Total Pageviews

Tuesday, 15 March 2011

கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். சட்டபேரவையில் லீவ் தீர்மானம் போட்டவரு ஆதரவாளரு சொல்றாரு!!!

லை

இந்த சதீஷ்குமார்ன்னு ஒரு பையன் தொல்லை தாங்கலைங்க. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். அதை சொல்றது யாருன்னு பாருங்க. ஆர்.கே.சதீஷ்குமார்ன்னு ஒரு நடுநிலைவாதின்னு முகமூடி போட்டுகிட்டு உளறி கொட்டும் அதிமுக பினாமி. நான் அதிமுகன்னு சொல்லு. இதத சொல்லு. சரின்னு கேட்டுக்கறேன். அது என்னய்யா அதிமுகன்னு சொல்லிக்க இத்தனை ஒரு வெட்கம்? அது என்ன பிராத்தல் கம்பனியா?

\\கலைஞர் தன் முதுமை வயதிலும் தன் மக்களுக்காக மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக போராடுவது வருத்தமாக இருக்கிறது.\\

இருக்காதா பின்ன? உன் தலைவிக்கு தான் குடும்பமே கிடையாதே. சசிகலா & பேமிலி தான் உங்க குடும்பம். அவங்க அடிச்ச கோடி எல்லாம் தான் சந்தி சிரிச்சுதே.

.\\பல தாத்தாக்கள் 70 வயதிலேயே கயித்துக்கட்டிலிலும்,திண்ணையிலும் சுருண்டு விடும் இக்காலத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி 6 வது முறையும் முதல்வராவேன் என குழந்தை போல அடம்பிடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...\\

உனக்கு எங்க வலிக்குது சாமி?

\\கடுமையான உழைப்பும்,சளைக்காமல் பதில் சொல்லவேண்டியதுமான பொறுப்பில் அமர்ந்து கொண்டு ,தன் இறுதிகாலம் வரை தமிழ் மக்களுக்காக உழைப்பேன்...என சுயநலம் இல்லாத அவரது மக்கள் சேவை மெய்சிலிர்க்க வைத்தாலும்,நடமாட முடியாத ஒரு தாத்தா மீண்டும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என துடிப்பது நமக்கு ரத்தக்கண்ணீரை வர வைக்கிறது..\\

நீ ரத்த வாத்திதான் எடேன். எங்களுக்கு என்னா வந்தது.

\\ஒபோதும் தாத்தா ..இதுவரை தோல்வியே அடையாத உங்கள் எம்.எல்.ஏ வரலாறு மாறிவிடபோகிறது...6 வது முறையும் முதல்வர் என்ற கனவு ,ஆசை நிராசை ஆகிவிட போகிறது....\\

இதுவரை 11 தேர்தல்ல ஆளானப்பட்ட தஞ்சை பரிசுத்தநாடாராலேயே புடுங்க முடியாததை நீங்க புடுங்க போறீங்களா? எனக்கு வாயாய சிருக்க முடியலை. பர்கூர்ல சுகவனம் என்கிற சித்தெறும்பு வச்சு நாங்க வறுத்து எடுத்தது பத்தாதா தம்பி?

\\என் அரசியல்வாழ்க்கையில் தமிழனுக்காக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் நான் 5 முறை முதல்வாராக இருந்தபோது சாதித்து விட்டேன்..இனி தமிழனுக்காக தமிழுக்காக செய்ய வேண்டிய தொண்டு எதுவும் இல்லை என அறிவித்து விட்டு அரசியல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.\\

இன்னும் இல்லை. அதிமுக, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியை நாட்டை விட்டு அனுப்பினால் தான் கலைஞரின் அரசியல் பொது வாழ்க்கை நிறைவுற்ற மாதிரின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க தம்பி சதீசு!

\\பல கோடி வசூல் செய்து .செந்தமிழ்மாநாடு நடத்திவிட்டீர்கள்....\\

ஆமா நீ வந்து பார்த்த அதை. வசூல் செஞ்சதை பார்த்த மாதிரி கிழிச்சுவிடுறியே!

\\ஈழத்தமிழர்களுக்கு பால் ஊற்றி விட்டீர்கள்...\\

நீங்க என்னா ஊத்துனீங்கன்னு கொஞ்சம் எடுத்துவுடவா?

\\ஸ்பெக்ட்ரம் மூலம் தமிழன் புகழ் உலகம் உள்ளளவும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...\\

வந்துட்டான்யா யோக்கியன். சொம்பை எடுத்து உள்ள வை. டான்சிராணி, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியும் அதன் ஜோடிபுறாவும் செய்தது எல்லாம் தமிழன் தலைநிமிர வைத்த நிகழ்சிகளா?

