Total Pageviews

Tuesday 10 May 2011

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...குழலி அண்ணன் ஸ்பெஷல் பதிவு!


நான் ஒன்றும் திமுகவை காக்க வந்த தேவதூதன் இல்லை. நான் வந்து தான் திமுக காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் திமுக இல்லை. ஆனாலும் திமுகவை சாடுபவர்களை நான் சாடுகிறேன். கேட்டால் தனிமனித தாக்குதல் என்கிறீர்கள். நான் கூகிள் பஸ்ஸில் இதுவரை வெளியிட்டது ஒரே ஒரு பஸ் மட்டுமே. ஆனால் பல பஸ்கள் பார்க்கும் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்து வருகின்றது. மூன்று நாட்களுக்கு முன்னர் அண்ணன் குழலி என்கிற தீவிர திமுக எதிர்ப்பாளர் ஒரு buzz ல் "விருச்சிககாந்த்" என்னும் அனானிக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம்" என்கிற ரீதியில் எழுத அதில் மேலும் எனக்கு என்னவோ அகில உலகில் இருக்கும் அத்தனை திமுக பதிவர்களும் ஆதரவு கரம் நீட்டுவதாகவும் அதற்காக அவர்களுக்கும் சேர்த்து ஒரு ஒப்பாரி வைத்திருந்தார். நான் அங்கு சென்று என் தரப்பு வாதங்களை ஒரு ஆறு பின்னூட்டமாக போட்டிருந்தேன். ஆனால் அதில் மூன்று மட்டும் பிரசுரம் ஆனது. மீதி பின்னூட்டங்கள் அண்ணன் குழலி அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.

எனக்கு மனதில் பட்டதை எழுதுகின்றேன். எனக்கு எந்த திமுக பதிவர்களும் ஆதரவு கொடுப்பது இல்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் நிரந்தரமாக இருந்து கொண்டு இருப்பேனே. அதிலிருந்தே தெரியவில்லையா? அது போகட்டும். உடனே அண்ணன் உண்மைதமிழன் அந்த பஸ்ஸில் வந்து "நான் திருவாளர் விருச்சிககாந்தை என் பஸ்ஸில் தடை செய்து விட்டேன். அவர் எழுதுவது என் பார்வைக்கு வராது. தொடர்சியாக எல்லோரும் அதே போல செய்தால் அவர் எழுதாமல் ரஜினி போல இமயமலைக்கு போய்விடுவார்" என சொல்ல உடனே குழலி, அத்திவெட்டி ஜோதிபாரதி,  பின்னர் அரசியல் பதிவுகள் எழுதும் மா.சிவகுமார் ஆகியோர்  என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்வதாக அறிவிப்பு செய்து விட்டனர். எனக்கு சர்வமும் அடங்கி போய்விட்டது. இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். அய்யகோ... இந்த வலைப்பூவை வைத்து தான் நான் மூன்று வேளை உணவும், இருக்க இருப்பிடமும், கட்டிக்கொள்ள வேட்டியும் பெற்று வருகின்றேன். இதை கேட்க நாதி இல்லையா இந்த வலையுலகில்.

என்னை அவர்கள் தடை செய்தமைக்கு கூறிய காரணங்கள் மிகவும் அருமை, அதாவது நான் தனிமனித தாக்குதல் நடத்துகின்றேனாம். சரி இருக்கட்டும். நான் ஆர் கே சதீஷ்குமார் என்னும் பதிவரை கூட அரசியல் கருத்துகளோடு மட்டுமே தம்பி என்றே விளித்து கட்டுரை எழுத தொடங்கினேன். ஆனால் அவர் என் குடும்பத்தை விமர்சித்து எனக்கு மெயில் அனுப்பினார். பின்னர் இருவரும் தனி மெயிலில் திட்டிக்கொண்ட சம்பவம் நடந்தது. பின்னர் தான் நான் தம்பி என அழைப்பதை விடுத்தேன். அதே போல உண்மை தமிழனை அண்ணன் என்றே அழைத்து அவர் கருத்துகளை எதிர்த்தேன். ஆனால் நான் எப்போதும் எந்த பதிவரின் குடும்பத்தை இழுத்தது கண்டிப்பாக  கிடையவே கிடையாது. ஆனால் அதே நேரம் அந்த பதிவர்கள் தனிமனித தாக்குதல் செய்யாதவர்கள் மிகவும் நாகரீகமாக எழுதுபவர்கள் என உங்கள் நெஞ்சில் வை வைத்து சொல்லுங்கள் பார்ப்போம்.

