Total Pageviews

Wednesday, 20 April 2011

கொக்கரக்கோ.......... கொடுத்த காசுக்கு மேல கூவுறார்யா......................

கொக்கரக்கோ என்னும் பதிவர் கூவுவது திமுகவுக்கு எதிராக கொடுத்த காசுக்கு மேல இருக்கு. இன்றைக்கு எழுதின பதிவிலே ஒரு பின்னூட்டத்தில்  .........................\\\வாருங்கள் யோகன் பாரிஸ். இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மதங்கள், இனங்கள், ஆயிரக்கணக்கான சாதிகள், கோடிக்கணக்கான பாமர மக்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் ஜனநாயக ரீதியில் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, இதைவிடச் சிறப்பாக நாம் எதையும் எதிர்பார்த்துவிட முடியாது.\\\\

\\\ஏதேனும் முன்னேற்றம் இந்த நிகழ்வுகளில் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால், படித்தவர்களும், அறிவுஜீவிகளும் முழு அளவில் கீழிறங்கி வாக்களிக்க முன் வர வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக சென்னையில் மற்ற பகுதிகளைவிட 12 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்களிக்கப் பட்டுள்ளது. பிறகு எப்படி மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?\\\\
*************************************
அய்யா கொக்கரக்கோ!  நீங்க எதை வச்சு படித்தவர் பாமரர் என்ற அளவு கோலை கையில் எடுத்தீர்கள் என தெரியவில்லை. அதாவது நகரத்தில் இருப்பவன் படிச்சவன். கிராமத்தில் இருப்பவன்  தற்குறி. அப்படித்தானே? ஆக இன்றைக்கு பி எஸ் எல் வி விட்ட அண்ணாசாமி மயில்வாகணன் கிராம பள்ளி தானே? மன்னிக்கவும் அப்துல்கலாமை சொல்ல மாட்டேன். அதிஷ்டமும் வாப்பும் கூடிய மனிதர் என்கிற ரீதியில் அவரை வேண்டுமானால் முதலிடத்தில்சொல்லலாம்) மன்னிக்கவும் கிராமத்தில் இருப்பவன் எல்லாரும் தற்குறி இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். ஐன்ஸ்டீன் விதி அவனுக்கு தெரியாது. ஆனால்  அவனுக்கு உங்க ஆயுளை நிர்ணயிக்கும் விதி புரியும். நாம கடினமா உழைச்சா தான் அவன் சாப்பிட முடியும். அத்தனை ஏன்? நாம கடினமா உழைச்சா தான் அரசாங்கமே ஒரு ரூவாய்க்கு அரிசி போட முடியும் என அவனுக்கு தெரியும். உழைச்ச காசை கோவணத்தில் முடிந்து கொண்டு போக தெரியும். உங்களைப்போல  ஏடிஎம்ல காசை வச்சுகிட்டு ஐடி பசங்க மாதிரி ஆட்டோகாரனிடம் கொடுக்க தெரியாத அவன் முட்டா பயலா? அல்லது " if arunpandiyan is standing in my tohithi i will vote for him"   என அறைகுறை ஆங்கிலம் பேசும் சென்னைவாசிகள்  போல முட்டாளா அவன்?

உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? கேரளாவில் 100 சதம் படித்தவர்களாம். ஆனால் தமிழ்நாட்டில் 75 சதம் தானாம். அடப்பாவிகளா? உங்களுக்கு படித்தவன் கணக்கை எப்படி எடுக்கிறான் என தெரியுமா? அதாவது இந்தியா முழுமைக்கும் பத்து வருட காலம் படித்தால் கண்டிப்பாக அவன் அவன்  தாய் மெழியாவது கற்று தொலைந்து இருப்பான் என நினைத்த இந்திய அரசாங்கம் அதையே பின்பற்றியது. இதை எல்லா மாநிலமும் சரியாக புரிந்து கொள்ளாமல் பத்தாவது படிச்சா தான் புத்திசாலி படிச்சவன் என்கிற ரீதியில் செயல்படுத்தியது.

அங்க தான் இருக்கான் மலையாளி. பத்தாவது வரை பாஸ் தான். நீ என்னா எழுதினாலும் பாஸ் தான். அதை தான் மயிராண்டி எம்ஜிஆரும் பின்னர் செஞ்சான். 3 ம்பு வரை பாஸ். பின்ன இப்ப இருக்கும் மயிராண்டியும் போட்டி போட வேண்டி 8ம்பு வரை பாஸ். அட பாவிங்களா? இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை 500 ஆச்சு. அதே சதவீதப்படி கேரளாவில் எத்தனை இருக்க வேண்டும்? 62 இருக்க வேண்டும் அல்லவா? எத்தனை இருக்கின்றது? மெடிக்கல் காலேஜ் எத்தனை இருக்கின்றது. கலை அறிவியல் கல்லூரி எத்தனை? நர்சிங் கல்லூரி மாத்திரம் அதிகம். கேட்டரிங் காலேஜ் மாத்திரம் அதிகம். இப்ப சொல்லுங்கடா? அவனுங்க டீ கடை வைக்க மாத்திரமே லாயக்கு. இல்லாட்டி.... போங்கய்யா ....   இப்ப சொல்லுங்க...

அங்க கேரளாவிலே தற்குறி எல்லாம் படிச்சவன் லிஸ்டுல வர்ரான். ஆனா இங்க படிச்சவன் எல்லாம் தற்குறியா இருக்கான். இங்க இணையத்துல இருக்கும் எத்தனை ஐடி மகான்கள் வந்து ஓட்டு போட்டான்னு சொல்லுங்க பார்ப்போம்? மச்சினிச்சி கல்யாணத்துக்கு லீவ் எடுத்துட்டு வரும் எத்தனை பேர்  லீவ் எடுத்துட்டு ஓட்டு போட  வர்ரானுங்க சொல்லுங்க? எவன் தற்குறி? ஆனா கிராமத்தான் அப்படி இல்லை. அறுவடையை விட்டுட்டு வந்து ஓட்டு போடுவான். ஆனா சென்னையிலே இருக்கும் எத்தனை பேரு "எங்க அபார்ட்மெண்டிலே காசு வரலை"ன்னு ஓட்டு போட வராம இருந்தானுங்கன்னு தினமலர், தினமணி படிங்க கொக்கரக்கோ சார் புரியும்.

அத்தனை ஏன் உண்மை தமிழனும், ஆர் கே சதீஷ்குமாரும், கே ஆர் பி செந்திலும் கூட படிச்சவங்க தானே?சென்னையிலே தான இருக்காங்க? உங்க கருத்தை தயவு செய்து மாத்திகுங்க  கொக்கரக்கோ!

2 comments:

Anonymous said...

ஆர்.கே.சதீஷ் மாதிரி மடச்சாம்பிராணியை வச்சி எல்லாம் ஏன்யா பதிவு எழுதற?

VJR said...

உண்மைத்தமிழன்னு பேர்வெக்க எதாவதும் கண்டிஷன்ஸ் வைங்கப்பா, தாங்க முடியல.