\\வாரிசுகளை கொண்டு வர தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என சொல்லி விட்டு மகனை துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்...\\

அதை பத்தி கவலையோ சந்தோஷமோ படவேண்டியது திமுககாரங்க நாங்க தானே. உனக்கு எங்க வலிக்குது?

\\சோனியாவின் காலில் விழுந்து ,அண்ணா வளர்த்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்...\\

கால்ல விழும் கலாச்சாரம் பத்தி யார் பேசுவதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?

சீ தூ.... நீ எல்லாம் எழுதினா ஒரு பயலும் கேட்கமாட்டான்னு நினைச்சியா? இனி உன் பதிவு எல்லாத்துக்கும் எதிர் பதிவு உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் ஜாக்கிரதை! சட்டசபையிலே உங்க தலைவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் கேட்டு தீர்மானம் கொண்டு வந்தீங்களே? நீங்க தானே அரசியலை விட்டே ஓடிப்போகனும் என்பதை ஏன் மறந்துவிட்டு பேசுகின்றாய் அரைவேக்காடு தம்ப்ரீரீரீ...

6 comments:

சண்முககுமார் said...

என்ன பாஸ் பெரிய ஆள் மேல கைவைக்கிரிங்க உடம்பு எப்படி இருக்கு

இதை நான் கேட்கல

அவுங்க கேட்ப்பாங்க பார்த்து உஷாரா நடந்துக்கோங்க..................

விருச்சிககாந்த் said...

வாங்க சண்முககுமார்! யாரு சதீஷ்பையனா? பெரிய ஆளா? அட போங்க நீங்க. வெவரம் இல்லாத பயபுள்ள அது. இல்லாட்டி இது போல வெத்து வேட்டு வெடிக்குமா? எனக்கு பயந்து பயந்து வருது போங்க:-)) (எல்லாம் நம்ம பசங்க தான். அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பான்னு போய்கிட்டே இருப்பாங்க சண்முகம்)

Unknown said...

பாய்ன்ட் பாய்ண்டா எடுத்து பதில் போடறிங்க விருச்சிககாந்த் ... அன எங்கையும் பதில காணேமே...

கலைஞர் தான் இது ஏன்னு கேட்ட ஆதிமுக ஆட்சியில் நடக்கலியாம்பார்.

அதிமுக சரியில்லைன்னுதான மக்கள் திமுகவுக்கு ஓட்டு போட்டங்க...

ஆதிமுக ஆட்சியில் நட்ப்பது தான் திமுகவிலையும்னா ... அப்புரம் 2 கட்சி எதுக்கு ? தேர்தல் எதுக்கு?
2 கட்சியையும் இணைச்சு ஆளுக்கு 117 தொகுதி எடுத்துகலாம்... ஒரு மனதா தேர்தலே இல்லம செயிச்சு
தொடர்ந்து பல ஸ்பெக்ட்ரம் படைக்லாம் இல்ல?

பதில் போடுவது சரிதான்... அனா அது பதிலா இருக்கணும்... பதிலுக்கு ஆதிமுக இப்படி பண்ணலையான .. அது பதில் இல்லை..

ssk said...

கலைஞரை போக சொல்லி விட்டு யாரை கொண்டு வருவதாக உத்தேசம்? நோகாமல் , வெயில் படாமல் வாழும் பலர் களத்தில் இறங்கி, மக்களுக்காக பல போராட்டம் நடத்தி அணுவளவும் சமானமில்லாதவர்கள் நீ போய் ஒய்வெடு என்றால், அடிதட்டு மக்களுக்கு யார் பாதுகாப்பு?
இப்படி எழுதி அம்மாவுக்கு ஆட்சியை தந்து தமிழ்நாட்டை வேட்டை காடு ஆக்க இந்த பூணூல் கூட்டம் துடிப்பது தெரிகிறது. வேண்டுமானால் இன்னொரு தமிழனை மேலே கொடு வந்து கலைஞரை எதிர். அதை விடுத்தது ஜெவுக்கு கோடி தூக்குவது வெட்க கேடு. உனக்கு கல்வி கிடையாது என்றவனை எதிர்த்து கல்வி கிடைக்க செய்தது பெரியார். எங்கும் நிறைந்துள்ளதாக சொல்லப்படும் கடவுள் அல்ல. என் பூணூல் கூட்டத்துக்கு மட்டும் கல்வி என்று நீ கேட்கவில்லையே. இன்று திராவிட இயக்க பலன்களை அனுபவித்து விட்டு அதை ஒழிக்க பாடு படும் ஜெவை தூக்கி விட வேலை செய்வது சரியா?

Unknown said...

skk உங்க பிளாக் லின்க் கொடுன்க்க..

Anonymous said...

//அது என்னய்யா அதிமுகன்னு சொல்லிக்க இத்தனை ஒரு வெட்கம்? அது என்ன பிராத்தல் கம்பனியா?//

சூப்பரோ சூப்பர்...