இதே உண்மைதமிழன் அண்ணன் அவர்கள் என் கட்சி தலைவர் கலைஞரை சாக வேண்டும் என சொன்ன போது அது தனிமனித தாக்குதல் இல்லையா? இதே குழலி அண்ணன் கலைஞரை பேசாத பேச்சா? இதோ பாருங்கள்
. \\\\Purushothaman Ponusamy  •  Nov 16, 2010  •  Buzz  •  Public
17,60,00,00,00,000 
ரூபாய் மிச்சமாயிருக்கும். புரிகிறதா.. ஆம் ஆண்டிமுத்து, ஆ.ராசாவின் தந்தை. 1962ம் ஆண்டு, அவர் இரவுக் காட்சிக்கு போயிருந்தால், இந்தியா இந்த வரலாறு காணாத ஊழலை சந்தித்திருக்காது. 


--- சவுக்கு பாணி சரவெடி, உடன்பிறப்புகள் படித்தால் ஹை பிபி உறுதி :-)
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்….
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்படி ஒரு பஸ். அதை லைக் செய்திருப்பது யார் யார்? இதோ என்னை பஸ்ஸில் தடை செய்ய சொன்ன அண்ணன் உண்மைதமிழன், அதை ஒப்புக்கொண்டு தடை செய்த அத்திவெட்டிஜோதிபாரதி, ...  என்ன ஒரு வக்கிரம் பாருங்கள். ஆண்டிமுத்து அவர்கள் 1962 ல் இரவு காட்சிக்கு போயிருந்தால் என சொல்வது தனிமனித தாக்குதல் இல்லையா? அதற்கும் மேலாக ஒரு படி மேலாக " முத்துவேலர் இரவு காட்சிக்கு போயிருந்தால்" என அடுத்தது சொல்கிறார் குழலி அண்ணன். பின்னர் "அந்த கொடுப்பினை தமிழகத்துக்கு இல்லாமல் போய்விட்டது" என்றும் சொல்கிறார். இதே பஸ்ஸில் அண்ணன் அபிஅப்பா வந்து "நீங்க ஒன்னும் சிங்கை பிரஜை இல்லையே. இந்தியன் தானே, தமிழ்நாட்டு தமிழன் தானே. தமிழக முதல்வர் இந்திய அமைச்சர் அப்பனை கண்டமேனிக்கு திட்டுவது தான் உங்களுக்கு நகைச்சுவையா போயிடுச்சா. சரி நீங்க ஓட்டு போடலைய்யா. சரி இந்த ஜனநாயக ஆட்சியிலே அவங்க மெஜாரிட்டில தான வந்திருக்காங்க. அவங்களை விமர்சிப்பப்ப எதும் சொல்லலையே. அவங்க அப்பா அம்மாவை விமர்சிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு? மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனம். இதை நகைச்சுவைன்னு வேற சப்ப கட்டு அசிங்கமா இருக்கு குழலி!" என சொல்கிறார். பின்னர் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்கள் "அமைச்சர் தவறு இழைத்தாகவே இருக்கட்டும். அதற்காக அவர் தந்தையின் இல்வாழ்வு உறவை கொச்சைப்படுத்தி அதில்  மகிழ்வதும்,.இரசிப்பதும்..??? நாம் மனிதர்கள்.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை :((" இப்படி சொல்கின்றார்.  என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த கோவிகண்ணன் சொல்கிறார் அங்கே " தலைப்பு சூப்பர்". என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த மற்றும் ஒரு பதிவர் மா. சிவக்குமார் "  தலைப்பு in bad taste :-( '' என்று சொல்லிவிட்டு  போகின்றார். அங்கே குழலி அண்ணன் பஸ்ஸில் தலைப்பு பேட் டேஸ்ட் என்று சொன்ன மா.சிவகுமார் நான் தனிமனித தாக்குதல் நடத்துகிறேன் என சொல்லி தடை கோரும் தீர்மானம் எழுதிய உண்மை தமிழன் தமிழக முதல்வரை சாக சொல்லி தனிமனித தாக்குதல் செய்த போது அவரை தடை விதிக்க சொல்லவில்லை, அதே பதிவில் எனக்கு எதிராக பேசிய கபீஷ் அம்மையார் இப்போது குழலியின் இந்த தனிமனித தாக்குதலுக்காக குழலி அண்ணனை பஸ்ஸில் இருந்து தடை செய்வாரா?

