Total Pageviews

Showing posts with label கே ஆர் பி செந்தில். Show all posts
Showing posts with label கே ஆர் பி செந்தில். Show all posts

Saturday, 9 April 2011

கே ஆர் பி செந்திலை விட பெரிய புலாசுலாக்கி ஒருத்தன் இருக்கான்.....


கே ஆர் பி செந்தில் தான் பெரிய புலாசுலாக்கின்னு நினைச்சேன். ஆத்தா! அதுக்கும் ஏகப்பட்ட போட்டி. இங்க பாருங்க ராஜா ( the king) ன்னு ஒருத்தன். புச்சா கெலம்பிட்டான். வக்காலி என்னமா கேள்வி கேட்கிறான் பாருங்க. ஆனா அது எல்லாத்துக்கும் அங்க நம்ம வடிவேலு அண்ணன் பேர்லயே ஒரு அனானி அண்ணன் பதில் சொல்லிட்டாரு. நான் அதை எதும் செய்யாம இங்க தருகின்றேன். 1.விஜயகாந்த் மண்டபத்தை இடித்ததால் தான் அரசியலுக்கு வந்தார் என கூறும் நீங்கள் , எந்த காரணத்துக்காக அரசியலுக்கு வந்திர்கள். அவருடன் ஏற்ப்பட்ட மோதல் தானே காரனம். மக்களுக்கு சேவை செய்யவா வந்திர்கள்.

பதில்:அய்யா என் ராசா.. மொத கேள்விலேயே நீ ரிஜெக்ட்டு.. என்ன இப்படி ஒன்னும் தெரியாத புள்ளைய இருகீயே ... நான் எங்கய்யா அரசியலுக்கு வந்தேன்.. வெறும் பிரச்சாரத்துக்கு தான்பா வந்தேன்.. நான் கட்சி ஆரம்பிச்சு.. இல்லை எதாச்சும் கட்சில உறுப்பினர் கார்டு வாங்கின அப்புறமா இந்த கேள்வியா கேளுப்பா .. உன் புள்ள குட்டி , பொண்டாட்டிய வீட்டுக்கு உள்ளே வெச்சு ஒருதன் அடிசான்காட்டிகு நீ என்ன பண்ணுவியோ அதே தானே நான் பண்ணேன்.. உன்னை மாதிரி மெத்த படிச்சவன் இல்லப்பா நானு , அதான் எனக்கு தெரிஞ்ச வழில நான் பழி வாங்க வந்துட்டேன்.. தப்பா சாமீமீமீமீ . நெக்ஸ்ட் குஸ்டின்...


2.உங்களுக்கு குடிப்பழக்கம் இல்லை என உங்கள் குழந்தை மீது சத்தியம் செய்ய தயாரா?
பதில்: விஜயகாந்த் ஆளுங்க அடிச்சு மண்டைல ரத்தம் வர வெச்ச என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் ராசா , நான் குடிப்பேன் நான் குடிப்பேன்.. ஆனா இவரு மாதிரி எப்பவும் இல்லப்பா.. அதுவும் ஒரு கட்சி ஆரம்பிச்சு, நான் தான் முதலமைசுருனு , நான் தான் ப்ளாக் எம்ஜிஆருநு சொல்லிடு இப்படி கட்சி மாநாடுல , பொது இடத்துல குடிச்சிட்டு ஒளரமாட்டேன்பா.. சாப்டமா , வீட்ல படுதமானு இருப்பேன் .
எம்ஜிஆரு நு சொல்லிக்கிட்டு இந்த ஆளு குடிக்கறது தான் வவுறு எரியுது.. அதன் பாடினேன்.. தைரியமாக சொல் நீ மனிதன் தான??? இல்லை நீ தான் ஒரு மிருகம்... அவ்வ் வ்


