிககாந்த் ஆகிய நான்!!!

என் பெயர் விருச்சிககாந்த். அதே அதேதான். விருச்சிகம் + காந்த் = விருச்சிககாந்த். எனக்கு அவ்வளவா எழுதல்லாம் வராதுங்க. ஆனா இந்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் கலைஞர் எதிர்ப்பு என்கிற போர்வையில் நடத்தும் அநியாயத்தை எதிர்க்கும் விதமாக நானே எழுத வந்துட்டேன்.  இது தேர்தல் நேரமாச்சா. அதான் ஒரிஜினல் திமுக பதிவர்கள் எல்லாரும் பிசியாகியிருப்பாங்க. இந்த நேரத்தை பயன்படுத்திகிட்டு கலைஞரை எதிர்த்து ஊளையிடும் ஓநாய்களுக்கு பதில் சொல்லத்தான் நானே களம் இறங்கிவிட்டேன். ஜூனியர்விகடன், ரிப்போர்ட்டர்காரனெல்லாம் காசு வருதுன்னு கத்திகிட்டு இருக்கானுங்க. ஆனா இந்த வலைப்பதிவிலே என்னா மயித்துக்கு கலைஞரை திட்டி தீர்க்குறானுங்கன்னு தான் தெரியலை. எல்லாருக்கும் பதில் சொல்லத்தான் இந்த வலைப்பூவை ஆரம்பிச்சு இருக்கேன். அடுத்த அடுத்த பதிவிலே பார்ப்போம். நன்றி வணக்கம்.