இதே குழலி அண்ணன் மார்ச்  31ம் தேதி ஒரு பஸ் விடுகின்றார். அதிலே \\\\\\\சிங்கமுத்து on the march...வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)\\\\  இது தனிமனித தாக்குதல் இல்லையா?

இதே குழலி அண்ணன் டிசம்பர் 8, 2010ல் ஒரு பஸ். அதிலே
 \\இன்றைய அரசியல் ஜோக் 
தலைவரின் அல்லக்கை: தலைவரே உங்களுக்கு "போபால புரம் வீடு" மட்டும் தான் சொந்தம்னு நீங்க சொத்துகணக்கு காண்பிக்கும்போது சொன்னது தப்பா போயிருச்சி.. 
தலைவர் : ஏன்யா என்ன ஆச்சி? 
தலைவரின் அல்லக்கை: எவனோ "பிஐடி காலணி" வீட்ல பூந்துட்டானாம் தலைவரே\\

இந்த பஸ் யாரால் எல்லாம் லைக் செய்ய படுகின்றது என பாருங்க. அதே உண்மைதமிழன், அதே அத்திவெட்டிஜோதிபாரதி. இவர்கள் எல்லாம் முழங்குகின்றனர் "விருச்சிககாந்து என்னும் பதிவர் தனிமனித தாக்குதல் நடத்துகின்றார். அவரை தடை செய்வோம்" என !

இந்த பதிவை படிக்கும் நடுநிலைவாதிகளே! நீங்கள் முடிவெடுங்கள். யார் தடை செய்யப்பட வேண்டிய நபர் என்று. உண்மை தமிழன், குழலி கோஷ்டிகளா? அல்லது நானா?

இதோ பாருங்கள்! எனக்கு திமுகவை பிடிக்கும். திமுகவை மட்டுமே பிடிக்கும். திமுகவை வசைபாடினால் பதிலுக்கு லாவணி பாடுவேன். இப்போதும் எப்போதும் சொல்கிறேன். எனக்கு தனிப்பட்ட விரோதி என யாரும் இல்லை. என்னை பார்த்து நான் சகபதிவர்களை வசைபாடுவதாக குற்றம் சுமத்தும் முன்பாக நீங்கள் "தமிழக முதல்வரையே தனிப்பட்ட முறையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி அவர் மனைவியை பற்றி, அவரது மகள் பற்றி அவரது தாயார் தந்தையார் பற்றி கேவலமாக பேசுகின்றீகளே, அது எல்லாம் தனிமனித தாக்குதல் இல்லையா? நான் எப்போதாவது நான் எதிர்க்கும் பதிவர்களின் குடும்பத்தை எதுவும் சொன்னது உண்டா என நினைத்துப்பார்க்கவும்.

இனி இது போல தனிப்பட்ட முறை விளக்கங்கள் என்னிடம் இருந்து வராது. என் கட்சிப்பணி மட்டுமே செய்வேன். மே 13ம் தேதி வெற்றிப்பதிவு இடுகின்றேன். வாருங்கள்!


Saturday 7 May 2011

கோவிகண்ணனின் அருவெறுப்பான முகம்... உண்மை தமிழனின் காபி பேஸ்ட் முகம்...


யாரும் தொடாத பொருளை தொடும் தைரியம் திமுககாரனுக்கு உண்டு. அங்கே உண்மை இருந்தால்....

கனிமொழி கைதா இல்லையா என பட்டி மன்றம் நடத்தும் என் அன்பு உண்மை தமிழன்களே, திமுகவின் கொடூர முகம் என புலிப்பாய்ச்சல் பாயும் கோவி கண்ணன் வகயறாக்களே, தினமலமே மற்றும் ஆசையாய் துடிக்கும் ஜீவி, ரிப்போர்டர்களே!

