நான் ஒரு கட்டுரை எழுதி இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதாவது ஜெயலிதா எந்த தப்பு செய்தாலும் அது சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பம், மத்த எந்த நல்லது நடந்தாலும் அது ராஜகுருக்கள் செய்தது என்று அவாள் எல்லாம் செய்யும் பரப்புரை. அதற்கு என் அன்பு அண்ணன் உண்மைதமிழனும் உடந்தை என்று. கூட்டணி கட்சிகள் தொகுதியையும் சேர்த்து ஜெ வெளியிடுவாராம் அதற்கு சசிகலாதான் காரணம் என்று சதிகலா என்னும் தலைப்பிட்டு ஜூனியர் விகடன் 3 நாள் முன்பாக எழுதுமாம். இப்படியாக ஜூவி எழுதி எழுதி தான் அதன் வாசகர்கள் முற்றிலும் ஒழிந்து போன நிலையில் உண்மைதமிழன் ஒரு கட்டுரை இப்போது எழுதி கிழித்திருகின்றார். அதாவது..
\\அவரது உற்ற தோழி சசிகலாவின் உறவினர்கள், அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தீர்மானிப்பதில் ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்றும் நான் நம்புகிறேன்.
எனது நம்பிக்கைக்கு இன்னுமொரு காரணம்.. முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.
சசிகலாவின் சொந்த பந்தங்கள் அடங்கிய கிச்சன் கேபினட் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா அதில் இருந்து 70 தொகுதிகளை மட்டும் டிக் செய்து “இந்தப் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிடுங்கள். மீதியை இன்னும் இரண்டொரு நாட்களில் இரண்டு பட்டியல்களாக வெளியிடலாம்” என்று அங்கேயிருந்த நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் சொல்லியுள்ளார்.
அந்த நேரத்தில் அங்கேயிருந்த சசிகலாவின் கிச்சன் கேபினட்டோ “ஒட்டு மொத்தமாகவே ரிலீஸ் செய்துவிடலாம்.. தாமதமானால் நமக்குத்தான் கஷ்டம்..” என்று சொல்லியிருக்கிறார்கள். “கூட்டணிப் பேச்சுவார்த்தையே இன்னும் முடியலையே.. அதுக்குள்ள எப்படி நாம மொத்தமா ரிலீஸ் செய்ய முடியும்..?” என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.
அப்போது ராமச்சந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒட்டு மொத்த லிஸ்ட்டை ஜெயலலிதாவிடம் நீட்டி “நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இதையே வெளியிட்டுவிடலாம். கூட்டணி கட்சிக்காரங்க கேட்டாங்கன்னா சொல்லிக்கலாம். இன்னிக்கு நிலைமைக்கு இதுனால யாரும் நம்ம கூட்டணியைவிட்டு விலக மாட்டாங்க. கடைசி நேரம்ன்றதால நாம கொடுக்குற தொகுதிகளை வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க..” என்று கூறியிருக்கிறார். இதற்கு கிச்சன் கேபினட்டும் ஒத்து ஊதி பேசியிருக்கிறார்கள்..!
இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!
முன்னரே சொல்லி வைத்திருந்தாற்போல 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை பெற்றுக் கொள்ள ஜெயா டிவியில் இருந்து ஆட்களும் வந்துவிட.. ராமச்சந்திரன் தானாகவே ஒரு முடிவெடுத்து ஜெயலலிதா டிக் செய்திருந்த 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை ஒதுக்கிவிட்டு தன் கையில் வைத்திருந்த 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டார்.
இதுதான் கார்டனில் அன்றைக்கு நடந்ததாக நான் விசாரித்தவரையில் தெரிந்தது. நான்கூட ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் பட்டியல் வெளியானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்\\
உண்மை தமிழன் அண்ணே, இதல்லாம் மூன்று நாட்கள் முன்னதாக ஜூவியில் வந்துவிட்டது. ஏன் அண்ணே உனக்கு இந்த வேலை. ஏற்கனவே உனக்கு காபி பேஸ்ட் கந்தசாமின்னு பேர் இருக்கு. இதிலே இப்படி எழுதினா காப்பி அடிக்கும் கந்தசாமின்னு பேர் மாத்திட மாட்டாங்களா? நீ எழுதுவதில் ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை என்றும் சினிமா விமர்சனம் என்கிற பெயரில் அப்படியே அப்பட்டமாக கதையை எழுதுவதாகவும், எல்லா பேப்பரும் படித்து தொலைந்துவிட்டு அதை உன் டைப்பிங் திறமையால் வேகமாக டைப் அடிக்கின்றாய் என்றும் ஒரு பேச்சு இருக்கின்றது. நான் சொல்வது உண்மையா பொய்யா என நீயே உன்னை கேட்டுக்கொள்.
