நான் ஒன்றும் திமுகவை காக்க வந்த தேவதூதன் இல்லை. நான் வந்து தான் திமுக காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் திமுக இல்லை. ஆனாலும் திமுகவை சாடுபவர்களை நான் சாடுகிறேன். கேட்டால் தனிமனித தாக்குதல் என்கிறீர்கள். நான் கூகிள் பஸ்ஸில் இதுவரை வெளியிட்டது ஒரே ஒரு பஸ் மட்டுமே. ஆனால் பல பஸ்கள் பார்க்கும் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்து வருகின்றது. மூன்று நாட்களுக்கு முன்னர் அண்ணன் குழலி என்கிற தீவிர திமுக எதிர்ப்பாளர் ஒரு buzz ல் "விருச்சிககாந்த்" என்னும் அனானிக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம்" என்கிற ரீதியில் எழுத அதில் மேலும் எனக்கு என்னவோ அகில உலகில் இருக்கும் அத்தனை திமுக பதிவர்களும் ஆதரவு கரம் நீட்டுவதாகவும் அதற்காக அவர்களுக்கும் சேர்த்து ஒரு ஒப்பாரி வைத்திருந்தார். நான் அங்கு சென்று என் தரப்பு வாதங்களை ஒரு ஆறு பின்னூட்டமாக போட்டிருந்தேன். ஆனால் அதில் மூன்று மட்டும் பிரசுரம் ஆனது. மீதி பின்னூட்டங்கள் அண்ணன் குழலி அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.
எனக்கு மனதில் பட்டதை எழுதுகின்றேன். எனக்கு எந்த திமுக பதிவர்களும் ஆதரவு கொடுப்பது இல்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் நிரந்தரமாக இருந்து கொண்டு இருப்பேனே. அதிலிருந்தே தெரியவில்லையா? அது போகட்டும். உடனே அண்ணன் உண்மைதமிழன் அந்த பஸ்ஸில் வந்து "நான் திருவாளர் விருச்சிககாந்தை என் பஸ்ஸில் தடை செய்து விட்டேன். அவர் எழுதுவது என் பார்வைக்கு வராது. தொடர்சியாக எல்லோரும் அதே போல செய்தால் அவர் எழுதாமல் ரஜினி போல இமயமலைக்கு போய்விடுவார்" என சொல்ல உடனே குழலி, அத்திவெட்டி ஜோதிபாரதி, பின்னர் அரசியல் பதிவுகள் எழுதும் மா.சிவகுமார் ஆகியோர் என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்வதாக அறிவிப்பு செய்து விட்டனர். எனக்கு சர்வமும் அடங்கி போய்விட்டது. இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். அய்யகோ... இந்த வலைப்பூவை வைத்து தான் நான் மூன்று வேளை உணவும், இருக்க இருப்பிடமும், கட்டிக்கொள்ள வேட்டியும் பெற்று வருகின்றேன். இதை கேட்க நாதி இல்லையா இந்த வலையுலகில்.
என்னை அவர்கள் தடை செய்தமைக்கு கூறிய காரணங்கள் மிகவும் அருமை, அதாவது நான் தனிமனித தாக்குதல் நடத்துகின்றேனாம். சரி இருக்கட்டும். நான் ஆர் கே சதீஷ்குமார் என்னும் பதிவரை கூட அரசியல் கருத்துகளோடு மட்டுமே தம்பி என்றே விளித்து கட்டுரை எழுத தொடங்கினேன். ஆனால் அவர் என் குடும்பத்தை விமர்சித்து எனக்கு மெயில் அனுப்பினார். பின்னர் இருவரும் தனி மெயிலில் திட்டிக்கொண்ட சம்பவம் நடந்தது. பின்னர் தான் நான் தம்பி என அழைப்பதை விடுத்தேன். அதே போல உண்மை தமிழனை அண்ணன் என்றே அழைத்து அவர் கருத்துகளை எதிர்த்தேன். ஆனால் நான் எப்போதும் எந்த பதிவரின் குடும்பத்தை இழுத்தது கண்டிப்பாக கிடையவே கிடையாது. ஆனால் அதே நேரம் அந்த பதிவர்கள் தனிமனித தாக்குதல் செய்யாதவர்கள் மிகவும் நாகரீகமாக எழுதுபவர்கள் என உங்கள் நெஞ்சில் வை வைத்து சொல்லுங்கள் பார்ப்போம்.