3.நடிகை தொப்புளில் பம்பரம் விட்டார் என கிண்டல் செய்கின்றிற்களே, நிங்கள் மனைவியை அடிப்பது போல, ஒரு பென்னை கெடுப்பது போல நடிக்கவில்லையா ?
பதில்:குட் கொஸ்டின் .. எதோ ஒரு புலோல சொல்லிட்டேன்.. இனிமே கேட்டா என் வாயிலையே நீ வந்து வெட்டுபா


4.சொந்த தொகுதில் நிற்காமல் ஒடி வேறு ஊரில் நிற்ப்பது ஏன்? என கேட்டிர்கள், 5 முறை சொந்த தொகுதியிலா உங்கள் தலைவர் போட்டியிட்டார்? ஸ்டாலின் ஏன் தொகுதி மாறினார் ?
பதில்:என்னய்யா கேள்வி இது.. முடியல.. யார் எங்க நின்ன எனக்கு என்ன.. எனக்கு இந்த கருப்பு காமெடி பீச பிச்சி போடணும்.. அவ்ளோ தான் விடு .. அப்புறம் ஸ்டாலின், கலைஞ்சர் எல்லாம் எதுக்கு தொகுதி மாருனங்கநு அவங்களே சொல்லிட்டாங்க. பேப்பர் படிச்சு தெரிஞ்சுகோ .. அம்மா வருஷத்துக்கு ஒரு இடத்துல நிக்குதேய்னு என்னை கீடுக்ட கஈட்டுட போற.. திருவாரூர் இதுவரைக்கு தனி தொகுதி.. அங்கே கலைஞ்சர் நிக்க அனுமதி இல்ல.. இப்பதான் அது பொது தொகுதி.. அயோ அயோ , அரசிய அடிப்படையே தெரியலையேபா உனக்கு


5.விஜய்காந்த் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது ஒரு கட்சியிடம் போய் மண்டியிட்டது ஏன்?
பதில்:என்னனென்னமோ சொல்லிட்டு என்னென்னமோ செய்யுறவக எல்லாம் வுட்டுட்டு இந்த கைப்புள்ளைய மட்டும் கேளு ராசா.. மக்களோட கூட்டணி நு 41ku அம்மா காலடில விழுந்த யாரோ ஒருத்தரு . சரி சரி விடு விடு .. நான் அவர எதிர்த்து போட்டி போட்டா மட்டும் நீ மத்த 10 கேள்விய கேட்கமையா இருக்க போற ... ஸ் அப்பா . முடியல.. இந்த கேள்விக்கு நான் எத்தன வாட்டி தான் பதில் சொல்றது


6.நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என கூறிய ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக பேசுவது செய்யும் தொழிலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
பதில்:எதிரிக்கி எதிரி நண்பன்பா..



7.விஜய்காந்தை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதவை எதிர்பதிலையே ஏன்? பயமா?
பதில்:எனை விட நீங்க தான் பெரிய கமெடிய இருப்பீங்க போலே.. அதன் தெளிவா சொல்லிட்டேனே.. எனக்கு இந்த கருப்பு அசிங்கத்தை எதிர்க்கணும் ..அதான் வந்தேன்னு.. ஒரு வேலை நான் அந்தம்மா பத்தி சொல்லி இருந்த .. உன்னோட இந்த கேள்வி எப்படி இருக்கும் தெரியுமா.. ? விஜயகாந்த எதிர்க்க தானே வந்த. ஏன் எங்க அம்மாவை பத்தி பேசுற.. ??

8.கேப்டன் என்ற வார்தையை கிண்டல் செய்கின்றிர்கள், வைகை புயல் என உங்களை அழைகின்றார்கள், புயலால் சேதம் தான் தவிர நன்மை ஏதும் இல்லையே
பத். ஆமாம் நான் வைகை புயல் நு போஸ்டர் போட்டு , பாணர் கட்டி, டி வி ஆரம்பிக்கலையே.. அதான் மேட்டரு. அப்படி என்ன தப்ப சொல்லிட்டேன்.. தோனி தான் கேப்டன் நு சொன்னேன்.. அது கார்ரெட் தானே? தண்ணில மேதக்கரத ஓட்டறவன் தான் கேப்டன் நு சொன்னேன் , அது உண்மை தானே?


