Total Pageviews

Thursday 5 May 2011

அண்ணன் "புதுகை அப்துல்லா"வை வாழ்த்துவோம்! திமுக இணைய அணி வாழ்க வாழ்கவே!


இதோ மேலே இருக்கும் ஆனந்தவிகடன் செய்தியை பார்கவும். படிக்கவும்.   இப்போது நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகின்றேன்.

இப்போதைய 2011  தமிழக சட்ட மன்ற தேர்தல் யாருக்கு ஆதரவு அலை, யாருக்கு எதிர்ப்பு அலை, ஆட்சி மாற்றம் வேண்டுமா, வேண்டாமா, தேர்தலில் பிரதானமான பிரச்சார விஷயம் என்ன என்று ஆராய்ந்தால் மிகச்சரியாக ஒன்று புலப்படும். யாருக்கும் ஆதரவு அலையோ அல்லது யாருக்குமான எதிர்ப்பு அலையுமோ இல்லை. அவரவர் செய்த நன்மை தீமைகளின்  குவாண்டிட்டி, டெண்சிட்டி அதாவது அளவு, விஷயத்தின் வீரியம் அல்லது அடர்த்தி  இவைகளை மட்டுமே சீர் தூக்கி ஓட்டுச்சாவடிக்கு மக்களை கொண்டு சென்று ஓட்டு போடும் படி வைத்தன என்பதே சரி. அப்படி பார்க்கையில் "ஸ்பெக்ட்ரம்" பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு, ஆகியவை ஆளும்கட்சிக்கு எதிராக பேசப்பட்ட முக்கிய விஷயங்கள். இவை அத்தனையுமே கடைக்கோடி வாக்காளனுக்கு கொண்டு சேர்த்தது யார்? அதிமுக பேச்சாளர்களா?, தோழமை கட்சிகளின் பேச்சாளர்களா? சுவரொட்டிகளா?, சுவர் விளம்பரங்களா? துண்டு பிரசுரங்களா? தெரு முனை கூட்டங்களா? என்றால் இவை எதுவுமே இல்லை. கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளே என்றால் மிகையாகாது.

ஆக திமுக தன் விரலை கொண்டே தன் கண்ணை குத்தி கொண்டதாக எதிரணியினர் சொன்னாலும் திமுக அதை பற்றி எதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒரு டெக்னாலஜி வந்து விட்டது. அதாவது தொலைக்காட்சி என்னும் பிரச்சார சாதனம் வந்தாகி விட்டது. அதை கொண்டு போய் கடைக்கோடி வரை சேர்பிக்கும் கடமை அரசாங்கத்துக்கு உண்டு என நினைத்தது. அதை செய்தது. அதனால் தனக்கு இப்படிப்பட்ட இடர் வருமே என திமுக நினைக்கவில்லை. சாதனம் பொதுவானது. சந்தைக்கு வந்து விட்டது. இப்போது நீயும் கூவு. நானும் கூவுகிறேன். உன் கருத்தை நீ சொல். என் கருத்தை நான் சொல்கிறேன். என் கருத்தை நான்  கீழ்மட்டம் வரை கொண்டு சேர்க்க கூடிய கட்டமைப்பு என்னிடம் உண்டு என திமுக நினைத்தது. அதனால் தான் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும், தோழமை கட்சிகளின் மக்கள் தொலைக்காட்சியும், மெகா தொலைக்காட்சியும், வசந்த் தொலைக்கட்சியும் இந்த பக்கம் வரிந்து கட்டி நிற்க அந்த பக்கம் ஜெயா தொலைக்கட்சி, கேப்டன் தொலைகாட்சி என சவளைப்பிள்ளையாக துவண்டு நின்றது.

கிட்ட தட்ட திமுக கூட்டணி வென்றாகிவிட்டது. ஆக என்ன விதமான டெக்னாலஜி வந்தாலும் கூட அதை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. இதோ இந்த தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க அறிவிப்பு செய்தாகிவிட்டது. அதையே காப்பி அடித்த அதிமுக +2 மாணவர்களுக்கும் உண்டு என சொன்னது. இதே திமுக ஆட்சி வந்தால் அனேகமாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என சொன்னதை அண்ணா பிறந்த தினத்தில் யாரும் எதிர் பார்க்கா வண்ணம் ஒரு ரூபாயாக ஆக்கி காட்டினாரே அது போல +2 மாணவர்களுக்கும் மடிக்கணினி உண்டு என சொல்லலாம்.

அப்படி மடிக்கணினி கொடுக்கும் பட்சத்தில்  என்ன நடக்கும்? +2  யார் படிப்பர்? பத்தாவது தேர்வு பெற்றவர்களில் 80 சதம் +1, +2 படிப்பர். அதாவது வருடத்துக்கு குறைந்தது 5 லட்சம் பேர். அதாவது ஒரு வருடத்துக்கு ஐந்து லட்சம் எனில் அடுத்த தேர்தல் வரும் போது 25 லட்சம் பேருக்கு கிடைத்து விடும். அவர்கள் அத்தனை பேரும் புது வாக்காளர்கள் அல்லவா? ஒரு ஒரு தொகுதிக்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்கள் இந்த மடிக்கணியை பெற்றவர்கள் அல்லவா?