இதே உண்மைதமிழன் அண்ணன் அவர்கள் என் கட்சி தலைவர் கலைஞரை சாக வேண்டும் என சொன்ன போது அது தனிமனித தாக்குதல் இல்லையா? இதே குழலி அண்ணன் கலைஞரை பேசாத பேச்சா? இதோ பாருங்கள்
. \\\\Purushothaman Ponusamy • Nov 16, 2010 • Buzz • Public
17,60,00,00,00,000
ரூபாய் மிச்சமாயிருக்கும். புரிகிறதா.. ஆம் ஆண்டிமுத்து, ஆ.ராசாவின் தந்தை. 1962ம் ஆண்டு, அவர் இரவுக் காட்சிக்கு போயிருந்தால், இந்தியா இந்த வரலாறு காணாத ஊழலை சந்தித்திருக்காது.
--- சவுக்கு பாணி சரவெடி, உடன்பிறப்புகள் படித்தால் ஹை பிபி உறுதி :-)
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்….
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
இப்படி ஒரு பஸ். அதை லைக் செய்திருப்பது யார் யார்? இதோ என்னை பஸ்ஸில் தடை செய்ய சொன்ன அண்ணன் உண்மைதமிழன், அதை ஒப்புக்கொண்டு தடை செய்த அத்திவெட்டிஜோதிபாரதி, ... என்ன ஒரு வக்கிரம் பாருங்கள். ஆண்டிமுத்து அவர்கள் 1962 ல் இரவு காட்சிக்கு போயிருந்தால் என சொல்வது தனிமனித தாக்குதல் இல்லையா? அதற்கும் மேலாக ஒரு படி மேலாக " முத்துவேலர் இரவு காட்சிக்கு போயிருந்தால்" என அடுத்தது சொல்கிறார் குழலி அண்ணன். பின்னர் "அந்த கொடுப்பினை தமிழகத்துக்கு இல்லாமல் போய்விட்டது" என்றும் சொல்கிறார். இதே பஸ்ஸில் அண்ணன் அபிஅப்பா வந்து "நீங்க ஒன்னும் சிங்கை பிரஜை இல்லையே. இந்தியன் தானே, தமிழ்நாட்டு தமிழன் தானே. தமிழக முதல்வர் இந்திய அமைச்சர் அப்பனை கண்டமேனிக்கு திட்டுவது தான் உங்களுக்கு நகைச்சுவையா போயிடுச்சா. சரி நீங்க ஓட்டு போடலைய்யா. சரி இந்த ஜனநாயக ஆட்சியிலே அவங்க மெஜாரிட்டில தான வந்திருக்காங்க. அவங்களை விமர்சிப்பப்ப எதும் சொல்லலையே. அவங்க அப்பா அம்மாவை விமர்சிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு? மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனம். இதை நகைச்சுவைன்னு வேற சப்ப கட்டு அசிங்கமா இருக்கு குழலி!" என சொல்கிறார். பின்னர் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்கள் "அமைச்சர் தவறு இழைத்தாகவே இருக்கட்டும். அதற்காக அவர் தந்தையின் இல்வாழ்வு உறவை கொச்சைப்படுத்தி அதில் மகிழ்வதும்,.இரசிப்பதும்..??? நாம் மனிதர்கள்.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை :((" இப்படி சொல்கின்றார். என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த கோவிகண்ணன் சொல்கிறார் அங்கே " தலைப்பு சூப்பர்". என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த மற்றும் ஒரு பதிவர் மா. சிவக்குமார் " தலைப்பு in bad taste :-( '' என்று சொல்லிவிட்டு போகின்றார். அங்கே குழலி அண்ணன் பஸ்ஸில் தலைப்பு பேட் டேஸ்ட் என்று சொன்ன மா.சிவகுமார் நான் தனிமனித தாக்குதல் நடத்துகிறேன் என சொல்லி தடை கோரும் தீர்மானம் எழுதிய உண்மை தமிழன் தமிழக முதல்வரை சாக சொல்லி தனிமனித தாக்குதல் செய்த போது அவரை தடை விதிக்க சொல்லவில்லை, அதே பதிவில் எனக்கு எதிராக பேசிய கபீஷ் அம்மையார் இப்போது குழலியின் இந்த தனிமனித தாக்குதலுக்காக குழலி அண்ணனை பஸ்ஸில் இருந்து தடை செய்வாரா?