உங்கள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி விட்டாகி விட்டது. சம்மந்தபட்டவர்கள் எல்லோரும் கைதாகிவிட்ட நிலையில் கனிமொழி கைது ஏன் இன்னும் நடக்கவில்லை என கொந்தளித்து பேசும் உண்மை தமிழன் அண்ணே, உனக்கு பதில் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன? நீயாகவா எழுதுகின்றாய்? நீ வயிறு எரிச்சல் உள்ளவன். "அய்யோ எல்லோருக்கும் எல்லாமே கிடைக்குதே அப்பன் முருகா எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை" என பொறாமை தீயில் உழலும் உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நீயே ஜூவியை காபி பேஸ்ட் அடிக்கும் சாதாரண மனிதன். சினிமா உலகில் யார் யாரை வைத்து இருக்கின்றனர் என பேசும் ஒரு சாதாரண ஆள். உனக்கு அரசியல் ஆசை வந்ததே வயிறு எரிச்சல் மட்டுமே காரணம். உதாரணம் சொல்லவா?

===========================================

\\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\\..

ஒரு மாநில முதல்வர் இறந்து போனதுக்கு ஒரு ஆறுதல் அஞ்சலி பஸ் விடுகின்றார். அதாவது  \\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\\\

இதில் நீங்கள் நன்றாக  கவனிங்க வேண்டும்.
1. டோர்ஜி காண்டுவுக்கு 24 கோடி சொத்து இருக்கின்றது.
2. இந்தியாவின் 3 வது பணக்கார முதல்வர். (அனேகமாக  கலைஞர் தான் முதல் பணக்கார முதல்வர் என்று மறை முகமாக கூட சொல்ல நினைட்து இருப்பார் போல)
3.அவருக்கு 4 மனைவிகள்
4. அவருக்கு 5 பிள்ளைகள்

. இதிலே ஹிட்டன் வயித்தெறிச்சல் தான் பிரதான எரிச்சல் அதாவது

 5. இது எதுவுமே எனக்கு இல்லியே முருகா முருகா..

மேற்கண்ட அவரது பஸ்ஸில் எங்கேயாவது அஞ்சலி வாக்கியம் இருக்குதா? இல்லையே? அண்ணே, நீ இன்னும் 50 வருஷம் எழுதி கிட்டே இருந்தாலும் முன்னேற முடியாது அண்ணே! உனக்கு ஏன் டோண்ஜி காண்டு மேலே இத்தனை காண்டு? உன்னால சகிச்சுக்க முடியாது அண்ணே, ஒரு பொண்ணாட்டி வச்சிருக்கவனையே உன்னால ஏத்துக்க முடியாது. அதிலும் அந்த ஆள் 4 பொண்டாட்டி வச்சிருந்தா விட்டுடுவியா? உனக்கு உன்னை போல மொட்டை பையனா இருக்கனும், ஜெயா போல மொட்டை பொண்ணா இருக்கனும். அதான் பிடிக்கும். போண்ணே போ! இதிலே கனிமொழி சார்பா வாதாடின ராம்ஜெத்மலானி மேல உனக்கு கோவம் கோவமா  வருது. உனக்கு இங்கிலீசும் தெரியாது. சட்டமும் தெரியாது. அந்த ஆள் என்ன சொன்னாருன்னு ஹிண்டு பேப்பர்ல படிச்சு தெரிஞ்சுக்கவும் முடியாத நிலை.