ஆக எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? இணைய பிரச்சாரம் முக்கியம் அல்லவா? இப்போது எல்லாரிடமும் செல்போன் இருக்கின்றது. அதன் வழியாக ஏர்செல், ஏர்டெல் போன்றவை இப்போது தினத்துக்கு 5 ரூபாய் செலவில் அன்லிமிடட் பிரவுசிங் வசதி செய்து கொடுத்து கொண்டு உள்ளது. ஆக அத்தனை பேரும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வருவர்.  இன்றைய நிலையில் நான் மனப்பூர்வமாக ஒத்து கொள்கின்றேன். மக்கள் கலை இலக்கிய கழகம் இணையத்தில் தன் பிரச்சாரத்தை வழி நடத்துவது போல திமுக கூட செய்வதில்லை. வினவு நண்பர்களே! இப்படியே உங்கள் இயக்கத்துக்கு ஆதரவு பெருக நாங்கள் மடிக்கணினி கொடுத்து கொண்டே இருப்போமா? நிச்சயம் இல்லை. அதற்காக இல்லை. அதனூடே எங்கள் கட்சி பணியையும் பார்த்து தானே ஆக வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பினூடே அரசியல் அறிவையும் வளர்த்து கொண்டு வாக்களிக்க வேண்டுமே.

அதனால் "திமுக இணைய அணி" உண்டாக போகின்றது. இதோ எங்கள் உடன்பிறப்பு அப்துல்லா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் இத்தனை நாள் திமுகவுக்காக  தீவிரமாக இணையத்தில் செயல்பட்டதற்கான பரிசு எங்களுக்கு கிடைக்க போகின்றது.

யார் இந்த அப்துல்லா? உணர்விலும் செயலிலும் தன்னை எப்போதும் திமுகவுக்காக அர்பணித்தவர். தன் 16 வது வயதில் இருந்து மாணவர் திமுகவில் மாபெரும் பணியாற்றியவர். இதே ராஜீவ் கொலையான சமயத்தில்   எங்கள் கட்சிக்காக இரவில் பிரச்சாரம் முடித்து வந்த போது கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு தன் காலை இழக்க இருந்தவர். யார் செய்த புண்ணியமோ... காலில் பிளேட் வைக்கப்பட்டதோடு போனது. இவர் அதற்காக புதுகை அரசு மருத்துவமனையில் இருந்த போது தலைமை கழகத்தால் ஆற்காடு வீராசாமி அய்யா வந்து பார்த்து விட்டு கண்ணீர் விட்டு போனார். துவண்டாரா அப்துல்லா? இல்லை திமுககாரன் என்றைக்கும் அடக்கு முறைக்கு பயந்தவன் அல்ல. இன்னும் வீரு கொண்டு எழ எழ கட்சி பதவிகள் அவரை தேடி தேடி வந்தன. திமுக என்னும் மாபெரும் இயக்கத்தில் தனது 32 வது வயதில் பொதுக்குழு உறுப்பினர் ஆனார். இப்போது கூட விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு விண்ணப்பித்து மயிரிழையில் வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஆகி தன் கடமையை திறம்பட நடத்தி முடித்துள்ளார். மெத்த படித்தவர். முழுநேரம் மனதளவில் கட்சிக்காக தன்னை அர்பணித்து கொண்ட போதிலும் குடும்பத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். உலக நாடுகளை சுற்றி வந்தவர். இணைய அறிவு நிரம்பப் பெற்றவர். கலையுலகிலும் தன் முத்திரையை பதித்தவர்.அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர். கனிவான பேச்சுக்கு சொந்தக்காரர். தளபதியின் அன்புக்கு அடிமையானவர். தலைமைக்கு கீழ்படிந்தவர்.

இதோ கட்சி அவரை கூப்பிட்டு "திமுக இணைய அணி"க்கான அஸ்திவாரம் போட சொல்லி இருப்பதாக ஆனந்த விகடனில் செய்தி வந்துள்ளது.இனி தான் திமுகவின் இணைய பிரச்சாரம் "முறைப்படி" ஆரம்பம் ஆக இருக்கின்றது. இனி தான் கச்சேரி களைகட்ட இருக்கின்றது. அண்ணன் புதுகை அப்துல்லாவின் பணி சிறக்க திமுக பதிவர்கள் வாழ்த்துகிறோம். 

6 comments:

மரா said...

நல்ல விசயம் விகாந்த்.அப்துல்லா அண்ணனுக்கு வாழ்த்துக்கள்.

மதுரை சரவணன் said...

nalla alasal.. valththuvom abdullaavai... thanks for sharing.

குசும்பன் said...

வாழ்த்துகள் அண்ணாத்தே!

சிவக்குமார் said...

எங்க புதுக்கோட்டையில் எல்லாருக்கும் பிடித்த மனிதர் அவர்.

Ko.Vai. Aranganathan said...

வரவேற்போம் இணைய அணியை

VJR said...

நல்ல செய்தி.