9.கருப்பு நாகேஷ் என பட்டம் தந்ததும் இளித்துகொண்டு இருந்திற்களே, நாகேஷ்ல் ஏது கருப்பு, சிவப்பு என கேட்காதது ஏன்?
10.அவர் நடித்து சம்பாதித்ததை கட்சிக்காக செலவு செய்தார், உங்கள் தலைவர் சொந்த காசில் என செய்தார்.
கொஸ்டின் 9 - 10 - ஒன்னும் தேறாத புள்ளையா கேள்வி கேட்டிருகீய. ரிஜெக்டெட்

11.அரசியலுக்கு வரும் முன்பு கூட விஜய்காந்த் அலுவலகம் சென்றால் இலவசமாக சாப்பிடலாம், நிங்கள் நன்றாக சம்பாதிக்கும் பொழுது யாருக்கு உதவி செய்திற்கள் ? பேராசையில் நிலங்களாக வாங்கி போட்டிற்கள்.(அதையும் ஒருத்தன் ஏமாத்திடான்)

பதில்:. கலைஞ்சர் இலவசமா தந்தா பத்திட்டு வருது.. இப்போ இலவச சோறுக்கு இப்படி பேசுறீங்க.. ஐய்ய்ய்யி

ஓகே விடு ஜூட் , இப்போ உங்களுக்கு கேள்வி

1. என் வீட்டை ஆள் விட்டு அடிச்சான், என் பொண்ணு மண்டைய ஓடைசான்.. அவன எதிர்த்து நான் வந்தேன்.. பாவம் நீங்க ஏன் இப்படி ராப்பகலா தூக்கம் இல்லாம பெனாதுறீங்க .. ??

2.இந்த காமெடி பீச எல்லாம் ஒரு ஆளா நெனைச்சு இம்புட்டு கேள்வி கேட்கறீங்களே.. உங்களுக்கு ஆணி புடுங்கற வேலையே இல்லையா?? இதான் வேலையா?

3. உங்க அம்மா / கேப்டன் பாசத்துல என்ன இவ்ளோ. கேள்வி கேட்டீங்களே .. அந்த கருப்பு காமெடி பீசுக்கு ஒரு 2 கேள்வி கேட்கமுடியுமா? நான் எடுத்து கொடுக்கவா?

4. சரி கருப்ப்பு விடுங்க.. இப்போ ஒருத்தன் வந்திருக்கான் . சிங்கமுத்து .. அவன் என்ன பொது நலத்துக்க வந்தான் ? என்கிட்டே கேட்டா மொத கேள்விய அவன் கிட்ட கேளுங்க.
ஓகே ரைட்..

லாஸ்டா ஒரு மேட்டர்.. நாக்க முக்க கட்சி ஜெயக்குதோ தொக்குதோ.. ஆனா எனக்கு 2 சந்தோசம் ..

1. நான் வந்ததால தானே அந்த அம்மா சிங்கமுத்துவ எல்லாம் ஒரு மனுஷன மதிச்சு சரிசமமா ஒக்கார வெச்சு பேசுச்சு .. ? மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. இல்லன அது நடந்திருக்குமா ?

அப்புறம் நீங்க.. இவ்ளோ மெனக்கெட்டு இப்படி எல்லாம் மண்ட கொடஞ்சு கேள்வி கேட்குறீங்களே ராசா.. வேற யாருக்காச்சும் கேட்டீங்கள.. அப்போ என்ன தெரியுது??? ஏன் பிரசாரம் நல்ல ரீச் ஆகுதுன்னு ..சில பேரு வவுறு எரியுதுன்னு தெரியுது..