நாங்க என்ன சொன்னோம். சட்டப்படி நாங்க இந்த நிலையை எதிர் கொள்வோம் என சொன்னோம். சட்டம் யாருக்கு நல்லா தெரியுமோ அவங்க கிட்ட சொல்லி வாதாட வைப்பதில் என்ன தப்பு? சரி உன் பேச்சுக்கே வர்ரேன். கோவி கண்ணன் பேச்சுக்கே வர்ரேன். "கனிமொழி கலைஞர் டிவியின் சூத்திரதாரி. ஆனா கேஸ்ல சி பி ஐ என்ன சொல்லுச்சு? கலைஞர் டிவில தினமும் அவங்க தான் ஆட்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு தானே. எப்படி திடீர்ன்னு பணம் 240 கோடி வந்துச்சுன்னு தானே? எப்படி திடீர்ன்னு 240 கோடி வந்துச்சுன்னு கேட்க வேண்டிய ஆள் அமலாக்க துறை தானே தவிர ஸ்பெக்ரம் பாட்டியாலா நீதிமன்றம் இல்லைன்னு தானே ராம்ஜெத்மலானி வாதாடினாரு? அமலாக்க துறை என்ன கேஸ் போட்டாலும் அதை சந்திக்க தயார்ன்னு தானே நாங்க அதாவது கனிமொழி தரப்பு சொல்லுது. அது பொருளாதார குற்றப்பிரிவிலே தானே வரும். அங்க நாங்க பார்த்துக்கறோம். ஆனா 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ராஜா சம்மந்தப்பட்டது. அதுக்கு அந்த துறையின் மந்திரி "raja is the only person for all its responsibility"ன்னு தானே ராம்ஜெத்மலானி சொன்னாரு. உடனே இதை நேரிடை மொழிபெயர்பு செய்துவிட்டு நீங்க "கனிமொழியை காப்பாத்த ராஜா பலிகடா"ன்னு பீலா விட்டுகிட்டு இருக்கீங்க. ராஜா அடிப்படையிலே ஒரு வக்கீல். அவருக்கு இதல்லாம் தெரியும். இது எங்க உட்கட்சி பிரச்சனை. நீங்களே அன்றைக்கு ஜூவி சொன்னதா சொன்னீங்க, அதாவாது இடியாய் இறங்கிய அழகிரி"ன்னு அட்டை படம் போட்டு எழுதினீங்க. ஆக திமுக உட்கட்சி பிரச்ச்னை இதல்லாம். இங்க ராஜாவை காட்டி கொடுத்து கனிமொழியை காப்பாத்தினதா பீலா விட்டுகிட்டு திரியுறீங்க. சட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அதன் வாத பிரதிவாதம் பத்தி எதாவது தெரியுமா?

நீங்க எவனும் யோக்கிய சிகாமணி இல்லை. முதல்ல உங்க மூஞ்சியை கண்ணாடில பார்த்துகுங்க. தான் போட்ட கையெழுத்து தன்னுது இல்லைன்னு ஜெ சொன்னப்ப அதிமுகவின் அகோர முகம்னு கோவிகண்ணன் எழுதவில்லை. அதே போல குழந்தைவேலு அமைச்சராக அதிமுகவிலே இருந்த போது கலைஞரை பற்றி அவதூறு பேசிய போது கலைஞர் தொடை தட்டி சவால் எழுப்பிய போது அதிமுகவின் கோர முகம் என எந்த பன்னாடையும் எழுதவில்லை. அதல்லாம் அந்த பன்னாடைகளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இதே சட்டரீதியாக எல்லாம் நாங்கள் செய்யும் போது கோவிகண்ணன் என்னும் பதிவருக்கு திமுகவின் கோர முகம் கண்ணுக்கு தெரியுதா? இன்னும் எத்தனை கோரமுகம் காண்பிக்க வேண்டும் அதிமுகவுக்கு? அதல்லாம் கண்ணுக்கு தெரியாது உங்களுக்கு. ஆனால் சதா சர்வகாலமும் கனிமொழியை பற்றி மட்டுமே உங்கள் நினைவுகள். அண்ணன் உண்மை தமிழன் மொட்டை பையன். ஆனா கோவிகண்ணன் பேரன் பேத்தி எடுத்த ஒரு பழுத்த ஆனால் மூளை வளர்சி இல்லாத திமுக எதிர்பு ஆள். மூளை வளர்சிக்கும் பேரன் பேத்தி எடுப்பதற்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாவிடினும் நான் சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கின்றது. கோவிகண்ணனின் அகோர முகம் என நான் தலைப்பு வைத்ததால் "தனிமனித தாக்குதல்" என அவருடைய பிசிக் வைத்து நான் சொல்வதாக நினைத்து கொண்டால்  மன்னிக்கவும் .. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் நான் அந்த வகையில் சொல்லவில்லை. அப்படி நினைத்து கொண்டால் நானும் இந்த வலைப்பூவும் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்கின்றேன்.

இதோ இரு தரப்பு வாதமும் கேட்ட பின்னர் மே 14க்கு ஒத்தி வைக்கப்பட்டது தீர்ப்பு. அதனால் ஜூவி முதல் அதை காப்பி அடிக்கும்  உ. தமிழன், சதீச்சு எல்லாரும் மாட்டு சாணியை ஒரு பக்கெட்ல கரைத்து வைத்து கொண்டு தன் தலையிலேயே உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என சொல்லிகொண்டு தலையில் ஊற்றி கொண்டு பிஞ்ச வெளக்குமாறால் அடித்து கொள்ளுங்கள். ஏனனில் திமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். பல சட்ட மேதைகளுக்கு கூட பாடம் புகட்டும் வித்தகர்கள் உள்ள இடம்.

