சீமான் என்னும் வெத்துவேட்டு "நான் காங்கிரசசை ஒழிப்பேன்" என முழங்கிய போது கூட நன்கு அரசியல் தெரிந்தவர்கள் "காங்கிரசை ஒழிக்க நீ யாரடா?" என சத்தமிட்டனர். ஆனா சத்தம் போடாமல் மனதின் உள்ளே சொன்ன வாக்கியம் "அதை காங்கிரசே பார்த்துக்கொள்ளும்". இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் கலைஞர் 60 சீட் போதும். உங்களுக்கு எத்தனை கொடுத்தாலும் அதை பிரித்து எடுத்துக்கொள்ள கூட தெரியாது என்று சொல்லிப்பார்த்தார். கேட்டால் தானே? சின்ன பசங்களுக்கு பஞ்சு மிட்டாய் கேட்டால் ஒன்று வாங்கி தரலாம். பத்து கேட்டால் என்ன செய்வது? வயிற்றை வலிக்கும் என சொன்னால் கேட்க வேண்டும். கேட்கவில்லை. தின்றுவிட்டு வயிற்றை வலித்தால் வலிக்கட்டும் என விட்டு விட்டார். அவர் சொன்னது போலவே 60 தொகுதிக்கும் ஆள் கிடைத்து வேட்பாளர் அறிவித்தாகியும் விட்டது. இதோ நாளைக்கு கடைசி நாள். மீதி மூன்று இடத்துக்கு இப்போது தான் அறிவிக்கப்பட்டது.
காங்கிரசில் இருக்கும் கோஷ்ட்டிகளில் பெரிய கோஷ்டி வாசன் கோஷ்டி தான். ஆனால் ராகுல் இப்போது ஆரம்பித்து வைத்திருக்கும் புதிய கோஷ்டிக்கும் இந்த முறை சீட் பங்கு கொடுக்க வேண்டியதாகி விட்டது. போகட்டும் அவர் பெரிய இடத்து பையன். ஆனால் அவர் நினைத்தால் அவரே அந்த 63 வேட்பாளரையும் கூட அறிவிக்கலாம். ஆனால் தன் தகுதி தனக்கு தெரியும் தானே. தான் ஒரு கட்சியின் தலைமைக்கு வர இன்னும் நாள் இருக்கின்றது. அது வரை ஒரு சிறிய கோஷ்டிக்கு தலைவராக இருந்து விட்டு போவோம் என அவர் எண்ணியதில் தவறு எதும் இல்லை.
இதை விட வேதனை என்னவெனில் தமிழக காங்கிரஸில் அவர்கள் கட்சிக்காரர்கள் கோஷ்டி என்பது ஒரு நியாயமான விஷயம் தான். ஆனால் நம்ம தலைவர் கலைஞருக்கும் அங்கே ஒரு கோஷ்டி இருப்பது தான் வேடிக்கை. பீட்டரல்போன்ஸை பொறுப்பாளராக போட்டு இவர் அங்கே ஒரு கோஷ்டி வைத்து அரசியல் நடத்துகின்றார். ஏன் தலைவா உங்களுக்கு இந்த வேலை. நம்ம கட்சியில உங்களுக்கு தான் வானளாவிய பவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றதே. பின்னர் ஏன் காங்கிரசில் ஒரு கோஷ்டியை தலைமை செயலகத்தில் மீன் வளர்ப்பது போல வளர்கின்றீர்கள். இதோ நீங்கள் செய்த இந்த அக்கிரமத்தால் என்ன ஆனது பாருங்கள். கலைஞரே காங்கிரசில் தன் கோஷ்டிக்கு சீட் கேட்டு வாங்கிகின்றாரே, நான் என்ன இளிச்சவாயனா என நினைத்த பக்கத்து நாடு ராஜபக்ஷேவும் தன் பங்குக்கு ஒரு கோஷ்டி ஆரம்பித்து (அது ஏற்கனவே இருந்த கோஷ்டி தான்) தனது வேட்பாளர் ஹசனலிக்கு ராமநாதபுரத்தில் சீட் வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு வாங்கி விட்டான். இதோ மீதி இருந்த அந்த 3 வேட்பாளர்களில் ஒருவர் ராஜபக்ஷே கோஷ்டி.
எல்லாம் உங்களால் தான் தலைவரே. நீங்கள் அடுத்தவன் கட்சியில் கோஷ்டி ஆரம்பிக்காவிட்டால் ராஜபக்ஷேவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? ராஜபக்ஷே 1000 கோடி கொடுத்து வைகோவையே ஜெ கூட்டணியில் இருந்து கழட்டி விட்டதாக வைகோவே இப்போது சொல்கின்றார். அந்த மிருகம் உங்களையும் உங்களை நம்பி இருக்கும் எங்களையும் கடிக்கும் முன்னர் ஏதாவது செய்து அதன் கொடுக்கை நறுக்குங்கள்.
ஜெயந்தி தங்கபாலுவுக்கு சீட் கொடுத்தால் மகளிர் காங்கிரஸ் எதிர்க்கும். டாக்டர் நடேசனுக்கு கொடுத்தால் இளைஞர் காங்கிரஸ் எதிர்க்கும். எதிர்த்து வேட்பாளரை நிறுத்தும். இதல்லாம் அங்கே சகஜம். அது போல யாருக்கு கோபம் வந்தாலும் முதல் அடி சத்தியமூர்த்தி பவன் உள்ளே இருக்கும் காந்திக்கு தான். தலைவரே நீங்கள் உங்கள் கோஷ்டியை விட்டு ராஜபக்ஷே கோஷ்டியை எதிர்க்க சொல்லுங்கள். சத்தியமூர்த்தி பவன் வாசலில் காந்தி, காமராசர், சத்தியமூர்த்தி, நேரு என எல்லாருடைய உருவபொம்மைபையும் எரிக்க சொல்லுங்கள். உங்கள் கோஷ்டி தான் பெரிய கோஷ்டி என நிரூபியுங்கள். புறப்படட்டும் உங்கள் கோஷ்டி.எரியட்டும் சத்தியமூர்த்தி பவன்.நீங்கள் உங்கள் கோஷ்டியை அமைதி பூங்காவாக வைத்திருந்தால் அவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிவிடக்கூடிய அபாயம் இருப்பதை உணருங்கள். உடனே சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேன் மண்டையில் இருந்து ஆரம்பித்து... உங்கள் கோஷ்டிக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள் காங்கிரசில்.
5 comments:
:))))))))))))))))))
தூளுங்கோ.
வந்துட்டுங்க்களா வாங்க, வாங்க. பதவு உலக வடிவேலுன்ன நீங்க.
ராஜபக்ஷா கோஸ்டி வாழ்க !!! ஹிஹி ... சும்மா ஒரு ரைமிங்குக்கு சொல்லிப்பார்த்தேன் நன்னாத்தான் இருக்கு ..
:-)))))))))))))))))))))))
Post a Comment