எங்க டைரக்டர் சொல்வது போல உன் கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன். இப்ப பாரு இன்றைக்கு வந்த ரிப்போர்ட்டர். ஜெ அந்த லிஸ்ட் விடவில்லை என உன் குருநாதர் "சோ"மாறி ஆசைப்படுவதை நிறைவேற்ற வேறு ஒரு அழகான கோணத்தில் சிந்தித்து எழுதியிருக்கின்றது. ஐ லைக் இட். அதாவது ஜெ அப்பாவியாம். உளவுதுறை தான் எல்லாம் செஞ்சுதாம். ஜெ வெளியிட் சொன்ன லிஸ்ட்டுல 70 பேரோடு சேர்த்து மீதி 90 பேர் கூட்டணி கட்சிக்கு கொடுத்த பெயர்களையும் சேர்த்து ஜெ கையெழுத்தை ஸ்கேன் செஞ்சு அதன் அடியிலே போட்டு அதிமுக லெட்டர் பேடில் ஜெயா டிவிக்கு அனுப்பி அதாவது சைபர் கிரைம் போலீசை வைத்து போயஸ்கார்டன் நம்பர் அதிலே தெரிவது போல செய்து அனுப்பி அதை ஜெயா டிவி வெளியிட்டதாம். இத்தனை செய்யும் உளவுதுறை அதை முதலில் சன் டிவிக்கு அனுப்பி அவங்க வெளியிட்ட பின்ன தான் ஜெயா டிவி வெளியிட்டதாம். இப்படியாக போகின்றது அந்த கதை. தவிர "பக்" என்னும் கருவியை ஜெ ரூம்ல வச்சு ஜெ பேசுவதை எல்லாம் உளவுதுறை ரூம்ல இருந்து ஸ்பீக்கர்ல கேட்கலாமாம். அட... இவனுங்களுக்கே தெரிஞ்ச அந்த பக் இன்னும் அந்த பச்ச குழந்தை ஜெவுக்கு தெரியலையாம். பட் ஐ லைக் இட்.. அந்த கிரியேட்டிவிட்டி எனக்கு புடிச்சு இருக்கு. ஆனா நீ தெரு முனையிலே இருக்கும் டீக்கடைகார்னையே தெரியாத உனக்கு போயஸ்கார்டன்ல இருந்து நியூஸ் வந்துச்சுன்னு புரூடா விட்டு ஜூனியர் விகடன் எழுதியதையே எழுதி தொலைச்சி இருக்கே.
நான் திரும்ப திரும்ப சொல்கின்றேன். உனக்கு அரசியல் வராது விட்டுடு. ஆனா நீ எங்க கேட்க போகின்றாய்?
இந்த பத்திரிக்கை தர்மம் என்பதே செத்து போச்சு. இன்று வந்த நக்கீரனில் கூட பொள்ளாச்சி ஜெயராமன் தன் கையிலேயே அதிமுக தேர்தல் அறிக்கையை வச்சுகிட்டு அலைவதாகவும் அதை இவங்க ஆளுங்க போட்டோ எடுத்து ஜூம் பண்ணி பார்த்து விட்டதாகவும் ஒரு இலவச லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. அதுவும் தினமலர்ல 2 நாள் முன்னதாக வந்து விட்டது. அதை கூட உன்னைப்போல ஒருவன் சதீஷ்குமாரு காபிபேஸ்ட் அடிச்சுட்டான். அண்ணே உனக்கு சரியான போட்டி அண்ணே அவன். உனக்கு முன்னாலயே காபிபேஸ்ட் அடிக்கிறான். அவன் கதை பெரிய கதை. திமுக அறிக்கையை பார்த்து இதல்லாம் ஒரு பொழைப்பான்னு கட்டுரை எழுதி அது காயும் முன்னமே அதிமுக தேர்தல் அறிக்கை அதிரடின்னு அடிச்சுவிடுறான். அதாவது திமுக செஞ்சா அது இதல்லாம் ஒரு பொழைப்பா? அதுவே அதிமுக செஞ்சா அதிரடி?
நானே உங்க ரெண்டு பேருக்கும் விளம்பரம் கொடுத்து கொடுத்து கெடுக்கின்றேனோ என வருத்தமாக இருந்தாலும் வேறு வழி இல்லை. நீங்க திருந்தும் வரை நான் இப்படியாக செய்து தான் ஆக வேண்டும்.
6 comments:
keep it up
நான் விருச்சிககாந்துக்கு ரசிகனாயிடுவுனோன்னு பயந்து வருது. எல்லாமே பாயிண்ட்டு.
நீ மத்தவங்களுக்கு சொல்லற அறிவுரைய பத்தி ஒன்னும் சொல்லறதுக்கில்ல. அது உன் இஷ்டம்.
நான் உனக்கு ஒரு அறிவுரை சொல்லறேன் கவனமா கேட்டுக்க,
"மாட்டு வைக்கிற கழனிதண்ணிய மாங்கு மாங்குன்னு குடிக்கிறது மொதல்ல நிறுத்து".
சூப்பர் , மிக பெரிய தமாஷ் என்னன்னா .. உ தா அண்ணனுக்கு போயஸ் தோட்டத்துல இருக்க ஒருத்தரு வந்து நேருல சொன்னாரம்.. 3 நாளுக்கு முன்னாடி ஜூ வி ல வந்த கதைய இவர் இப்படி சுட சுட கொடுத்து இருகரு .. ஐயோ ஐயோ ..
அஹோரி, நீயென்ன மடையனா, ஜெயாவா அம்மான்னு சொல்லிகிட்டு அலையுற?
போ.. போ... கண்ட எடத்துல வாந்தி எடுக்காம, தெரிஞ்சத எழுதப்பாரு.
புடுங்கிமாதி ப்ளாக் ஆரம்பிச்சுட்டு, வெரும் கருத்துகந்தசாமியா அலையாத.
அனானி,
எங்க எப்படி கமெண்ட் எழுதனுமோ அங்க அப்படி எழுதணும். உங்கள மாதி
அல்லக்கை ஜென்மங்களுக்கு இது மாதிரி சொன்னாலாவது புத்தி வருதான்னு பாக்கலாம்ன்னு ஒரு நப்பாச. நீ கண்டிப்பா புண்ணாக்க புடிங்கி திங்குற பயலாதான் இருக்கணும் , மனுசனா மாற முயற்சி செய் .... மனமிருந்தா மார்க்கபந்து .
அதுசரி ... வீட்டுல எதுக்கும் புண்ணியம் இல்லாத ஜென்மம் அரசாங்க வேலைல இருக்கா என்ன ? விசுவாசம் ரொம்பி வழியுது.
Post a Comment