சம்மந்தபட்ட எல்லோரும் கைது ஏன் கனிமொழி மாத்திரம் கைது இல்லை என சொல்லும் கோவிகண்ணா! சி பி ஐ வாதத்தில் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் பேசியது கனிமொழி என சொன்னது. அப்படியெனில் நீராராடியா ஏன் கைது செய்யப்படவில்லை என உண்மைதமிழனோ, ஜூவியோ, ரிப்போர்டரோ கேட்கவில்லை. சம்மந்தபட்ட ரத்தன் டாட்டா ஏன் கைது செய்யபடவில்லை? சம்மந்த்பட்ட அனிலம்பானி ஏன் கைது செய்யப்படவில்லை? கேட்டால் உடனே அவர்கள் தொழிலதிபர்கள். அவர்களால் வேலை வாய்பும் அரசுக்கு  வரியும் வருகின்றது என சொல்வீர்கள். ஆனால் அப்படி வரி செலுத்தினால் மட்டும்  யோ க்கியன் பட்டம் தானாக வந்து ஒட்டி கொள்ளுமா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் இதன் உரிமையாளர் ஒரு பொருளாதார குற்றத்தில் கடந்த ஏழு வருடமாக சிறையில் இருக்கின்றார். ஆனால் அவரது நிறுவனமும் அதன் வேலையாட்களும் அதனால் பாதிக்கப்படவும் இல்லை. கொரிய அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலும் இல்லை. அப்படி இருக்க ரத்தன் டாட்டாவை உள்ளே வைய்யுங்கள், அனில் அம்பானியை உள்ளே வையுங்கள். அதான் சி பி ஐ நீதிமன்றம் சொல்லிவிட்டதே? யார் எந்த பதவியில் இருந்தாலும் விட மாட்டோம் என. அத்தனை ஏன் அவர்கள் ஆசைநாயகி நீராராடியா கூட விசாரணை வளையம் மட்டுமே. ஆனால் கைது இல்லை என்றால் கனிமொழி கைது என்பது அரசியல் சம்மந்தப்பட்டது தானே உண்மை தமிழன் அண்ணே, நான் இங்கே கோவிகண்ணனை ஊறுகாய்க்கு கூட கூப்பிடவில்லை. ஏனனில் அவருக்கே ஏகப்பட்ட குழப்பம். தான் ஒரு இந்துத்துவாவா அல்லது நாத்திகனா, ஆத்திகனா என ஏகப்பட்ட குழப்பம். அவர் திமுக எதிர்நிலையில் இருப்பது மட்டுமே ஒரே குழப்பம் இல்லாத நிலை.

அனால் உண்மைதமிழன் நீங்கள் ஜூவியின் கட்டுரகளை பிரசுரித்து எனக்கு 500 ஆகியது 1000 ஆகியது பதிவு என ஹிட் சேர்க்கும் ஆள். அதாவது ஸ்டாம்ப் கலக்ஷன் சின்ன பையன் போலே. யாருக்கும் எந்த ஏழைகளுக்கும் பயன்படாத அந்த ஸ்டாம்ப் கலக்சனுக்கும் உங்களின் ஹிட்டுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லை. அது உங்களுக்கு பயன் படுகின்றதா என பாருங்கள் முதலில்...

போங்க போங்க போய் அடுத்த வேலை இருந்தால் பார்க்கவும். இனி கனிமொழி பற்றி எல்லாம் பேசி எங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

Thursday 5 May 2011

அண்ணன் "புதுகை அப்துல்லா"வை வாழ்த்துவோம்! திமுக இணைய அணி வாழ்க வாழ்கவே!


இதோ மேலே இருக்கும் ஆனந்தவிகடன் செய்தியை பார்கவும். படிக்கவும்.   இப்போது நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகின்றேன்.