சரி ராஜா , அப்ப்பீத்த்தூ... நான் எலேச்டின் முடிச்சு அந்த கருப்பு ஆள் ஜெயச்சா , தோத்தா என்னனு பொழைப்ப பார்க்க போய்டுவேன்.. நீ கூட போய்
வேற வேலை பாரு, புள்ள குட்டிய படிக்க வெயப்பா .. வரட்டா

அப்புறம் வரேன்.. நீ சிங்கமுதுக்கு , கருப்புக்கு எதாச்சும் கேள்வி கேட்டிருகீயனு பார்க்க.. நீ கேட்க மாட்டா .. எல்லாம் அம்மா பாச்ம்.. குட் குட் விடுறா விடுறா சூனா பானா..++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அடேய் புலாசுலாக்கிங்களா, நாங்க ஜெயிச்சாச்சு, இன்னும் எங்க திமுக பதிவர்கள் திரும்பி வரனும் அதை தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.... களப்பணியில் இருக்கும் எங்கள் கழக கண்மணிகள் வரட்டும். அது வரை கட் பேஸ்ட் பண்ணுங்க!


Thursday, 7 April 2011

"பய"டேட்டா செந்தில் என்னும் கிண்டாமணி...


..
நாங்கள்  வெற்றிக்கோட்டை தொட்டாகிவிட்டது. இன்னும் வெற்றியை அறிவிக்காமை ஒன்று தான் மீதி. எங்கள் உடன்பிறப்புகள் களப்பணியில் இருக்கின்றனர். இந்த வலையுலக கழக கண்மணிகளும் களப்பணியில் நின்று போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர்.  என்னைப்போல சிலர் மட்டுமே இணைய அட்டைகத்திகளை வெட்டி வீழ்த்தும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது காங்கிரசை வேரறுக்க கிளம்பி இருக்கும் சில அரைபிளேடுகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அந்த வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே "திமுகவை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்" என்கிற தலைப்பில் போகிற போக்கில் எங்கள் மீதும் சேறு பூசிய பின்னர் இந்த தலைப்பிட்டு உங்களுக்கு பதில் சொல்லவில்லை எனில் இந்த தமிழகம் எங்களை மன்னிக்காது நண்பரே! இருங்க சிறிது விளையாடிவிட்டு வருகின்றேன்.

****************************************************************
\\சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும்  ஒரே தி.மு.க  ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே!\\

யார் அடிமை? எது அடிமை? விட்டுக்கொடுத்து தட்டிப்பறிப்பது பற்றி உனக்கு தெரியுமா செந்தில்? நீ வெறும் உணர்சிக்கு அடிமையான கூட்டத்தை சேர்ந்த சாதாரண நபர். இலங்கை பிரச்சனையின் காரணமாக நீ காங்கிரசை அழிக்க நினைப்பது பற்றி திமுகவினருக்கு கவலை இல்லவே இல்லை. ஆனால் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரசை 50 பேர் கொண்ட கூட்டம் "நான் கிழிச்சிடுவேன்" என நா கூசாமல் சொல்லி கொண்டு பிதற்றுவதும் அதை நாங்களும் கேட்டு தலையாட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதும் உனக்கு புத்திசாலித்தனாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தமிழ்நாட்டின் வளர்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றது. இந்தியாவை ஆளும் ஒரு கட்சி, அத்தோடு இனக்கமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் அவ்வளவு ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட அதிக நிதி பெற்று வளம் கொழிக்க செய்யும் நாங்கள் அடிமைகளா? அல்லது விட்டுக்கொடுத்து தட்டிப்பறிக்கும் சூத்திரதாரிகளா?
 \\\ உங்கள் பக்தி என்னை மெச்சவைக்கிறது. ஆனால் நீங்கள் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாதொழிக்க போராடிக்கொண்டு இருக்கும் \\\ கிழிச்சீங்க. முதல்ல  வலையிலே கத்தாம இங்க வந்து களத்திலே இறங்குங்க\\\
\\இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது. கொழந்தைகளா உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???\\ 

