Total Pageviews

Thursday 7 April 2011

"பய"டேட்டா செந்தில் என்னும் கிண்டாமணி...


..
நாங்கள்  வெற்றிக்கோட்டை தொட்டாகிவிட்டது. இன்னும் வெற்றியை அறிவிக்காமை ஒன்று தான் மீதி. எங்கள் உடன்பிறப்புகள் களப்பணியில் இருக்கின்றனர். இந்த வலையுலக கழக கண்மணிகளும் களப்பணியில் நின்று போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர்.  என்னைப்போல சிலர் மட்டுமே இணைய அட்டைகத்திகளை வெட்டி வீழ்த்தும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது காங்கிரசை வேரறுக்க கிளம்பி இருக்கும் சில அரைபிளேடுகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அந்த வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே "திமுகவை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்" என்கிற தலைப்பில் போகிற போக்கில் எங்கள் மீதும் சேறு பூசிய பின்னர் இந்த தலைப்பிட்டு உங்களுக்கு பதில் சொல்லவில்லை எனில் இந்த தமிழகம் எங்களை மன்னிக்காது நண்பரே! இருங்க சிறிது விளையாடிவிட்டு வருகின்றேன்.

****************************************************************
\\சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும்  ஒரே தி.மு.க  ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே!\\

யார் அடிமை? எது அடிமை? விட்டுக்கொடுத்து தட்டிப்பறிப்பது பற்றி உனக்கு தெரியுமா செந்தில்? நீ வெறும் உணர்சிக்கு அடிமையான கூட்டத்தை சேர்ந்த சாதாரண நபர். இலங்கை பிரச்சனையின் காரணமாக நீ காங்கிரசை அழிக்க நினைப்பது பற்றி திமுகவினருக்கு கவலை இல்லவே இல்லை. ஆனால் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரசை 50 பேர் கொண்ட கூட்டம் "நான் கிழிச்சிடுவேன்" என நா கூசாமல் சொல்லி கொண்டு பிதற்றுவதும் அதை நாங்களும் கேட்டு தலையாட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதும் உனக்கு புத்திசாலித்தனாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தமிழ்நாட்டின் வளர்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றது. இந்தியாவை ஆளும் ஒரு கட்சி, அத்தோடு இனக்கமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் அவ்வளவு ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட அதிக நிதி பெற்று வளம் கொழிக்க செய்யும் நாங்கள் அடிமைகளா? அல்லது விட்டுக்கொடுத்து தட்டிப்பறிக்கும் சூத்திரதாரிகளா?
 \\\ உங்கள் பக்தி என்னை மெச்சவைக்கிறது. ஆனால் நீங்கள் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாதொழிக்க போராடிக்கொண்டு இருக்கும் \\\ கிழிச்சீங்க. முதல்ல  வலையிலே கத்தாம இங்க வந்து களத்திலே இறங்குங்க\\\
\\இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது. கொழந்தைகளா உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???\\ 

அடங்கொய்யால , கடனைப்பத்தி நீ பேசக்கூடாது. பெரிய பொருளாதார மேதை இவரு. இவரு கடனை பத்தி எல்லாம் பேசுறாரு. இரு விளக்கம் தர்ரேன்.செந்தில் கொஞ்சம் அமைதியா படி. நீ உன் மனசாட்சிப்படி சரின்னு பட்டுச்சுன்னா நீ உன் பதிவில் கூட பதில் சொல்ல வேண்டாம். உனக்கு மட்டுமே தெரிந்தால் கூட போதும். சும்மா சிவப்பு துண்டு பலே பாண்டியன் மாதிரி கத்தி கிட்டு இருக்காம உன்னை நம்பி உன் பதிவை படிக்கும் சிலரை, நீ உண்மையை தான் சொல்வாய் என நம்பும் அந்த நபர்களுக்காக இனிமேலாவது பொய் சொல்லி ஏமாற்றாதே தம்பி.கொஞ்சம் போர் அடிக்கும். ஆனாலும் படி.

இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டு விட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.
அ.தி.மு.க. 2001 2002 ம் ஆண்டு முதல், 2005 2006 ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.
2006 2007 ஆண்டு முதல் 2010 2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செலவிட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55 ல், 2006 2007 முதல் 2010 2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக் கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் 2005 2006 ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு 2010 2011 ல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழகத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.

. எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டுமென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண் டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.

 ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005 2006 ம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவீதம் 13.42 ஆகும். ஆனால் 2010 2011 ம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005 2006 ம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என்பதை  பய'டேட்டா செந்தில் புரிந்து கொள்ளலாம்.
கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.இதற்காக கலைஞர் தாத்தாவோ அல்லது செந்திலின் தாத்தாவோ கடனை அடைக்க வேண்டாம்.

அடுத்து உபரி என்பது வருவாய் தனி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை இருப்பதில் தவறில்லை.
தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்புகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2005 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் கழக ஆட்சியில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் 1.79 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2005 2006 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010 2011 ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த ஐந்தாண்டுகளில் 277 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 க்கு 37 லிருந்து 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111 லிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.
569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுநுரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்புகளான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1 ஆயிரத்து 440 கோடி ரூபாய் இந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் 616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.

அடுத்து செந்திலு சமூக திட்டங்கள் பத்தி பாரு.  2006 2007 முதல் 2010 2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.

செந்திலு, 2011 2012 ம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக 1 ஆயிரத்து 106 கோடி ரூபாயும் கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்ற வைகளுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்திலு, இதான் தமிழ்நாட்டின் கடன் நிலவரம். ஆனா கேரளாவிலே அதாவது கேரளாவிலே  சிவப்பு சட்டைக்காரன் ஆட்சியிலே ஒரே கலவரம். அதையும் பார் இங்கே.
அங்கே உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999 2000 ம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004 05 ம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009 2010 ம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010 2011 ம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008 ம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கர்நாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.

இப்பவாச்சும் என்ன நடக்குது நாட்டிலேன்னு புரிஞ்சுக்க செந்திலு. உனக்கு பதில் சொல்லி சொல்லியே என் விரல் எல்லாம் வலிக்குது. அதனால மீதி கச்சேரியை அடுத்த பாகத்திலே வச்சுக்கறேன். நீ பேயாம பயடேட்டா போட்டு பிழைப்பை ஓட்டப்பாரு தம்பி. இனி இது போல தலைப்பு வச்சு திமுக பதிவர்களை இழுக்கும் முன்னே பேசும் விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பேசவும். இல்லாவிட்டால் நீயும் எங்கள் அண்ணன் உண்மைதமிழன், சதீசுகொமாரு மாதிரி காமடிபீஸாக ஆகும் அபாயம் காத்திருக்கு செந்திலு. உனக்கு இரண்டாம் பாகத்தில் மீதிக்கான பதிலை சொல்கிறேன். உன் பதிவில் பின்னூட்டம் இட்ட விஜேஆர், திருச்சி ராஜேஷ் ஆகியோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  .....................தொடரும்..............

6 comments:

Anonymous said...

விருச்சி அண்ணே! இந்த செந்தில் பெரிய ஆள் மாதிரி நினைச்சுகிட்டு இருந்தேன். வடிவேலு விஜய்காந்தை பிள்ளையார் சுழி போட்டு கிழிச்ச மாதிரி கிழிச்சுட்டீங்க அண்ணே, இனி செந்திலுக்கு இறங்கு முகம் தான் போலிருக்கு. சம்மந்தம் சம்மந்தமே இல்லாம விஜய்காந்து மாதிரியே உளறி இருந்தாரு அந்த பதிவிலே. வெல்டன் விருச்சி அண்ணே!

VJR said...

நல்ல விளக்கம்.

Anonymous said...

என்னய்யா, ஆட்டைகடிச்சு மாட்டை கடிச்சு அதான் உண்மைதமிழனை, ஆர்.கே சதீஷ்குமார்ன்னு பொழப்பை ஓட்டிகிட்டு இருந்த. இப்ப எங்க கே ஆர் பி செந்தில் கிட்ட வந்துட்டியா? அவரு சாதாரண ஆள் இல்லை. அவருக்கு 500 க்கும் மேல பாலோயர்ஸ் இருக்காங்க இந்த வலையுலகில். ஆனால் உனக்கு? இப்ப வந்த கத்துகுட்டி நீ.. பர்த்து நடந்துக்க, போய் உன் தலைவன் காலை கழுவிவிடு.

மாயாவி said...

உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். இன்றைக்கு (தேர்தல் தேதி அறிவித்த பிறகு) சில பதிவர்கள் புதிதாக முளைத்துள்ளார்கள் அவர்கள் அனைவரும் உளவு பிரிவில் பணியாற்றும் கணிணி தொழில் நுட்ப பிரிவில் இருப்பவர்கள். தேர்தல் முடியும் வரை அவர்களுக்கு கொடுக்கபட்டுள்ள ஒரே அசைன்மெண்ட் “திமுக ஆதரவு நிலையை உருவாக்கும் விதமாக பதிவுகள் இட வேண்டும்”. அப்பறம் ஏன் தீடீர் திமுக சொம்பு தூக்கிகள் முளைக்கமாட்டார்களாம்?

மாயாவி said...

அனானி பின்னுட்டம் இடுபவர்கள் சங்கத்தலைவர் ”விருச்சுக்க”காந்த் வாழ்க!!!!@#$%$@

எனிமா டாக்டர் said...

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முடியும்முன் சட்டமன்றத்தில் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும். இந்த அறிக்கையில் முந்தைய நிதி நிலை அறிக்கையில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் வெளியிடப்படும். தமிழக மக்கள் நிறைவேற்றாத திட்டங்களைப் பற்றிக் கவலைப்படுவது கிடையாது என்கிற எண்ணத்தில் ஆட்சியாளர்களால் ஒரு சடங்காக நிதிநிலை அறிக்கை சமர்பிக்கப்படும். திமுக அரசு அறிவித்த திட்டங்கள் பல இன்னும் நிறைவேற வில்லை. 2006-2007-இல் நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்ட திட்டங்கள் இன்று வரை அதாவது திமுகவின் ஆட்சி முடிவுற்று மீன்டும் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வரை நிறைவேற்றப்படவில்லை. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் ஒரு பெரிய துறைமுகம் அமைப்பதற்கு மத்திய அரசை வலியுறுத்துவோம் என்ற அறிவிப்பு, அறிவிப்பாகவே இருக்கிறது. கப்பல் துறை அமைச்சர் தமிழகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் திமுக அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்த எவ்வித முயற்சியும் எடுக்கவில்லை.

சென்னைக்கு அருகில் ஒரகடத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் தேசிய மோட்டார் வாகன சோதனை மற்றும் ஆராய்ச்சி உள்ள வளர்ச்சிக் கட்டமைப்பு மையம் ஏற்படுத்தப்படும், கோவை மாவட்டம் பல்லடத்தில் வெங்காயத்துக்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாம்பழத்துக்கும் தேனி மாவட்டத்தில் ஒடைப்பட்டியில் திராட்சைப் பழங்களுக்கும் ஏற்றுமதிக்கேற்ற வகையில் குளிர்பதன வசதிகளுடன் கூடிய விற்பனைக் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும் என்றார்கள். கிராமப் பகுதிகளில் உள்ள மாணவ மாணவியர்களுக்கு விரைவாக வேலை வாய்ப்புகள் பெறுவதற்காக ஊரகப் பகுதிகளில் பல் மருத்துவ கல்லூரி, செவிலியர் கல்லூரிகள், உடல் இயக்க மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தவர்கள், அமைச்சர்கள் கொள்ளையடிப்பதற்கு ஏதுவாக கல்லூரிகள் அமைக்க உதவி செய்தார்களே தவிர ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில், அறிவித்த திட்டங்களைக் கூட செயல்படுத்தவில்லை என்பது இந்த அரசின் இலட்சணமாகும்.

ரூ.279.01 கோடி செலவில் வெள்ளத்தால் சென்னை பாதிப்பதைத் தடுக்க, கூவம், அடையாறு, கொசல்தலையாறு, பக்கிங்காம் கால்வாய், ஒட்டேரி நல்லா விருகம்பாக்கம், அரும்பாக்கம் வடிகால், பள்ளிக்கரணை சதுப்பு நில ஏரி ஆகியவற்றின் வழியாக வெள்ள நீர் சீராகக் கடலில் கலக்கும்படியான வெள்ளத் தடுப்புப் பணிகள் நடைபெறும் எனக் கூறினார்களே தவிர ஆண்டுதோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது சென்னைவாசிகள் படும் துன்பங்கள் சொல்லி மாளாது, இப்படிப்பட்டர்களுக்கு ஏன் மீண்டும் வாக்களிக்க வேண்டும்?