இப்போதைய 2011  தமிழக சட்ட மன்ற தேர்தல் யாருக்கு ஆதரவு அலை, யாருக்கு எதிர்ப்பு அலை, ஆட்சி மாற்றம் வேண்டுமா, வேண்டாமா, தேர்தலில் பிரதானமான பிரச்சார விஷயம் என்ன என்று ஆராய்ந்தால் மிகச்சரியாக ஒன்று புலப்படும். யாருக்கும் ஆதரவு அலையோ அல்லது யாருக்குமான எதிர்ப்பு அலையுமோ இல்லை. அவரவர் செய்த நன்மை தீமைகளின்  குவாண்டிட்டி, டெண்சிட்டி அதாவது அளவு, விஷயத்தின் வீரியம் அல்லது அடர்த்தி  இவைகளை மட்டுமே சீர் தூக்கி ஓட்டுச்சாவடிக்கு மக்களை கொண்டு சென்று ஓட்டு போடும் படி வைத்தன என்பதே சரி. அப்படி பார்க்கையில் "ஸ்பெக்ட்ரம்" பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு, ஆகியவை ஆளும்கட்சிக்கு எதிராக பேசப்பட்ட முக்கிய விஷயங்கள். இவை அத்தனையுமே கடைக்கோடி வாக்காளனுக்கு கொண்டு சேர்த்தது யார்? அதிமுக பேச்சாளர்களா?, தோழமை கட்சிகளின் பேச்சாளர்களா? சுவரொட்டிகளா?, சுவர் விளம்பரங்களா? துண்டு பிரசுரங்களா? தெரு முனை கூட்டங்களா? என்றால் இவை எதுவுமே இல்லை. கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளே என்றால் மிகையாகாது.

ஆக திமுக தன் விரலை கொண்டே தன் கண்ணை குத்தி கொண்டதாக எதிரணியினர் சொன்னாலும் திமுக அதை பற்றி எதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒரு டெக்னாலஜி வந்து விட்டது. அதாவது தொலைக்காட்சி என்னும் பிரச்சார சாதனம் வந்தாகி விட்டது. அதை கொண்டு போய் கடைக்கோடி வரை சேர்பிக்கும் கடமை அரசாங்கத்துக்கு உண்டு என நினைத்தது. அதை செய்தது. அதனால் தனக்கு இப்படிப்பட்ட இடர் வருமே என திமுக நினைக்கவில்லை. சாதனம் பொதுவானது. சந்தைக்கு வந்து விட்டது. இப்போது நீயும் கூவு. நானும் கூவுகிறேன். உன் கருத்தை நீ சொல். என் கருத்தை நான் சொல்கிறேன். என் கருத்தை நான்  கீழ்மட்டம் வரை கொண்டு சேர்க்க கூடிய கட்டமைப்பு என்னிடம் உண்டு என திமுக நினைத்தது. அதனால் தான் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும், தோழமை கட்சிகளின் மக்கள் தொலைக்காட்சியும், மெகா தொலைக்காட்சியும், வசந்த் தொலைக்கட்சியும் இந்த பக்கம் வரிந்து கட்டி நிற்க அந்த பக்கம் ஜெயா தொலைக்கட்சி, கேப்டன் தொலைகாட்சி என சவளைப்பிள்ளையாக துவண்டு நின்றது.

கிட்ட தட்ட திமுக கூட்டணி வென்றாகிவிட்டது. ஆக என்ன விதமான டெக்னாலஜி வந்தாலும் கூட அதை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. இதோ இந்த தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க அறிவிப்பு செய்தாகிவிட்டது. அதையே காப்பி அடித்த அதிமுக +2 மாணவர்களுக்கும் உண்டு என சொன்னது. இதே திமுக ஆட்சி வந்தால் அனேகமாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என சொன்னதை அண்ணா பிறந்த தினத்தில் யாரும் எதிர் பார்க்கா வண்ணம் ஒரு ரூபாயாக ஆக்கி காட்டினாரே அது போல +2 மாணவர்களுக்கும் மடிக்கணினி உண்டு என சொல்லலாம்.

அப்படி மடிக்கணினி கொடுக்கும் பட்சத்தில்  என்ன நடக்கும்? +2  யார் படிப்பர்? பத்தாவது தேர்வு பெற்றவர்களில் 80 சதம் +1, +2 படிப்பர். அதாவது வருடத்துக்கு குறைந்தது 5 லட்சம் பேர். அதாவது ஒரு வருடத்துக்கு ஐந்து லட்சம் எனில் அடுத்த தேர்தல் வரும் போது 25 லட்சம் பேருக்கு கிடைத்து விடும். அவர்கள் அத்தனை பேரும் புது வாக்காளர்கள் அல்லவா? ஒரு ஒரு தொகுதிக்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்கள் இந்த மடிக்கணியை பெற்றவர்கள் அல்லவா?