அடங்கொய்யால , கடனைப்பத்தி நீ பேசக்கூடாது. பெரிய பொருளாதார மேதை இவரு. இவரு கடனை பத்தி எல்லாம் பேசுறாரு. இரு விளக்கம் தர்ரேன்.செந்தில் கொஞ்சம் அமைதியா படி. நீ உன் மனசாட்சிப்படி சரின்னு பட்டுச்சுன்னா நீ உன் பதிவில் கூட பதில் சொல்ல வேண்டாம். உனக்கு மட்டுமே தெரிந்தால் கூட போதும். சும்மா சிவப்பு துண்டு பலே பாண்டியன் மாதிரி கத்தி கிட்டு இருக்காம உன்னை நம்பி உன் பதிவை படிக்கும் சிலரை, நீ உண்மையை தான் சொல்வாய் என நம்பும் அந்த நபர்களுக்காக இனிமேலாவது பொய் சொல்லி ஏமாற்றாதே தம்பி.கொஞ்சம் போர் அடிக்கும். ஆனாலும் படி.

இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டு விட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.
அ.தி.மு.க. 2001 2002 ம் ஆண்டு முதல், 2005 2006 ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.
2006 2007 ஆண்டு முதல் 2010 2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செலவிட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55 ல், 2006 2007 முதல் 2010 2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக் கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் 2005 2006 ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு 2010 2011 ல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழகத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.

. எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டுமென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண் டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.

 ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005 2006 ம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவீதம் 13.42 ஆகும். ஆனால் 2010 2011 ம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005 2006 ம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என்பதை  பய'டேட்டா செந்தில் புரிந்து கொள்ளலாம்.
கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.இதற்காக கலைஞர் தாத்தாவோ அல்லது செந்திலின் தாத்தாவோ கடனை அடைக்க வேண்டாம்.

அடுத்து உபரி என்பது வருவாய் தனி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை இருப்பதில் தவறில்லை.
தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்புகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2005 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் கழக ஆட்சியில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் 1.79 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2005 2006 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010 2011 ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த ஐந்தாண்டுகளில் 277 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 க்கு 37 லிருந்து 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111 லிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.
569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுநுரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்புகளான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1 ஆயிரத்து 440 கோடி ரூபாய் இந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் 616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.

அடுத்து செந்திலு சமூக திட்டங்கள் பத்தி பாரு.  2006 2007 முதல் 2010 2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.

செந்திலு, 2011 2012 ம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக 1 ஆயிரத்து 106 கோடி ரூபாயும் கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்ற வைகளுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்திலு, இதான் தமிழ்நாட்டின் கடன் நிலவரம். ஆனா கேரளாவிலே அதாவது கேரளாவிலே  சிவப்பு சட்டைக்காரன் ஆட்சியிலே ஒரே கலவரம். அதையும் பார் இங்கே.
அங்கே உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999 2000 ம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004 05 ம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009 2010 ம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010 2011 ம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008 ம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கர்நாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.

இப்பவாச்சும் என்ன நடக்குது நாட்டிலேன்னு புரிஞ்சுக்க செந்திலு. உனக்கு பதில் சொல்லி சொல்லியே என் விரல் எல்லாம் வலிக்குது. அதனால மீதி கச்சேரியை அடுத்த பாகத்திலே வச்சுக்கறேன். நீ பேயாம பயடேட்டா போட்டு பிழைப்பை ஓட்டப்பாரு தம்பி. இனி இது போல தலைப்பு வச்சு திமுக பதிவர்களை இழுக்கும் முன்னே பேசும் விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பேசவும். இல்லாவிட்டால் நீயும் எங்கள் அண்ணன் உண்மைதமிழன், சதீசுகொமாரு மாதிரி காமடிபீஸாக ஆகும் அபாயம் காத்திருக்கு செந்திலு. உனக்கு இரண்டாம் பாகத்தில் மீதிக்கான பதிலை சொல்கிறேன். உன் பதிவில் பின்னூட்டம் இட்ட விஜேஆர், திருச்சி ராஜேஷ் ஆகியோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  .....................தொடரும்..............