இதே குழலி அண்ணன் மார்ச் 31ம் தேதி ஒரு பஸ் விடுகின்றார். அதிலே \\\\\\\சிங்கமுத்து on the march...வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)\\\\ இது தனிமனித தாக்குதல் இல்லையா?
இதே குழலி அண்ணன் டிசம்பர் 8, 2010ல் ஒரு பஸ். அதிலே
\\இன்றைய அரசியல் ஜோக்
தலைவரின் அல்லக்கை: தலைவரே உங்களுக்கு "போபால புரம் வீடு" மட்டும் தான் சொந்தம்னு நீங்க சொத்துகணக்கு காண்பிக்கும்போது சொன்னது தப்பா போயிருச்சி..
தலைவர் : ஏன்யா என்ன ஆச்சி?
தலைவரின் அல்லக்கை: எவனோ "பிஐடி காலணி" வீட்ல பூந்துட்டானாம் தலைவரே\\
இந்த பஸ் யாரால் எல்லாம் லைக் செய்ய படுகின்றது என பாருங்க. அதே உண்மைதமிழன், அதே அத்திவெட்டிஜோதிபாரதி. இவர்கள் எல்லாம் முழங்குகின்றனர் "விருச்சிககாந்து என்னும் பதிவர் தனிமனித தாக்குதல் நடத்துகின்றார். அவரை தடை செய்வோம்" என !
இந்த பதிவை படிக்கும் நடுநிலைவாதிகளே! நீங்கள் முடிவெடுங்கள். யார் தடை செய்யப்பட வேண்டிய நபர் என்று. உண்மை தமிழன், குழலி கோஷ்டிகளா? அல்லது நானா?
இதோ பாருங்கள்! எனக்கு திமுகவை பிடிக்கும். திமுகவை மட்டுமே பிடிக்கும். திமுகவை வசைபாடினால் பதிலுக்கு லாவணி பாடுவேன். இப்போதும் எப்போதும் சொல்கிறேன். எனக்கு தனிப்பட்ட விரோதி என யாரும் இல்லை. என்னை பார்த்து நான் சகபதிவர்களை வசைபாடுவதாக குற்றம் சுமத்தும் முன்பாக நீங்கள் "தமிழக முதல்வரையே தனிப்பட்ட முறையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி அவர் மனைவியை பற்றி, அவரது மகள் பற்றி அவரது தாயார் தந்தையார் பற்றி கேவலமாக பேசுகின்றீகளே, அது எல்லாம் தனிமனித தாக்குதல் இல்லையா? நான் எப்போதாவது நான் எதிர்க்கும் பதிவர்களின் குடும்பத்தை எதுவும் சொன்னது உண்டா என நினைத்துப்பார்க்கவும்.
இனி இது போல தனிப்பட்ட முறை விளக்கங்கள் என்னிடம் இருந்து வராது. என் கட்சிப்பணி மட்டுமே செய்வேன். மே 13ம் தேதி வெற்றிப்பதிவு இடுகின்றேன். வாருங்கள்!