ஆக எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? இணைய பிரச்சாரம் முக்கியம் அல்லவா? இப்போது எல்லாரிடமும் செல்போன் இருக்கின்றது. அதன் வழியாக ஏர்செல், ஏர்டெல் போன்றவை இப்போது தினத்துக்கு 5 ரூபாய் செலவில் அன்லிமிடட் பிரவுசிங் வசதி செய்து கொடுத்து கொண்டு உள்ளது. ஆக அத்தனை பேரும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வருவர்.  இன்றைய நிலையில் நான் மனப்பூர்வமாக ஒத்து கொள்கின்றேன். மக்கள் கலை இலக்கிய கழகம் இணையத்தில் தன் பிரச்சாரத்தை வழி நடத்துவது போல திமுக கூட செய்வதில்லை. வினவு நண்பர்களே! இப்படியே உங்கள் இயக்கத்துக்கு ஆதரவு பெருக நாங்கள் மடிக்கணினி கொடுத்து கொண்டே இருப்போமா? நிச்சயம் இல்லை. அதற்காக இல்லை. அதனூடே எங்கள் கட்சி பணியையும் பார்த்து தானே ஆக வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பினூடே அரசியல் அறிவையும் வளர்த்து கொண்டு வாக்களிக்க வேண்டுமே.

அதனால் "திமுக இணைய அணி" உண்டாக போகின்றது. இதோ எங்கள் உடன்பிறப்பு அப்துல்லா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் இத்தனை நாள் திமுகவுக்காக  தீவிரமாக இணையத்தில் செயல்பட்டதற்கான பரிசு எங்களுக்கு கிடைக்க போகின்றது.

யார் இந்த அப்துல்லா? உணர்விலும் செயலிலும் தன்னை எப்போதும் திமுகவுக்காக அர்பணித்தவர். தன் 16 வது வயதில் இருந்து மாணவர் திமுகவில் மாபெரும் பணியாற்றியவர். இதே ராஜீவ் கொலையான சமயத்தில்   எங்கள் கட்சிக்காக இரவில் பிரச்சாரம் முடித்து வந்த போது கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு தன் காலை இழக்க இருந்தவர். யார் செய்த புண்ணியமோ... காலில் பிளேட் வைக்கப்பட்டதோடு போனது. இவர் அதற்காக புதுகை அரசு மருத்துவமனையில் இருந்த போது தலைமை கழகத்தால் ஆற்காடு வீராசாமி அய்யா வந்து பார்த்து விட்டு கண்ணீர் விட்டு போனார். துவண்டாரா அப்துல்லா? இல்லை திமுககாரன் என்றைக்கும் அடக்கு முறைக்கு பயந்தவன் அல்ல. இன்னும் வீரு கொண்டு எழ எழ கட்சி பதவிகள் அவரை தேடி தேடி வந்தன. திமுக என்னும் மாபெரும் இயக்கத்தில் தனது 32 வது வயதில் பொதுக்குழு உறுப்பினர் ஆனார். இப்போது கூட விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு விண்ணப்பித்து மயிரிழையில் வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஆகி தன் கடமையை திறம்பட நடத்தி முடித்துள்ளார். மெத்த படித்தவர். முழுநேரம் மனதளவில் கட்சிக்காக தன்னை அர்பணித்து கொண்ட போதிலும் குடும்பத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். உலக நாடுகளை சுற்றி வந்தவர். இணைய அறிவு நிரம்பப் பெற்றவர். கலையுலகிலும் தன் முத்திரையை பதித்தவர்.அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர். கனிவான பேச்சுக்கு சொந்தக்காரர். தளபதியின் அன்புக்கு அடிமையானவர். தலைமைக்கு கீழ்படிந்தவர்.

இதோ கட்சி அவரை கூப்பிட்டு "திமுக இணைய அணி"க்கான அஸ்திவாரம் போட சொல்லி இருப்பதாக ஆனந்த விகடனில் செய்தி வந்துள்ளது.இனி தான் திமுகவின் இணைய பிரச்சாரம் "முறைப்படி" ஆரம்பம் ஆக இருக்கின்றது. இனி தான் கச்சேரி களைகட்ட இருக்கின்றது. அண்ணன் புதுகை அப்துல்லாவின் பணி சிறக்க திமுக பதிவர்கள் வாழ்த்துகிறோம்.